உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் கொடியே இன்னும் அறுபடவில்லை அறுபடவில்லை அந்த இறைவனின் தொப்புள் புள்ளியில்.
சொற்கீரன் கண்பொரி கவலைய வெஞ்சுர நீளிடை நில்லா செலவின் நீடுபயில் ஆறு கடந்து உழலும் கதழ்பரி செல்வ! கூர் உளி குயின்ற பலகை நெடுங்கல் வரி ஊர்பு நவின்ற வன்படு செருவின் குருதி கொடிய நெளிகால் ஓடி காட்சிகள் காட்டும் முரசுகள் முரலும். இறந்தவை இறந்தபோல் நடந்தவை நடந்தபோல் நளி இரு துன்வெளி அழல் ஊழ்க்காற்றின் இடைபோழ்ந்து இயலிய காட்டும் ஆங்கண். மள்ளற் களியர் மணிநிறக் காட்டில் மரைகொல் அம்பின் வெறிஅயர் கூட்டும். ஆறுபடுவோர் உயிரும் பறிக்கும் […]
ருத்ரா வாழ்வது போல் அல்லது வாழ்ந்தது போல் ஒன்றை வாழ்ந்து விட்டோம். மீதி? முழுவதுமே மீதி. தொடங்கவே இல்லை. மூளைச்செதில்களில் மட்டும் காலப்பரிமாணத்தின் வேகம் கூட்டி… வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை சூப்பர் லுமினஸ்… ஒளியை விட கோடி மடங்கு கூட இருக்கலாம். இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய இன்னொரு அடுக்கில் நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய். இன்னும் சில பத்து ஆண்டுகளில் புதிதாக பிரபஞ்சப்பூக்களை உன் கோட் பித்தான் துளைகளில் கூட பதியம் […]
ருத்ரா. இருட்டையும் கூடஇலக்கியம் ஆக்கி விடமுடியுமா?அப்படித்தான்அந்த ரெண்டா கால் நிமிடதுண்டுப்படம் பார்த்தேன்.ஆனால்இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்இருட்டைப்பூசிக்கொண்டுஒலி இசை அதிர்ந்தது.பிறகுபுள்ளி பூஜ்யம் பூஜ்யம்..செகண்டுக்குஒரு ஒளிக்கீற்று.அவ்வளவு தான்படம் முடிந்துவரிசை வரிசையாய்எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தனஐந்தாறு நிமிடங்களாய்.அது என்ன தலைப்பு…மறந்து விட்டதே…மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்.“தேடு”எதை என்று தான் போடவில்லை.இருட்டையா?வெளிச்சத்தையா?ஒரு ஆழமான ஆழமாகியஎனக்குள்அந்த நங்கூரத்தைவீசி எறிந்தார்களே!அது ஒருபில்லியன் டாலர் இலக்கியம் தான்.
சொற்கீரன் வெண்குடைத் திங்கள் பசலை பூத்து பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில் வட்டில் சோறு பாலொடு வழிய விரல் அளைக்கோடுகள் வரிய வரிய சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும் மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து கசிநீர் விசும்பில் கனவின் எரிந்தாள். கடையல குரலம் கழையூடு கஞல அடர்வெங்கானம் நடைபயில் உழுவை பைந்நிணம் கிழிக்க பாய்தந்தன்ன பிரிதுயர் பிய்த்த உயிர்நைந்தாள் என்னே. யா மரத்துச் சாமரத்தன்ன அணிநிரல் பூக்களின் படுநிழல் ஆங்கு வேழம் கிடந்த உருசெத்து […]
ருத்ரா பழைய நாட்களை சுமந்து திரிபவன்எனும் பிணம் தூக்கியா நீ?வரும் நாட்களை வருடும் பீலிகளாய்அதன் அழகை உச்சிமோந்துபார்ப்பவனா நீ?எப்படியானாலும் அதுவாழ்க்கை தான்.அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.அதன் முகமோ முழுநிலவாகவேஎப்போதும் உனக்குபால் வார்க்கிறது வெளிச்சத்தில்.வாழ்க்கைப் புத்தகம்புத்தக திருவிழாக்களில்அகப்படுவது இல்லை.மகிழ்ச்சியும் துயரமுமேஅச்சுக்கூடங்கள்.அந்த புத்தகத்தைபுரட்டிக்கொண்டிருக்கத்தான்உன்னால் முடியும்.எழுத்துக்கூட்டி வாசித்துப்பார்.உயிர் எழுத்துக்கு மெய் எழுத்துஒட்ட வருவதில்லை.உயிர் மெய் எழுத்துக்கூட்டங்களும்கூடவெறும் உணர்ச்சிகளின்கூட்டாஞ்சோறு மட்டுமே.பசியும் சோறும்பந்திவிரிக்கும் நாட்களில்உன் புத்தகம் காற்றில்படபடக்கிறதுவெற்றுப்பக்கங்களாய்!
சொற்கீரன். கடறு கடாஅத்த முள்ளிய ஆறும் விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும் விளரி நரம்பின் விண்தொடு பாலையும் எவன் இங்கு தடுக்குன ஆகும்? அந்தொடை யாழின் அணிநிரைக் கலித்த அவள் இவணம் அவிழ்தரு நறு நகை ஐது ஆறு கனைகுரல் கதுப்பொடு அண்ணி வெள் நள்ளருவி அன்ன ஆங்கு வீழ்த்தும் வேங்கை நடுங்கிணர் ஒள்வீ செறிக்கும் வாங்கமை இன் துளை வண்டின் இன்னிசை அளபெடை யெடுத்து அகவல் நிரவும். இறைகொடு மூடும் மின்முகம் ஒளிர்ப்ப அவள் நெட்டுயிர் […]
ருத்ரா யாரோ ஒருவர்அந்த செயற்கை மூளைப்பெட்டியைவைத்துக்கொண்டுவிளையாட விரும்பினார்.தான் வந்திருந்த விமானம்ஏன் இத்தனை தாமதம்என்று“ஏ ஐ பாட்”ல்வினா எழுப்பச்சொன்னார்.அதுவும்நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்கார சாரமாய் வினா தொடுத்தது.சென்ற வேகத்திலேயேவிடையும் வந்ததுஅதையும் விட நறுக் நறுக் என்றுஊசி குத்திய ஆங்கிலத்தில்.அனுப்பியதுவிமானக்கம்பெனியின்செயற்கை மூளைப்பெட்டி.கணிப்பொறிகள்வாளேந்த துவங்கிவிட்டன.என்றைக்குஉலகம் ஒருமெகா மெகாஹிரோஷிமா நாகசாகியாய்கரிப்பிடித்துகாணாமல் போய்விடுமோ? ஓட்டு கணிப்பொறி பட்டன் தட்டுவது போல் அணுகுண்டின் பட்டனும் தட்டப்படலாம் ஒரு நாள். ஜனநாயகத்தைக்காட்டி மடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சர்வாதிகாரம் சந்திக்கு வந்து விடலாம். யாருக்குத் தெரியும்? மனிதாஉன் மூளைக்கும் […]
சொற்கீரன் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை கண்டல் அல்லது யாது உற்றனள். கூன்முள் முள்கு குவித்தலைப் பெருமீன் குய்தர பொங்கும் நுரைகடல் சேர்ப்ப! திரை திரை பாய்ந்து துறை துறை ஊர்ந்து ஞாலத்து உப்பக்கம் நெடுங்கரை சேர்ந்து கனைபடு பல் ஒலி பல் தேஅத்தும் ஊடி மறைபடு மொழிகள் பல ஈண்டு கொணர்ந்து செறிதமிழ் அடர்த்தி செந்தமிழ் ஈன்று […]
சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் கொடும் பாழாறும் இறந்து நீண்டார் நீளிடை நில்லார் நின் முறுவல் ஒன்றே மின்னல் காட்டும். விலங்கிய குன்றின் சிமையமும் தாண்டி பன்மொழி தேஅத்து பகைப்புலம் அறுத்து பொருள் குவை பலவும் கையொடு ஆர்த்து மீள்வரும் ஆற்றின் முள்ளிய முழையில் வரியொடு சினத்த வாலெறி விழியின் பொறிகிளர் வேங்கை பாய்தலும் உவக்க கூர்வேல் கையன் அகலம் […]