மதுரையே இங்கு கல்லாய் விறைத்து உயரமாய் படுத்திருப்பதை பார்க்க கோள்ளை அழகு. அந்த மத்தகம் பரந்த ஒலிம்பிக் மைதானமாய் கம்பீரமாய் காட்சி தரும். வெள்ளை வெயில் தினமும் குளிப்பாட்டும் சுகத்தில் அந்த கருங்கல் கூட கருப்பு வெல்வட் சதைச்சுருக்கமாய் தும்பிக்கை நீட்டிக்கிடக்கும். சென்னை போகும் பேருந்துகள் அதை உரசி உரசி செல்லும்போது அந்த கிச்சு கிச்சு மூட்டலில் பொசுக்கென்று அது எழுந்துவிடுமோ என்றும் ஒரு பயம் வருவதுண்டு. இந்த ஆண்யானைக்கு திருப்பரங்குன்றம் மொக்கைக்கல் மலை ஒரு பெண்யானையாய் […]
இறக்கை முளைத்த குண்டூசிகள் எனும் கொசுக்களின் ஊசிகள் அல்ல இவை. நமக்கு நாமே மருத்துவம் செய்து கொள்ள போட்டுக்கொள்ளும் ஊசிகளே இந்தக்காட்டின் பூக்கள். சங்கரன் கோயில் ================== தபசுக் காட்சி சப்பரங்கள் திரும்பிவிட்டன. சரித்திரங்கள் திரும்பவில்லை. அம்மா ====== சொல்லி அடித்து கில்லி ஆடினாலும் வில்லி இல்லை என்று சொல்லி விட்டார்கள். அலாவுதீன் பூதம் பெட்டியில் இருக்கிறது. கலைஞர் ======== சங்கத்தமிழ் எட்டுத்தொகை யெல்லாம் துட்டுத்தொகையாய் தொண்டர்களுக்கு தெரிகிறது. “கணவாய்”வரலாறுகள் கவைக்கு உதவாது. அதனால் வந்த “சங்கடங்”கோயில் […]
“எல ஒரு சாமிய கும்பிட்டா கும்பிட்ட மாரியா இருக்கும்?….இப்டி பூடம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்கணும்.” “யோக்யங்கணக்கா பேசாதலெ பொறந்தாக்ல அந்தகுறிய கூட பாக்காம எனத்தான் சனத்தான்னு குறி பாத்து தஸ்தாவேஜி போடுதாம்லா அதப்பாருலெ” “அதுக்கு நாம என்னெழவ்லே செய்யது. கவர்மெண்டே குத்ர பச்சடே இது. எத்தன பயலுவ அப்டி எத்தன பயலுவ இப்டி எலே நாளக்கி ஓட்டு வேணும்லாலே துட்டு எடுக்கணும்னா ஓட்டு வேணும்லே ஓட்டு வேணும்னா சாதி வேணும்லே.” “அவ்வொ வந்தாவ இவ்வோ வந்தாவ எல […]
ஆத்மாநாம் =========== சுஜாதாவுக்குள் சூல் கொண்ட மேகம் இந்தக் கவிதை. மௌனி ======= ஞான இரைச்சல்களை தின்று விழுங்கியவர். பேயோன் ======== “பின் நவீனத்துவத்துக்கும்” பேன் பார்த்தவர். கி.ராஜேந்திரன் ============= கல்கி வைக்காமல் போன முற்றுப்புள்ளிகளால் கல்கியை நிரப்பியவர் ஜெகசிற்பியன் ============= உணர்ச்சியின் விளிம்புகளை ஊசிமுனையாக்கி..அதில் உலகத்தை நிறுத்தி வைப்பவர். அநுத்தமா ========= ஈயச்சொம்பில் ரசம் வைத்துக்கொண்டே மனித ரசாபாசங்களை தாளித்துக் கொட்டுபவர். அரு.ராமநாதன் =============== கட்டில் மெத்தை எழுத்துக்கள் ஆனால் தூங்குவதற்காக அல்ல. நாஞ்சில் பி.டி […]
சு.சமுத்திரம் =========== எழுத்து நிறைய கடல் உண்டு. ஒரு துடுப்பு தேடும் துடிப்பு உண்டு. பி.எஸ் ராமையா ================ மணிக்கொடியை கொடி அசைத்து ஓட்டியவர் இவரே. சாவி ==== மாற்றிப்படியுங்கள். அமெரிக்காவுக்கு “விசா” இவரது “வாஷிங்க்டனில் திருமணம்” மணியன் ======== ஆனந்த விகடனில் அங்குலம் அங்குலமாய் ஊர்ந்த எறும்பு. ஸ்டெல்லா புரூஸ் ================= காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் நாவல்களில் காதலுக்கு துடிப்புமிக்க கண்கள் தந்தவர். டாக்டர் லட்சுமி ============== பெண்கள் என்றாலே குத்துவிளக்கு தான் என்று […]
உ.வே.சா. ========== இவருக்கு நாலு வேதங்களும் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் தான். கி.வா.ஜ ======== செந்தமிழும் “பன்”தமிழும் இவருக்கு நாப்பழக்கம். திரு.வி.க ========== தமிழின் “ஓங்கு வெள்ளருவி” ஓட வைத்தது “கல்கி”எனும் தேனாறு. வ.உ.சி ======= சுதந்திரம் எனும் கனல் எழுத்து நடுவேயும் “தொல்காப்பியம்” தந்தவர். பரிதிமாற்கலைஞர் ================= நரியை பரியாக்கினர். பரியை நரியாக்கினர்…இவர் தான் தமிழை “பரிதி” ஆக்கினார். மகாகவி பாரதி ============= தமிழ் நாட்டின் இமய மலையும் இவன் தான். எரிமலையும் இவன் தான். […]
அதோ ஒரு புயல் மையம் கருக்கொண்டு விட்டது. தினசரி காலண்டர் தாள்களின் இந்த இலையுதிர் காலத்தின் நடுவே பெப்ரவரி பதினாலாம் தேதி….. பொன் வசந்தம். மலர் மழை. தேன் மின்னல். குமுழிக்கோட்டம். நுரைவனங்கள். பனிச்சொற்கள். வண்ணாத்திப்பூச்சி சிறகுகளுக்குள் வாழ்க்கைப்பாடங்கள். முள் மீது கழுவேறும் ரோஜாக்கள். இதயத்தை இன்னொரு இதயம் கத்தியாகி கசாப்பு செய்தல். ஜிகினா தடவிக்கொண்டு பொன் எழுத்துக்களை கூரிய பற்களாக்கி உயிரை உறிஞ்சும் வேலன்டைன் அட்டைகள். அந்த பெப்ரவரி இனிமேல் கொலவெரி. மாதங்களை திருத்துங்கள். கிடார் […]
பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய் இந்த வரம் வாங்கி வந்தேன். “கூடு விட்டு கூடு பாய்ந்து” மெஹந்தி பிழியும் இந்த கூம்புக்குள் கண் கூம்பி தவம் இருந்தேன். இந்த “பியூட்டி பார்லருக்குள்” அவள் இன்று இதே நேரம் வருவாள் என்று எனக்குத்தெரியும். அப்படித்தான் அவள் தோழியிடம் பெசிக்கொண்டாள். அதோ சல்வார் கம்மீஸ்களின் சரசரப்புகள் ஒலிக்கிறதே. கண்கள் மூடி காத்திருந்தேன். கனவு விரித்து கூம்புக்குள் சுருண்டு கிடந்தேன். இன்னும் சற்று நேரத்தில் அவள் பொன் காந்தள் விரல்களில் மின்னல் பூங்கொடிகளாய் […]
(அதில் அசைபோட்டதே இந்த எழுத்தாளர்களின் ஊர்வலம் எழுத்”தாளர்”கள் =============== எழுத்துகளை ஆளுபவர்கள் இன்று தாள்களில் தாழ்ந்து போனார்கள் விருது விழா ============= விருதும் கூட ரஜனிக்கு விசில் அடித்தது. விருது விழா ============ விருதும் கூட ரஜனிக்கு விசில் அடித்தது. எஸ்.ரா ======= நவீனத்துவம் பின் நவீனத்துவம் மனக்குகையில் மத்தாப்பு கொளுத்தல் இவரது கட்டுரையே கதை. ஞாநி ==== காரம் வேண்டும் என்பதற்காக எழுத்துக்களில்.. மிளகாய்ப்பொடி..மூக்குப்பொடி..கடுக்காய் தூள் இன்னும் என்னென்னவோ. சாருநிவேதிதா ============= திகில் எழுத்துகளில் திமிங்கிலவேட்டை. […]
ஆடுகளத்தில் தனுஷ் பாடும் பாட்டு …………. ………. … சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் குறுந்தொதொகையில் “கல் பொரு சிறுநுரையார்” கவிதை எழுதிய போது.. “அணிலாடு முன்றிலார்” எழுத்துக்கள் எனும் மயிலிறகினால் மனம் வருடியபோது…. திடீரென்று அந்த எழுத்தாணி அதே சில பல ஆயிரம் ஆண்டுகளை விழுங்கியபின் கோடம்பாக்கத்தில் “கொல வெறியார்” ஆகி பாடல் எழுதினால்…………. சிநேகனுக்குள்ளிருந்து எத்தனை எத்தனை தனுஷ்கள் கருவுயிர்த்தனர்? இதோ கேளுங்கள்…… கீது கீது பேஜாரா கீதும்மே ! கசாப்புக்காரன் […]