அணு உலை வேண்டாம் என்று ஆரவாரம் செய்வோரே! ஆட்டு மந்தைகள் கூட செவி அசைக்கும் அங்கு ஏதோ நடக்குதென்று! கொம்பை ஆட்டி ஆட்டி கேள்விகள் கேட்கும்! புதிய அறிவின் தீனி தேடும் தீயின் தெறிப்பு அதன் கண்களில் தெரியும். உங்கள் நுண் மாண் நுழைபுலம் எங்கே போனது? மண் மாண் புனைந்த பாவைகளா நீங்கள்? அரக்கர்கள் அமைத்த அரக்கு மாளிகையா அணு உலைக்கூடம்? அணுவை பிளக்கும் அழகிய கற்பனை அவ்வை பிராட்டி அன்றே சொன்னார்! “அணுவைத்துளைத்தேழ் கடலை […]
யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY) ==================================================== இ.பரமசிவன் குவாண்டம் மெகானிக்ஸ் 20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நுட்பம் செறிந்த கோட்பாடு. இயற்பியல் வல்லுனர்களுக்கு ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த “பொது சார்பு”க்கோட்பாடு கணித சமன்பாடுகளின் அழகு மிக்க பூங்காவாக எப்படித் தோன்றுகிறதோ அது போலவே குவாண்டம் மெகானிக்ஸின் நிரலியல் கணிதங்களின் (Matrices) புதிய புதிய வடிவங்கள் அவர்களை மெய்சிலிர்க்கச்செய்கின்றன. அடிப்படை ஆற்றல்களான மின்காந்த , வலுவற்ற,வலுமிகுந்த(அணு ஆற்றல்)மற்றும் ஈர்ப்பு ஆகிய நான்கிலும் குவாண்டம் […]
வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு. (ALAN GUTH’S INFLATION THEORY) இ.பரமசிவன் இந்த பிரபஞ்சம் முட்டை வடிவமா?இல்லை தட்டை வடிவமா? இது பட்டிமன்றத்துக்காரர்களுக்கு பிடிக்குமா? இல்லையா?என்பது வேறு விஷயம்.ஏனெனில் அவர்களது வட்டம் எல்லாம் கணவனா? மனைவியா? குடும்பத்தின் அச்சாணி யார்?என்பது போன்ற “லக லக லக” அல்லது “கல கல கல”என்று சிரிப்பு அலைகளை வருவிக்க தேங்கிக்கிடக்கும் சாதாரண பிரச்னைகளின் குட்டையை குழப்பும் சமாச்சாரம் தான். ஆனால் மேலே சொன்ன பிரபஞ்ச வடிவம் பற்றிய பட்டிமன்றம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே […]
வெளி நாட்டான் சமாச்சாரம் அநாச்சாரம் என்று உள் நாட்டு மாட்டு வண்டியையும் வில் அம்பு ஈட்டியையும் நம்பிக்கிடந்தோம். மின்சாரம் என்றால் பேய் பிசாசு என்று ஓடி ஒளிந்து கிடந்தோம். தண்ணீரை குடம் குடமாய் கொட்டி குடமுழுக்கு செய்து புரியாத இரைச்சல்களில் புல்லரித்துக்கிடந்தோம். அதே தண்ணீரில் புட்டு அவித்து தின்னும்போது கூட நமக்குதெரியவில்லை ஆயிரம் ஆயிரம் டன்களை இழுத்துச்செல்லும் நீராவிக்குதிரை அதில் இருக்கிறது என்று. அதற்கும் ஒரு ஜேம்ஸ்வாட் தான் நமக்குத்தேவை. கல்லுக்கடவுளுக்கு காலம் காலமாய் பொங்கல் புளியோதரை […]
நேஷனல் ஜேக்ரஃபி யின் 12 அக்டோபர் 2011 இதழில் ஜே.ரிச்சார்டு காட்ட் தன் கட்டுரையில் 2011ன் இயற்பியலுக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற இயற்பியல் சாரம் பற்றி குறிப்பிடுகிறார். இப்பரிசு ஆடம்ரீஸ் ,ப்ரியன் ஸ்மிட் மற்றும் சால் பெர்ல்முட்டர் ஆகிய விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.இவர்களும் விண்வெளி இயற்பியலில் நிபுணர்கள் தான்.சென்ற நூற்றாண்டுக்கோட்பாடான “பிரபஞ்ச விரிவு”தனை தம் விண்வெளி பயணத்தின் அடிப்படையில் கண்டறிந்து விவரித்தமைக்கு தான் இந்த நோபல் பரிசு.விண்வெளியில் இந்த “மூவர் உலா”பற்றி நம் ஒட்டக்கூத்தர் அறிந்திருந்தால் […]
அந்த நேற்றைய பவளமல்லிப்பூக்கள் வீட்டு வாசல் தரையில் சிவப்புக்கால்கள் கொண்டு நட்சத்திரக்கூட்டங்களாய் படுத்துக்கிடக்கின்றன. எந்த குருவாயூரப்பனையாவது நேற்று பூராவும் அப்பிக்கிடந்த பின் களைத்துக் கால் நீட்டிக்கிடக்கின்றன. வீட்டுக்குள்ளிருந்து அந்த பவளமல்லி மரம் தன் கிளையை கார்ப்பரேஷனுக்கு அறிவிக்காமல் விதி மீறி வெளியே நீட்டியிருந்தது. அது விரித்த பாய் அங்கு “வாசங்களின்”பிரவாகம். அந்த பவளப் பூ மழை பெய்த அந்த வாசலுக்கு இணையாய் எத்தனை வைகுண்டங்கள் வாசம் செய்தாலும் பெருமாளே வேண்டாம் என்று இங்கே வந்து பள்ளி கொண்டுவிட்டார். […]
எவரெஸ்ட் சிகரம் இவர் நடிப்பின் வியப்பில் வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டது. விருதுகளின் முகங்கள் அசடு வழிந்தன. இவருக்கு விருது தர என்ன இருக்கிறது இங்கு? ஆங்கிலப்படம் தழுவியபோதும் இந்திப்படமும் (“பார்”) வந்து விட்ட போதும் அமிதாப் அங்கு சிறப்பாக அசத்திய போதும் எல்லாருமே அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டார் விக்ரம். தலைப்பின் சலசலப்பு சந்திக்கு வரும் முன் பந்தி விரித்துவிட்டார்கள் தெய்வத்திருமகள் என்று! தெய்வத்திருமகனா? தெய்வத்திருமகளா? நடிப்பின் சுவையான பட்டிமன்றம் இது. மழலைக்குள் புகுந்து நம் கண்ணுக்குள் மழைபெய்ய வைத்து […]