ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன் அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே வந்து படுத்திருக்கும் அந்த மனிதன் யார்? ஆண்டவன் தவம் இன்னும் கலையவில்லை. ஆத்திகர்களின் கூச்சலால் ஆண்டவன் தவம் கலைத்தார். திருவாய் மலர்ந்தருளினார். மனிதா என்னைப் படைத்து விட்டு இன்னும் என்ன இங்கு வந்து கூச்சல் போடுகிறாய். உங்களை “என்ன சொல்லி அழைக்க?” “நீயே படைத்துவிட்டு நீயே கேட்கிறாய். மனிதா..மனிதா..என்று ஆயிரம் தடவை அழை” என்றான் […]
இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக ஒளிந்து கொண்டு தானே அம்பு எய்தி தர்மம் நிலை நாட்டுவாய். குறி பார்க்க உனக்கு கூச்சம். தர்மத்தையும் தர்மமாகத்தானே “ஸ்தாபனம்”செய்ய வேண்டும் என்று இவர்கள் சுலோகங்களை குவித்து வைத்திருக்கிறார்களே ! உன் பக்தர்கள் எனும் இடிராமர்கள் அந்த கல்லறைக்கோவிலை இடித்தது தவறு என்று தராசுத்தட்டுகள் தடுமாறி தடுமாறிச் சொன்னது உனக்கு உறுத்தலை தந்திருக்குமே ! அதற்கும் மேல் அமங்கலமாய் அந்த “சமாதி”மேலா மங்களாசாசனம் செய்யப்பட்டு அமரப்போகிறாய்? பரவாயில்லை […]
கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று நீ புளகாங்கிதம் கொண்டபோது உன் அயல் நாட்டு நண்பன் உனக்கு கொடுத்த தொற்றால் நீ கொரோனா எனும் அந்த முள்ளு உருண்டை வைரஸ் மூலம் உன் அந்திச்சிவப்பை நீ முத்தமிட்டு மறைந்து விடுவாயோ என்ற நிஜம் இப்போது ரத்தம் கொப்புளித்துக்கொண்டு நிற்கிறதே! என் செய்வது? செல் பேசிகளில் செல்லரித்துப்போய் விடுமோ நம் மண்ணின் கனவுகள்? […]
சொல் உரித்து பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை பற்றிய உட்கிடக்கையை உட்புகுந்து அறிந்து கொள்ள நினைத்தேன். கடவுள் என்ற சொல் தடுக்கி விழுந்தவன் எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு வழியாய் ஒரு சிலையைப்பற்றிக்கொண்டேன். வாழ்க்கையின் அசுர அலைகள் அலைக்கழிக்க நான் சக்கையாகிப்போனேன். பக்தி மூலம் உன் சதைப்பற்றுகளை பிய்த்து எறிந்து அந்த மரணக்கழுகுகளுக்கு தீனி ஊட்டு. உனக்கு ஒரு விடுதலைத்தீ பற்றிக்கொண்டது தெரிந்து விடும் என்றது அடிக்குரல். அதற்காக புராணங்களைக்கேட்ட போதும் அதே கழுகுகள் தலைக்கு மேலே […]
அந்த ஜன்னல் வழியே கண்களை துருவவிட்டேன். அந்த இரும்புக்கம்பிகள் கரும்புக்கம்பிகளாய் இனித்தன வயது பதினாறில். இன்றும் அப்படித்தான் பார்வைகளின் நாக்குகள் கம்பிகளை வளைத்து நக்கிக்கொண்டிருந்தன. அன்று அந்த விநாடிப்பிஞ்சில் கண்ணின் பார்வையில் அவள்ஒரு அரை சதவீதத்தைக்கூட என் மீது வீசவில்லையே. அந்த மின்னல் கயிறு அன்றோடு அறுந்தே போனது. அப்புறம் நான் சமஸ்கிருதத்தில் மாங்கல்யம் தந்துநானே என்று சொல்லி ஆண்டுகளின் அச்சு எந்திரத்தில் நசுங்கிய கரப்பான் பூச்சியாய் அச்சிடப்பட்டு விட்டேன். ஆம்.அது என் திருமணம். இந்த கேடு […]
கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த விளிம்பு நிலை தான் “பாம்பும் தடுக்கப்பட்ட பழமும் உள்ள ஈடன் காடு”. இந்த உள்ளவியலின் உள்ளாடைகளை களைந்து எறிய மசாலாக்காடுகளில் ஒரு மகாத்மா கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று மயக்கம் அல்லது தொங்குநிலை போன்ற ஹேலுசினேஷன்கள் மூலம் தங்கள் ஹிட் ரேட்டை உயர்த்திக்கொள்ளும் ஊடக விளையாட்டு இது. ஆரவ் ஊட்டிய காதல் […]
======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே ! மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் உங்களிடம் உண்டு. எங்களுக்கு பூரிப்பு தான். சிங்க மராட்டியன் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்றானே பாரதி! சிவாஜியின் வீரம் எங்கள் புற நானூறு! ஆனால் அவன் குதிரையின் குளம்படிகள் கிளப்பும் காவிப்புழுதியை வெறும் குழப்பம் என்று நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். காவிரித்து பூவிரித்து வர காவிரிக்கு காடு திருத்த கரை உயர்த்த […]
ருத்ரா இ பரமசிவன் நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். இது பீரா?பிராந்தியா? எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிறது. நான் கொஞ்சநேரம் இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள் என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன். அநியாயங்களை நியாயம் என்று விற்றுக்கொண்டிருக்கும் இந்த சமுதாய”ஷலக்கின்”கையில் எப்போதும் ஒரு தராசும் கத்தியும் ஆடிக்கொண்டிருக்கிறது! வலுத்தவனின் ரத்தம் கசியும் கொடூர கோரைப்பற்கள் இங்கே நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறது. அதன் கீழ் எத்தனை ஆரவாரங்கள் நெரிசல்கள். அந்த கோரப்பல்லே இவர்கள் வழி பாட்டில்… இவர்கள் சள சளப்பு பேச்சுகளில்… இவர்கள் வாழ்க்கை ஓட்டங்களில்… […]
===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம் காட்டும் உவகை கூட்டும். கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல் பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி அணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும். பண்டு துளிய […]
ருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். ஈழம். தமிழ் என்னும் ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள். இந்திய சாணக்கியம் இறுக்க தாழ் போட்டு விட்டது. ஐ.நா கூட கண்களை மூடிக்கொண்டு குப்புறக்கிடக்கிறது. யாருக்கென்ன? பிள்ளையார்களையெல்லாம் கடலில் கரைத்தாயிற்று. அந்த “சசி வர்ண சதுர் புஜ” ரசாயனம் எல்லாம் திமிங்கிலங்களின் வயிற்றில். நூற்றுக்கணக்காய் அவை நாளை மிதக்கும் கரையில். அதையும் விழாக்கோலம் கொண்டு பார்க்க […]