ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம் காட்டும் உவகை கூட்டும். கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல் பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி அணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும். பண்டு துளிய நனை நறவு உண்ட பூவின் சேக்கை புதைபடு தும்பி சிறைக்க […]
ருத்ரா “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” ………………. 2013 ஐப் பார்த்து 2014 இப்படி பாடி முடிப்பதற்குள் 2015 வந்து விட்டது 2014 ஐ பார்த்து இப்படிப்பாட! எத்தனையோ ஓடி விட்டது. காலுக்குள்ளும் கைக்குள்ளும் புகுந்து. எத்தனையோ அலைகள் அலைகளின் மேல் அலைகளின் கீழ் அலைகளின் அலைகளாய் தங்க மணல் ஏக்கங்களை தடம்பதிக்க நீல வானம் “கொண்டைதிருக்கு” சூடி நீளமான கூந்தல் எனும் கால விழுதுகள் ஆடவிட்டு.. கனவுகள் எனும் பஞ்சுமிட்டாய் நட்டுவைத்த காதல் நுரைவனங்கள் […]
ஒற்றை வரியை சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து பஞ்ச் டைலாக்கில் பல சேட்டைகளுடன் திரையை ரொப்பி பெட்டியை ரொப்புவதே சினிமானின் பாணி. ஆனால் நறுக்கென்று சுறுக்கென்று உள்ளம் தைத்து காமிராவில் எழுதிய பாலச்சந்தரின் இந்த குறும்பாக்களை மாலை தொடுத்தாலே கிடைப்பது ஒரு திரைப்படக்கல்லூரி. பாலசந்தர் குறும்பாக்கள் ================================================== 1 காப்பியாற்றிய சர்க்கஸில் ஒரு காதல் காப்பியம் சர்வர் சுந்தரம். 2 ஆரஞ்சு பழத்தோல் கூடு சுளைகள் களவு போனது. நீர்க்குமிழி. 3 கடிகார வினாடி முள் முனையில் […]
======================================================ருத்ரா ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின் தலைப்பிடப்படாத இந்த ஓவியத்தைப்பாருங்கள். என்ன அற்புதம்! என்ன ஆழம்! புரிந்து விட்டது என்றால் அழகு புரியவில்லை என்றால் அதைவிட அழகு. இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட் உரக்கிடங்கு போல்… ஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும் நசுங்கிக்கிடக்கும் ஜங்க்யார்டு போல… ஒற்றைக்கண்ணாடியில் கண்ணும் இல்லாமல் முகமும் இல்லாமல் லுக் விடும் ஒரு மௌன அம்பின் கூர்மைத்தாக்குதல்கள் நம் நுரையீரல் பூக்களை கசக்கிவிடுவது போல்… உலகப்போர்களின் வக்கிரங்களில் சர்வாதிகார கொலை வேட்டையில் மரண ஆவேசங்களின் […]
(ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு ஒரு அஞ்சலி) “இதழ்”இயல் என்றால் முத்தமும் காதலும் மட்டும் அல்ல. மூண்ட கனல் உமிழும் மானிட உரிமைக்குரலும் தான். பத்திரிகைக்குரல்களின் சுதந்திர சுவாசமே! கல்லூரிகளின் வயற்காட்டிற்கே சென்று இளைய எழுத்துகளின் நாற்றுகளை இலக்கிய மின்னல் ஊற்றுகளாய் உரு காட்டி வழி காட்டிய புதுமைப்பாணி உனது பாணி. விகடன் “முத்திரை”யைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கலாம் சாஹித்ய அகாடெமிகளும் ஞான பீடங்களும். இந்த முத்திரைக்கு ஈடாகe ஏது இங்கே இலக்கியத்தின் அக் மார்க […]
“அரிவாள் முனையில் கசியும் மோனம்” Behold her, single in the field, Yon solitary Highland Lass! Reaping and singing by herself; Stop here, or gently pass! Alone she cuts and binds the grain, And sings a melancholy strain; O listen! for the Vale profound Is overflowing with the sound. அவளைப் பார். என்ன அழகு? என்று உன் விழிகளால் […]
(நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஓர் அஞ்சலி) ஒரு நூற்றாண்டு பயணம் செய்த களைப்பில் கண் அயர்ந்த பெருந்தகையே! அன்று ஒரு நாள் வீசிய அரசியல் புயலில் உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது ஒரு புதிய மைல் கல் நட்டுச்சென்றாய். அரசியல் சட்டத்தை எல்லாம் அந்த “இருபது அம்ச” வெள்ளம் அடித்துக்கொண்டு போனதன் மௌன சாட்சியாய் நீ இருந்தபோது உனக்குள் ஒரு வேள்வி கொளுந்து விட்டு எரிந்தது! ஆம்! மனித நேயமே பசையற்றுப்போய் அச்சிடப்பட்டுவிட்டதோ இந்த […]
எஸ்.பொ அவர்கள் வரிகளின் ஸ்பரிசம் எனக்கு ஏதும் இல்லையே. அந்த இலக்கிய ஒளிக்கு நானும் எதோ ஒரு”நெய்ப்பந்தம்” பிடிக்க வேண்டுமே என்று உள்ளே உறுத்தியதால் இதில் நுழைந்தேன். http://www.eramurukan.in/tamil பாரதியார் எழுதியிருந்தாரே “அக்கினிக்குஞ்சு ஒன்று கண்டேன்.. அதை ஆங்கொரு பொந்திடை வைத்தேன்..” அந்த குஞ்சு குஞ்சு இல்லை. அக்கினிக்கடல். இலங்கைக்கு கழுத்தில் வல்லாட்டு மாட்டி வல்லிய தமிழின் வலம்புரிச்சங்கெடுத்து முழங்கிக்க்கொண்டிருந்தது அந்த அக்கினிக்கடலே. பொறுத்தம் இல்லாமல் பூகோளக்காரர்கள் இந்து மகா சமுத்திரம் என்று அழைத்துக்கொள்ளட்டும்.கவலையில்லை. அக்கினியை […]
ருத்ரா (இலக்கிய இயக்குனர் ருத்ரய்யா அவர்களைப் பற்றிய நினவு கூர்தல்) திரைப்படக்கல்லூரியில் சினிமா லென்சை கூர்மைப்படுத்திக்கொண்டு உயிர்ச் சிற்பம் செதுக்க வந்தவர். நடிகர்களிடம் இருந்த தேவையற்ற காக்காய்ப்பொன் மினு மினுப்பை எல்லாம் சுரண்டி விட்டு அந்த ரத்த நாளங்களில் அவர் உளியின் சத்த நாதங்களை துடிக்கச் செய்து வெளிப்படுத்தியவர். ஸ்ரீ ப்ரியா கமல் ரஜனி…. அந்த முக்கோணத்தில் பெண்ணியம் ஆணியம் ஆகிய இரண்டின் இடையே உள்ள அர்த்தபுஷ்டியுள்ள கண்ணியம் பற்றிய முதல் தூரிகைக்கீற்றின் அமரத்துவமான கீறல் வெள்ளித்திரையை […]
ருத்ரா சன்னலை ஊடுருவிப்பார்க்கிறாய். தூரத்துப்புள்ளியில் ஒரு புள்ளின் துடிப்பு. வானக்கடலில் சிறகுத்துரும்பு. கனவு அப்படித்தான் சிறகடிக்கிறது. அதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை. நினவு ரத்த சதையை கழற்றிய நிர்வாணம் அது. சித்தர்கள் உள்ளத்தையே குகையாய் செதுக்கி குடியிருந்தார்களாம். அதில் வெளிச்சம் தெரியும்போது அவர்களே புத்தர்கள். மனிதனுக்கு தனி முயற்சிகள் தேவையில்லை. அவனது கவலைகள் ஆசைகள் பொறாமையில் சுரக்கும் அட்ரீனலின் அமில ஊற்றுகள்… இவை போதும். குகை வெட்டும்.பகை மூளும். குழி வெட்டும். அவனது நாட்கள் எல்லாம் மண் […]