குறிப்பு : பொதுவாக பீஷ்மர் இறுதி வரையில் துரியோதனன் பக்கமே இருந்தாலும் ரதசப்தமி அன்று பீஷ்மருக்காக அனைத்து மக்களும் தலையில் எருக்க இலை வைத்து அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டு நீராடுகிறோம். என்ன காரணம் என்று மகாபாரத்தில் தேடினேன். விளக்கம் கிடைக்கவில்லை. யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கொல்ல அனுமதி கேட்கும் இடம் இதற்கு விடை சொன்னது. அந்த விடைதான் இந்த சிறுகதை. போர் தொடங்கி ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது.ஏதற்காக இவ்வளவு உக்கிரமான போர்? வெறும் ஊசி […]
BY சாம்பவி “ அடுத்தது மீரா ”என்றதும் மீண்டும் ஒரு ஒலி அலை எழுந்தது . ஒலியில் வானவில் தோன்றுமா என்ன? ஏழல்ல, ஏழாயிரம் நிறங்களில் எழுந்த கானவில் அது. கிளப்பி விட்டது நிர்மலா. யாழினிக்கு ஆச்சரியமானது. அடுத்தது நிர்மலா சொன்ன வண்ணம் மீராதான். விஜய் நடித்த ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் டைட் க்ளோசப்பில் முகம் காட்டியவள். சங்க உறுப்பினர் அட்டை உண்டு. கருப்பாக இருந்தாலும் அவளுடைய சிரிக்கும் கண்கள் […]
சாம்பவி கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது கை மேல் படவில்லை. மனுஷருக்கு அரைமணி முன்பாகவே விழிப்பு தட்டி விடுகிறது. இரண்டு நிமிஷம் தாமதமான காபிக்கு பாக்கியத்திற்கு விழும் டோஸ் இல்லை. ‘ வை “ என்றொரு அதட்டல் மட்டும். இந்த அதட்டல் ஒன்றுதான் 50 வருட வாழ்வின் அடையாளம். மிரட்டல் ஒருவகை சாயல் என்றால் பணிதல் இன்னொரு வகை சாயல். ஒரு […]