மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புனைப்பெயர் அவர்களுக்குப் பதில் அனுப்பியுல்ளேன். மட்டுறுத்தலில் நிறுத்திவிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் ஒரு பதிவுடன் தொடரை முடிக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 60 களில் எழுத்தாளர்களுக்கு ஓர் ஆசை இருக்கும் விகடனில் எழுத வேண்டும் என்று. இணைய இதழ்களில் திண்ணையில் எழுத வேண்டும் என்று ஆசை வரும். “சில சந்திப்புகளூம் சில நிகழ்வுகளும் “ இது ஓர் அரசியல் தொடர். குமுதம் பால்யூ முதல் அண்ணா கண்ணன் […]
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து தொடரை இத்துடன் முடிக்க எண்ணியிருந்தவளைத் தொடரும் தொல்லைகள் தடுத்துவிட்டன. ஆரம்பம் என்றிருந்தால் அதற்கு ஓர் முடிவும் உண்டு என்று சொல்வோம். பெண்ணின் அவல நிலைமட்டும் இன்னும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. அதற்கு ஒர் முடிவு இல்லை. டில்லி சம்பவம் எல்லோரும் அறிந்ததே. கடந்த 41 வாரங்களாக நான் எழுதி வரும் தொடரின் மையக் கருத்தும் பெண்ணின் நிலைபற்றியதே. பல உண்மைச் சம்பவங்கள் எழுதப்பட்டன.. எனவே பாலியல் கொடுமைபற்றி […]
அகலாதுஅணுகாதுதீக்காய்வார்போல்க இகல்வேந்தர்ச்சேர்ந்தொழுகுவார். தேடல் தேடல் எளிதல்ல. அர்த்தமுள்ள முயற்சியும் , தெரிந்தவைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலும் இன்றியமையாதவை. ஊக்கம் இடையில் உடைந்துவிடக் கூடாது. சிறுவயது முதல் எனக்கு அமைந்த குணம் இது. பல பாதைகளில் சென்றாலும் என் இலக்கு ஒன்றுதான். நாட்டில் சுதந்திரப் போராட்டம், தந்தை அரசியலில். .பின்னர் அரண்மனைக் கருகில் வீடு, அரண்மனையில் தந்தைக்கு உத்தியோகம், அரண்மனை விருந்தினர் மாளிகைக்கு வரும் பெரியவர்களின் அறிமுகமும் பழக்கமும் தோற்றுவித்த அச்சமின்மை, இலக்கிய ஈடுபாடு. பெற்றவரால் சோதிடம், […]
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். தேடல் தேடல் எளிதல்ல. அர்த்தமுள்ள முயற்சியும் , தெரிந்தவைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலும் இன்றியமையாதவை. ஊக்கம் இடையில் உடைந்துவிடக் கூடாது. சிறுவயது முதல் எனக்கு அமைந்த குணம் இது. பல பாதைகளில் சென்றாலும் என் இலக்கு ஒன்றுதான். நாட்டில் சுதந்திரப் போராட்டம், தந்தை அரசியலில். .பின்னர் அரண்மனைக் கருகில் வீடு, அரண்மனையில் தந்தைக்கு உத்தியோகம், அரண்மனை விருந்தினர் மாளிகைக்கு வரும் பெரியவர்களின் அறிமுகமும் பழக்கமும் […]
சீதாலட்சுமி ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா நுழை. வாழ்க்கைச்சக்கரத்தின்அச்சாணிபெண் சமுதாயத்தில் அவள் பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முயன்றனர். இந்த நூற்றாண்டு வரலாற்றின் நிகழ்வுகளை இத்தொடரில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவளும் மனிதப் பிறவியில் ஒருத்தி என்பதற்கு அடையாளச் சீட்டு கிடைத்தது. ஆம். ஓட்டு போடும் உரிமை கிடைத்தது. இந்தியாவில் கிடைத்த இந்த உரிமை பல நாடுகளில் பெண்களுக்குக் கிடைக்க வில்லை. நாட்டு விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த […]
மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இவ்வாரம் அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்ப முடியவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ( வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்- 40) . அடுத்தவாரம் தவறாமல் அனுப்பிவிடுவேன் சீதாலட்சுமி
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. — உலகில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதலாக வாழ்வியல் வரலாறும் தொடங்கி விட்டது. காலங்கள் சுழற்சியில் மாறுதல்களும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதனை இலக்கணமாகக் கொண்டுள்ளோம். என்னதான் மாறுதல்கள் வந்தாலும் பல அடிப்படையான விஷயங்கள், இயற்கையைச் சார்ந்து தன் இயல்புடன் பயணிக்கின்றது. வாழ்வியலின் வரலாறு முழுமையும் எழுதப் புகுந்தால் மகாபாரதத்திற்கு மேல் நீட்சியான படைப்பாகிவிடும். எனவே […]
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். சொல்வது எளிது. ஆனால் அதன்படி நடப்பது எளிதல்ல அரிமாசங்கத்தின் திட்ட நோக்கங்கள் அருமையானவைதான். உலக வரலாற்றை நன்கு ஆழப்படித்தவர்களுக்கு இது புதிதாகத் தோன்றாது. மனிதன் தோன்றி லடசக் கணக்கான ஆண்டுகளாகி விட்டன. ஆனால் மொழி தோன்றியது சில ஆயிரவருடங்களுக்கு முன்னர்தான். எழுத்தும், இப்பொழுது நாம் காணும் வடிவில் வந்திருப்பது அதற்குப் பின்னர் தான். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்ந்திருக் கின்றனர். அவர்கள் வழி நடத்தலில் […]
சீதாலட்சுமி இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் QUEST PROGRAMME பன்னாட்டு அரிமா சங்கம் தோற்றுவித்த ஓர் திட்டம் 65 நாடுகளில் 31 மொழிகளில் இத்திட்டம் செயல்படுத்த பயிற்சித் திட்டமும் வரையப்பட்டது. சிறுவர்கள், இளம் காளைகள் திறனை வளர்க்கவும் தவறான பாதைகளில் திரும்பி விடாமல் தடுக்கவும் தோன்றிய திட்டம். 1 தன் பொறுப்பை உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்தல் 2 சொல்ல நினைப்பதைச் சரியாகச் சொல்லக் கற்றுக் கொள்ளல் 3 […]
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை மனிதனின் பயணம் இருட்டறையில் நுழைந்து ,கருவாய் வளர்ந்து , வெளிச்சத்திற்கு வந்து, உலக வாழ்க்கையில் பல பருவங்களைக் கடந்து இறுதியில் மீண்டும் மண்ணுக்குள் இருட்டறையில் புகவும் பயணம் முடிகின்றது. குழந்தைப் பருவம் தாயின் அரவணைப்பிலும் மற்ற பெரியோர்களின் அன்பிலும் பாதுகாப்பாக வளர்கின்றது.. இறகு முளைக்கவும் பறந்து செல்லும் பறவையைப் போல் கற்ற பின் உழைக்கத் தொடங்கி தனக்கென்று ஒரு குடும்ப வளையத்தில் புகுந்து கொள்கின்றான். அன்பு வட்டமாயினும் […]