நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண் விடுதலை பற்றிய சிந்தனையும் தோன்றி, முயற்சியையும் தொடங்கிவிட்டனர். இந்த மண்ணில் பெண் சமுதாயம் ஏறிவந்த முன்னேற்றப் படிகளைக் காணலாம். முதலில் பெண்களுக்கு அடையாளம் பெற்றுத்தர வேண்டுமென நினைத்தனர். அன்னிபெசன்ட் அம்மையாரால். அகில இந்திய மாதர்சங்கம் தோன்றியது அதன்மூலம் ஓட்டுரிமை பெற்றுத் தந்தனர்.. இதனை யாரும் மறத்தல் கூடாது 100 ஆண்டுகளுக்கு முன்னரே விழிப்புணர்வு முயற்சியை மேற்கோண்ட வைகளை […]
அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் சென்னைக்கருகில் ஓர் மகளிர்மன்றம் அன்னை கஸ்தூரிபாய் மகளிர்மன்றம் தலைவி பங்கஜம். செயளாளர் பேபி. ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்டு 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. சுறுசுறுப்பான உறுப்பினர்கள் இருப்பினும் பேபியின் கடும் உழைப்பில் பங்கஜம் ஒத்துழைப்புடன் வளர்ந்த ஓர் மன்றம். அந்தக் காலத்தில் சங்கீதம், இந்தி முதலியன கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் இருந்தன. ஆனந்த விகடன் திரு வாசன் அவர்களின் புதல்வர் […]
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி, இவ்வையம் தழைக்குமாம் மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் அச்சம், நாணம் விடுத்து, நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் ஞானச் செருக்குடன் இருக்கும் பெண், ஆண்மக்களும் போற்றிட வாழ்வர் என்பதையும் கூறியுள்ளார். பெண் விடுதலை என்ற பேச்சு வந்தாலே அங்கே பாரதியைப் பார்க்கலாம். பட்டங்கள் […]
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம். நம்முடன் இருந்து பேசுகின்றவர் தந்தை பெரியார். பாரதி போல் கவிஞன் அல்ல. குடும்பத்தில் அவர் ஓர் “தந்தை”. .(தயவு செய்து எங்கள் உணர்வுகளை அரசியல் குட்டையில் கலந்து விடாதீர்கள். இது குடும்ப விஷயம் ..வாழ்க்கையில் பெண்ணின் நிலை, குடும்ப நலன்பற்றி எழுதுகின்றேன். அது சம்பந்தமாக மற்றவர்களின் கருத்துக்களையும், சில விளைவுகளையும் பதிய முயற்சிக்கின்றேன். எனக்கு அரசியல் வர்ணம் வேண்டாம்.) […]
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று காணி நிலம் வேண்டும் – பராசக்தி பாட்டு கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண் வேணும் – பாரதியின் கவிதைக்கு ஓர் பத்தினி[ப் பெண் வேண்டுமாம். அச்சம் மடம் நாணம் இவைகளைத் தூக்கி எறியச் சொன்னவன்தான் இதையும் சொல்கின்றான் பத்தினிப் பெண்ணிற்கு நம்மிடையே ஓர் காப்பியமே இருக்கின்றது. அதைப் பார்ப்போம். உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் […]
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. உலகில் தோன்றிய ஆண், பெண் என்ற இரு இனங்களில் பெண்ணினம் மட்டும் கடும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் மண்ணில் மட்டுமல்ல, இது உலகின் பொது நிலையாகும். . நாம் இப்பொழுது நம் தமிழ்மண்ணின் வரலாறு பார்க்கப் போகின்றோம். அதுவும் இந்த நூற்றாண்டு வரலாறு. பெண்ணின் நலம் காக்கப் பெண் மட்டுமல்ல ஆணும் உதவிக்குத் தோள் கொடுத்தான். வேர்களூம் விழுதுகளும் தெரியாமல் போனதாலோ அல்லது ஒருங்கிணைந்த […]
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும் சென்னை வாழ்க்கை ஆறு மாதங்கள்தான். ஆனால் கிடைத்த அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகளைச் சுமந்து வருகின்றன.. 1962 வரை, அதாவது பிள்ளைப் பிராயத்தி லிருந்து கிடைத்த பயிற்சிகள், அனுபவங்கள் எல்லாம் என் வாழ்க்கைப் பயணத்திற்கு அஸ்திவாரம். சென்னையில் வரலாற்று நாயகிகளை நேரில் பார்க்கவும் மகிழ்ந்தேன். பெண்ணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணின் உழைப்பை நேரில் கண்ட பொழுது வியந்தேன். அவைகளை விளக்கமாகப் பின்னர் கூறுகின்றேன். இப்பொழுது நான் சென்ற பயிற்சி […]
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. நம்மில் எத்தனை பேர்கள் அனுபவங்களிலிருந்து சரியான படிப்பினையைப் புரிந்து கொள்கின்றோம். நமக்குள் குறைகள் இருக்கின்றன என்பதைக் கூட மனம் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த குறைதான் நாம் சந்திக்கும் பல துன்பங்களுக்குக் காரணம். அமைதியைவிட அல்ப சந்தோஷங்களை விழைகின்றோம். வாழ்வியலின் வழுக்கல்களுக்கு நாமே காரணமாகின்றோம். மைனரிடம் துடுக்குத் தனமாகப் பேசி வந்த பின்னர் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று நினைத்தேன் […]
கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன குத்தக்க சீர்த்த இடத்து. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் பெண்ணின் நிலை சோதனைக் களத்தில் வெந்து கொண்டிருந்தது. பெண் கற்கச் செல்வது கூடப் பிரச்சனை. அவள் பேச்சு, நடை உடை பாவனை எல்லாம் மற்றவர் பரிசோதனைப் பார்வையில் இருந்தன. பணிகளில் இருவிதங்கள்.. ஓரிடத்தில் இருந்து பணி யாற்றுவது ( sedantary ) இன்னொன்று பல இடங்களுக்குச் சென்று பணியாற்றுவது. அதாவது களப்பணி. அதிலும் ஆடவர்களுடன் சேர்ந்து செய்யும் பணி. முதலில் வம்புக் […]
மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இத்துடன் வாசகர் புனைப் பெயருக்கு ஒரு பதில் கடிதம் வைத்திருக்கின்றேன். போட நினைத்தால் போடலாம் தமிழ் நாட்டில் சமூக நலத்துறையில் என்ன பணிகள் என்பதெ பலருக்கும் தெரியாது. அதுவும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. யார் கஷ்டங்களைப் போக்க பணிக்கு வந்தோமோ நாங்களே பாதிக்கப் பட்டோம். இந்தியாவிலேயே பெண்கள் பிரச்சனைகளுக்குப் பெண்கள் அமைப்புகள் தமிழகத்தில்தான் தோன்றியது. இன்னும் இரு அத்தியாயம் சென்றவுடன் வருபவர்கள் அனைவரும் வரலாற்றுப் பெண்மணிகள். இந்தியவில் எங்கும் […]