தீபாவளி எல்லா நாளும் போல மற்றுமொரு நாளே என்று ஆகி வெகு வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும், தீபாவளிக்கான சிறுவயது குதூகளிப்பை,கொண்டாட்டத்தை, திரும்பவும் பெற்று விட எங்கோ ஒரு மூலையில் மனம் ஏங்கி கொண்டு தான் இருக்கிறது. திரும்பி செல்லவே முடியாத பாதை எப்போதும் வசீகரமானதே. சிறுவயதில் தீபாவளிக்கான உற்சாகம், ஊரில் முதல் பட்டாசு கடையாக திறக்கப்படும், சூர்யா வெடிக் கடை(கடல்), திறந்த நாள் முதல் தொற்றிக்கொள்ளும். வருடம் முழுவதும், பட்டாசு விற்கும் ராமையா […]
எனக்கு எப்போது ரஜினி பித்து பிடித்தது என்று சரியாக நினைவில்லை. எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும்போது பிடித்திருக்கலாம், என்று நினைக்கிறேன். எதை செய்தாலும், அதில் அதிதமாய் போவது என்ற என்னுடைய இயல்புப்படி, ரஜினி விஷயத்திலும் நான் மிகத்தீவிரமாக இருந்தேன். சொல்லப்போனால், என்னுடைய வயது ஒத்த பெரும்பாலானவருக்கு சிறு வயதில் ரஜினி தான் ஆதர்சமாய் இருந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது.ரஜினி பிடிக்கும் என்றால், கட்டாயமாய் கமலஹாசனை பிடித்திருக்க கூடாது என்பதுஅன்றைய முதல் விதி. எனக்கோ கமல் […]