நான்கு கவிதைகள்

    பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும்  ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம்.   விமர்சகன் அந்தக்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் "இவைகள் கதைகளல்ல, காட்சிகள்" என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்பதைப் …

கானல்

கைக்கெடிகாரத்தைப் பார்த்தார் கந்தாடை. ஆறு அடிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தது. சூரியன் மேற்கே விழுந்து கொண்டிருந்தான். அவர் தான் உட்கார்ந்திருந்த பார்க் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டார். ரத்த ஓட்டம் சமநிலைக்கு வர சில நிமிஷங்கள் ஆகும்.…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்

  "தூரப் பிரயாணத்"தில் பாலியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தின் தாத்பர்யம் என்னவென்று  அறிவது ஒரு சவாலாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு காரணத்தை வைத்து இந்த தாத்பர்யத்தைக் கணித்திருந்தால்  மற்ற விசேஷ அம்சங்களை நாம் தவற விட்டிருப்போம் என்னும் உறுதியான எண்ணம் இக்கதையைப் பலமுறை படித்த பின் தோன்றுகிறது.   ஜானகிராமனின் சம்பாஷணைகள்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணி

மார்க்கம் ஒரு இருபத்திஐந்து வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு மெஸ் நடத்துபவர். அவர் சாப்பாடு போடும் விதம் எப்படி? தெருவோடு போகிறவர்களுக்கு அவர் சாதம் போடும் ஓசையைக் கேட்டால் ஏதோ முறம் முறமாய் இலையில் சாதத்தைச் சரித்துக் கொட்டுகிற மாதிரி இருக்கும். மார்க்கம்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்

  கதை சென்னையில் நடக்கிறது. அதுவும் பஸ்ஸில். ஊரின் "கலாச்சாரப்படி" காலங்காத்தாலேயே கடையைத் திறந்து வச்சு ஊத்திக் கொடுக்கிறவங்ககிட்டே இருந்து வாங்கிப்"போட்டுக்" கொண்டு வந்துவிட்டவான் என்று குடிமகனைப் பற்றி சக பிரயாணியான பெண் சொல்கிறாள், குடிமகனுக்கும்  அந்தப் பெண்மணிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் கதை பின்னப்படுகிறது. சென்னை பாஷையில் தி. ஜா. ரவுண்டு கட்டி அடிக்கிறார். …

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்

  ஸிந்துஜா  மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் - நிஜமாகவே ஆறுதான் - இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறது. அவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில்  க்ஷேம  லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்

ஸிந்துஜா  காதல் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; அதற்கும் மேலாக மனம் சார்ந்தது என்று பலரும் பல தளங்களில் சொல்லி விட்டார்கள். இளமையில் இது சற்று அலட்சியப்படுத்த வேண்டிய கருத்து என்று அன்றைய வயது நிர்மாணித்து விடுகிறது. தளர்ந்த உடல் காதலைத் தாங்கிப் பிடிப்பதில்லை. ஆனால் பௌதீக ரீதியாக வயதாகியும், மனம் அப்போதுதான் மலர்ந்த பூவைப் போல…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்

  ஜானகிராமனின் தேர்ச்சி பெற்ற கையில் மனித சுபாவங்கள், சம்பாஷணைகளின் மூலமும், நிகழ்ச்சிகளின் மூலமும் உறுத்தாமல் சொல்லப்படுகின்றன. இங்கு உறுத்தாமல் என்று சொல்லப்படுவதின் நீட்சி இரைச்சலற்ற, பின் புலத்தில் அடங்கிய குரலில் விவரணைகளை வாசகனுக்குத் தருவதையே குறிக்கிறது. வியாபாரத்தினூடே ஒரு வெற்றிலை வியாபாரிக்கும் , வெற்றிலை…

சில கவிதைகள்

  ஏன்  இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான்  நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. மூச்சு முட்டும். மேடை மேல் ஏறிப் பேச மாட்டேன். வாய் குழறும். பரிசுகள் கிடைத்ததில்லை. மார்க்கெட்டிங் வராதென்று காலேஜிலேயே பி.காம்தான். நெருங்கிய…