3 சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன் அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ இதுவரை நடத்தியது இல்லை. ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் செய்யறதா சும்மா சொல்லி, பூஜை செலவு, தட்சிணைங்கிற பேர்ல […]
4 ரூபவதியோட வாரிசுகளின் விலாசம் கிடைக்குமா என்று கேட்ட பரந்தாமனிடம், “ என்கிட்டே அந்த காகிநாடா விலாசம் இருக்குது.. எண்பது வருஷத்துக்கு முந்தினது.. அதை என் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் சுதாகர் ராஜா. “ நான் காகிநாடா போய் தேடிப் பார்க்கிறேன்.. போறதுக்கு பணம் மட்டும் கொடுங்க.. நான், அந்த வரைபடத்தை கண்டுபுடிச்சி எடுத்திட்டு வர்ரேன்..” என்றான் பரந்தாமன். “ என் கிட்ட ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருக்குது.. […]
3 சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன் அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ இதுவரை நடத்தியது இல்லை. ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் செய்யறதா சும்மா சொல்லி, பூஜை செலவு, தட்சிணைங்கிற பேர்ல […]
2 ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ, ராஜாவின் மற்ற மகன்களோ அவளிடம் பேசுவதும் இல்லை. கிழட்டு ராஜாவின் ஆசை மனைவி என்று வேலைக்காரர்களுக்கும் இளக்காரம். இந்த உதாசீனத்தையும், தனிமையையும் போக்க, அவள் வெற்றிலை போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். இதைப் […]
அன்புடையீர், தங்களது திண்ணையிலும், மற்ற இதழ்களிலும் வெளிவந்த எனது முப்பது சிறுகதைகளின் தொகுப்பை ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள் என்ற பெயருடன் காவியா பதிப்பகம் வெளியிடுகிறது. எதிர் வரும் 39 வது சென்னை புத்தக கண்காட்சியில் காவியா பதிப்பகத்தின் கடை எண் 447-448 இல் இப்படைப்பு கிடைக்கும். அன்புடன் தாரமங்கலம் வளவன்
1 தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது என்றும், தங்கள் அரண்மனையில் புதிதாய் நகைப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகவும், தங்கள் குடும்பம் இப்போது வறுமையில் இருந்தாலும், கண்டு பிடிக்கப் பட்ட அந்த நகைகளுக்கு உரிமை கொண்டாடப் போவதில்லை என்றும், அந்த நகைகளை விதவைகளின் மறு வாழ்வுக்கு நன்கொடையாக கொடுக்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லிக் கொண்டிருந்தான் […]
தாரமங்கலம் வளவன் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து நாடகம் நடத்தும் குழுவின் விளம்பர போஸ்டர் அது. மாணிக்கத்தின் வீட்டிற்கு எதிரில் ஒட்டப் பட்டிருந்தது.. முதல் வரிசை டிக்கெட் ஐநூறு ரூபாய் என்றார்கள். வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்தார். என்ன ஆச்சர்யம்.. அது அவருடைய சொந்தக்கதைதான்.. மோகன சுந்தரம் என்னும் அந்த பாத்திரத்தின் கதை அவருடைய கதையேதான்… குடித்து விட்டு வந்து தினமும் மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் ஒரு குடிகார தந்தை. ஒரே ஒரு வித்தியாசம்… நாடகத்தில் கடைசியில் […]
பச்சைப் போர்வை உடுத்தி கம்பீரமாய் நிற்கும் மலை ராஜனை மற்றுமொரு போர்வையாய் கார்வண்ண முகில்கள் ஒட்டிக் கொள்ள, மகிழ்ந்து போன மலைராஜன் பரிசு கொடுக்கிறான் அது தான் மழை.. மழை நதியாகிறது.. நதியாகிய மழைக்கு அவசரம், சமுத்திர ராஜனுடன் கலக்க.. அணை தடுக்கிறது.. என்னை தடுக்காதே என்று நதி அணையோடு கோபித்துக் கொள்கிறது.. அணை சொல்கிறது நதியிடம்.. நதியே.. என் மீதான உன் கோபம் நியாயமானதல்ல.. வெறியுடன் சமுத்திர ராஜனுடன் […]
நீ என் வீட்டிற்கு வந்தபோது, வசந்தம் வரவேற்க காத்திருப்பதாகச் சொன்னேன்.. வாழ்வில் வறட்சியை மட்டும் நான் காட்டிய போதும் நீ வாழ்வில் வசந்தத்தை மட்டும்தான் பார்த்ததாகச் சொன்னாய்.. நம் வீட்டுத்தோட்டத்தில் குயில்களின் கானம் மட்டும்தான் கேட்கும் என்று கூசாமல் பொய் சொன்னேன்.. ஆந்தைகளின் அலறல் கேட்டபோதும் உன் காதில் குயில்களின் இனிய கீதமே கேட்பதாகச் சொன்னாய்.. தென்றல் சுகமாய் நம்மை தாலாட்ட தவம் கிடப்பதாக கையில் அடித்து சத்தியம் செய்தேன்.. ஓங்கி […]
நான் தான் அந்த காட்டுப்பாதையின் முதல் பயணி. பாதை நெடுகிலும் மண்டிக்கிடந்தன முட் புதர்கள். என் கால்களை முட்கள் கிழித்த போதும் எனக்கு பின்னால் நடந்து வருபவர்களின் கால்களை குத்திக் கிழிக்காமல் இருக்க அவைகளை வெட்டிச் சாய்த்து நல்ல பாதை செய்தேன் இப்போது என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.. அவர்களின் பாத சுகத்திற்காக அந்த பாதையில் நான் மலர்களைத் தூவவில்லை என்று.