தொங்கும் தோட்டங்கள்., மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்., நதிகளில் நீந்தும் நகரங்கள் இவற்றில் சேகரமாகிறது ஆசை. புகைப்படங்களில்., திரைப்படங்களில் தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும். பசிய., கனிய தோட்டங்களும் தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும் நகரங்களையும் காண சேர்கிறது விழைவு, வேண்டுதல் முடிச்சைப் போல எடுத்துவைக்கும் பணம் போதுமானதாயில்லை வருடா வருடமும் வீங்கும் பணத்தால். மூட்டையான முடிச்சோடு பயணித்து அக்கம்பக்க மரம் கண்டு., நீர்ப்படகுச் சவாரி செய்வதில் களிக்கிறது மனது. வெனிஸ் நகரத்து வர்த்தகனாய்த் தோற்றமளிக்கிறான் அந்த ரெஸார்ட்டில் பாடி நடனமாடும் இளைஞன். […]
பிறந்தநாள் குழந்தைக்கு அணிவகுத்து வருகின்றன கரடி பொம்மைகள்.. கலர் சாக்குகளில் பொட்டலமாய் முடியிட்ட முடிச்சைப் பிடித்து கைபோன திசையெல்லாம் அசைக்கிறது குழந்தை. பிய்த்து உதிரும் பெயர் போக மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில் தொற்றி இருக்கும் அட்டையின் சில பெயர்கள் குழந்தையின் அம்மாவின் பிரியத்தை இழந்ததாய் இருக்கின்றன. அச்சத்தோடும்., கோபத்தோடும் வெறுப்போடும்., ஆதங்கத்தோடும் ஒதுக்கப்படும் அவை பெயர் அட்டை பிய்க்கப்பட்டு கட்டிலுக்குக் கீழ் இருக்கும் பழைய பெட்டியில் அடைக்கலமாகின்றன. இன்னொரு குழந்தையின் பிறந்தநாளுக்குப் பயணப்படுவதற்காக.
இரட்டைப்புள்ளிக் கோலங்களாய் ஆரம்பிக்கிறது., ஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை. குழந்தைப் புள்ளிகளைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள் ஊரளவு. பேரக்குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுமாய் புள்ளிகள் விரிகின்றன. எள்ளுப் பேரன்களின் வீரியக் குறைச்சலால்., எள் தெளித்தபடி வர.. சோற்றைத் தேடும் காக்கைகளாகின்றனர் முன்னோர்கள். அள்ளிச்சிதறிய பருக்கைகளாய் புள்ளிகள் குறைந்து வர காயதுவங்குகிறது தரை. குழந்தைப் புள்ளிகள் குறுகி குழந்தைகளற்ற இரட்டைப்புள்ளிகளாய் முடிகிறது கடைசி அப்பா அம்மாவின் வாழ்க்கை. வெறுமையுடன் தொடர்பற்று இருக்கும் அவர்கள் நெளிக்கோலங்களாய் சுற்றத் தொடங்குகிறார்கள் உறவுப்புள்ளிகளை. ஒரு […]
நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள். மனதில் அவர் அருந்தியதும் நிரம்பிய ரத்தச் சகதியில் அழுந்தத் தயாராகுங்கள். ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள். உங்கள் உரையாடல் ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது. ஓட ஓட அழுக்கடைகிறீர்கள். உணவுச் சத்துக் கொடுத்து உப்புச் சக்கையைப் பிரித்து மாசுச் சொல் சுமந்து.. உப்பை எடுத்ததால் நன்றியோடு இருக்கிறீர்கள். என்றும் உயிர்போல ஒட்டிக்கொண்டே இருக்கலாமென.. நிறைய அறைகள் இருக்கின்றன. ஓடிக்கொண்டே இருந்த நீங்கள் ஓய்வெடுக்கப் போகிறீர்கள். சிறுநீரக நெஃப்ரான்களில். அழுக்கடைந்து தேங்கிய உங்களை கனத்த […]
இறுக்கங்களுடன் பயணித்து வந்தேன். எப்படி இறுக்கம் தூர்ப்பதென அறியாமல். வினைகளை அற்று வீழ விரும்பினேன். வகிர்ந்து வகிர்ந்து வார்த்தைகளைத் தூவினாய். அதைப்பிடித்துக் கொடியாக வளர்ந்தேன். அவரை கொடிபிடித்து மேகம் துளைத்துப் பாதை அமைத்ததாய் இன்னொரு உலகம் இழுத்துச் சென்றாய் வானவில்லைப் பற்றி நடனமாடியபடி வந்தேன். சித்திரக் குள்ளர்களும் பழச்சோலையும் நி்றைந்திருந்தது. மாயாவிகளும் கௌபாய்களும் ததும்பிய கேளிக்கை அரங்குகள். பார்த்திபனின் கனவை குகை ஓவியமாக களித்தபடி தீப்பந்தத்தில். மூலிகைக் காற்றோடு ஓசோனை சுவைக்கத் தந்தாய் அமிர்தமாய். மூச்சு முட்டத் […]
என்னுடைய வாய்ப்பு அவளுக்கு வழங்கப்பட்டது நானே காரணமாயிருந்தேன் அதன் ஒவ்வொரு அசைவுக்கும். அவளை சிலாகித்தேன் அவளின் ஏக்கங்களை விவரித்தபடி. காற்றில் கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் புரவிப்பெண்ணாக அவள் உணரும் தருணங்களை.. ரேகைகளும் பாகைகளும் தொடாத அவளது ஆழிப்பேரலையான அனுபவத்தை விவரித்தபடி. விண்ணோக்கி நகரும் ஊர்தியில் அவளை ஏற்றியநான் ஏணிப்படியாயிருந்தேன்., மிதித்துச் செல்லட்டுமென. ஏற்றிவிட்ட பெருமிதத்தில் சுகித்தபடி இருந்தேன் என்னுடைய இடத்திலேயே என் வலியை ரசித்தபடி.
ஓடுகளாய். ஒரு சந்திப்புக்குப் பின்னான நம்பிக்கைகள் பொய்க்காதிருந்திருக்கலாம். தூசு தட்டித் தேடி எடுக்கப்பட்ட கோப்புகளில் இருந்து பெய்யும் எண்ணத் தூறல்களில் நனையாது இருந்து இருக்கலாம். எங்கோ அகதியாய் விட்டு வந்த நிலக்கோப்புகளை பராமரித்துப் பொடியாய் அடுக்காதிருந்திருக்கலாம். பழையனவற்றில் நனைவதும், மூழ்குவதும் தவிர்க்கயியலா போதுகளில் திசைவிட்டு திசை நகர்ந்து குடியிருப்பை அமைக்கும் சிலந்தியை காணுவதும் தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம். இதுதான் என தீர்மானித்தபின் உயிர்வாழ்வதும் மரணிப்பதும் ஓட்டுக்குள்ளே அடுக்கப்பட்ட ஓடுகளாய் சரியும்வரை. வேர் பாய முடியாத செடிகள்..:- ********************************************** நெருப்புப்பொறி பறக்க […]
தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50. விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள். மிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் […]
ராணி.. ************************** சேணம் பிடித்து பாயும் குதிரையின் பிடறி சிலிர்க்க தோல் பட்டியில் கால் மாட்டி எவ்வுகிறேன்.., முன்பின்னாக ஆடும் மரபொம்மைக் குதிரையில் கூட இல்லை.. திருவிழா ., தேரோட்டம்., புரவி எடுப்பு.. அணிவகுப்பு முடித்து அமைதியாய் உறைந்து அசைவு மறந்த ஐயனார் கோயில் மண் குதிரையில் ஆசையோடு அமர்ந்து.. ******************************************** பெண்ணாதிக்கம்.. ***************************** கருவறைக்குள் முடங்கிக் கிடந்த கோபமோ என்னவோ., கர்ப்பக்கிரகத்துள் அடக்கிப் போட்டாய்.. சில நூற்றாண்டுகளுக்கு முன் நிலவறையிலும்.. தீட்டென்றும் கற்பென்றும் கண் அறியா […]
ஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்கள் ஏராளம். தன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு ஜெயித்த ஒருவர் மற்ற பெண்களுக்கு ஆலோசனை சொல்லி உயர்த்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. கங்கை புத்தக வெளியீடு. விலை ரூ. 60. ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன். துணிந்துரையாக அணிந்துரை வெற்றி விடியல் […]