நதிகளில் நீந்தும் நகரங்கள்:-

This entry is part 28 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

தொங்கும் தோட்டங்கள்.,
மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்.,
நதிகளில் நீந்தும் நகரங்கள்
இவற்றில் சேகரமாகிறது ஆசை.

புகைப்படங்களில்., திரைப்படங்களில்
தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும்.
பசிய., கனிய தோட்டங்களும்
தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும்
நகரங்களையும் காண சேர்கிறது விழைவு,

வேண்டுதல் முடிச்சைப் போல
எடுத்துவைக்கும் பணம்
போதுமானதாயில்லை
வருடா வருடமும் வீங்கும் பணத்தால்.

மூட்டையான முடிச்சோடு பயணித்து
அக்கம்பக்க மரம் கண்டு.,
நீர்ப்படகுச் சவாரி செய்வதில்
களிக்கிறது மனது.

வெனிஸ் நகரத்து வர்த்தகனாய்த்
தோற்றமளிக்கிறான் அந்த ரெஸார்ட்டில்
பாடி நடனமாடும் இளைஞன்.

இரவுத் தூக்கத்தில் நதியில்
மிதக்கும் படகுகளோடு
நீந்தத் துவங்கு்கிறது
அவள் தங்கியிருந்த ரெஸார்ட்.

Series Navigationநேரத்தில் மனிதனின் நெடும் பயணம்பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *