குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது. முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் […]
திரு மேலை பழனிப்பன் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர். கரூரில் பல்லாண்டு காலமாய் வசித்து வருகிறார். அவருக்கு இந்தத் திருக்குறள் விழாவில் ( காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிகழ்ந்த 61 ஆம் ஆண்டு குறள் விழாவில் ) திருக்குறள் செல்வர் என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. {முதலில் முனைவர் குமரப்பன் பற்றிக் கூறி இவர் நகரத்தார்களின் முதல்வர் என்று சிறப்பித்துக் கூறினார்.கருத்தரங்கமும் கவியரங்கமும் காலையிலேயே நடைபெற்றிருந்தன. அதில் பழ கருப்பையா, பேராசிரியை விசாலாட்சி ஆகியோர் உரையாற்றி […]
61 ஆண்டுகளுக்கு முன் , எனது பெரிய மாமாவு( திரு . வ. சுப்பையா அவர்களுக்கு ) க்கு 20 வயது. இன்றைக்கு நடிகர் நடிகையருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அந்த வயதில் அவர்கள் திருக்குறட் கழகத்தை (குறள் ) இலக்குவன் போன்ற நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தார்கள். அந்தக் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவை எனது மூன்றாவது மாமா லயன் வெங்கடாசலம் அவர்கள் பொருளாளராக இருந்து சிறப்புற , களிப்புற, உவப்புற நிறைவேற்றினார்கள். அவ்விழாவினைக் காணும் […]
குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளின் ரசிகை நான். அதே போல் நடைவண்டி என்ற குழந்தைக் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாலசுப்ரமணியம் முனுசாமி வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் குழந்தைகள் பாடும் பாடல்கள். குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மென்மையை மேன்மையைப் பற்றியும் அதே சமயத்தில் வாழ்வின் ஆத்ம விசாரங்களையும் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அழகான கவிதைகளில் ரசனையோடு கொடுத்துள்ளார் ராமலெக்ஷ்மி. இரண்டு விருதுகள் இவரது முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்துள்ளன. அதுவே இத்தொகுதியின் சிறப்பைக் கூறும். முதல் கவிதை […]
இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறி வல்லுநர். ஆனாலும் சிங்கை மணற்கேணி நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்று சிங்கை சென்று வந்தவர். பல தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதும் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர். பல்வேறு பத்ரிக்கைகளில் கதைகள் கவிதைகள் எழுதி வருகிறார். லேடீஸ் ஸ்பெஷலில் நாட்டுப்புறப் பாடல்களை கிராமங்களுக்கே சென்று தொகுத்து வழங்கியது அருமை. இனி இவருடைய […]
கதை கேட்பது என்பது எந்த வயதிலும் நமக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி வந்தபின்னும் கதை படிப்பது என்பதும் அவ்வாறே சுவாரசியத்தைக் கூட்டுவதாகவே உள்ளது. கதை சொல்லப்படும் நேர்த்தியின் பாற்பட்டு வாசிப்பனுபவத்தை மட்டுமல்ல. அதைச்சுற்றிப் பின்னப்படும் கற்பனைகள் கொண்ட அக உலகை தனக்கு மட்டுமேயானதாக ஆக்குவதால் கதைகள் வாசித்தலின் சாரமும் வசீகரமும் என்றும் குறைதுவிடாமலே தொடர்கிறது என்னை. நர்சிமின் முதல் சிறுகதைத் தொகுதி இது இதன் பின் பல நூல்கள் வந்துவிட்டன. பல காலம் முன்பே […]
பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்கொடுமை தடுப்புச்சட்டம்னு ஒரு சில சட்டங்கள் பத்தி ஓரளவு விலாவாரியா தெரிஞ்சிருக்கும். ஆனா பெண் குழந்தை கருவில் இருப்பதிலிருந்தே அரசாங்கம் கொடுக்கும் பலவிதமான சலுகைகளையும் பெண்களுக்கான சட்டங்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம். முதலில் கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையா ஆண் குழந்தையா அப்பிடின்னு ஸ்கேன் செய்து சொல்வதால் […]
ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி விவரிக்கிறது.கவிதையின் கணங்களை பிரித்துக் காட்டுவது எனவும் சொல்லலாம். குட்டி ரேவதியின் காதலியரின் அரசி சாப்போவின் கவிதைகளை முன்வைத்து சுயமோகநிலையை வரைந்து காட்டுகிறது. சவுதிப் பெண் திரைப்பட இயக்குநர் ஹைபா எத்தனை இடையூறுகளுக்கிடையில் ஒரு இயக்குநராகப் பரிணமிக்கிறார் என்பதைச் சொல்லிச் செல்கிறார் பீர் முகமது. ஸ்டாலின் ராஜாங்கத்தின் […]
சுப்ரபாரதி மணியனின் வேட்டை சாய நகரத்தில் மனிதர்கள் வேட்டையாடப்படுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இவரது கதைகளில் திருப்பூர் சம்பந்தப்பட்ட பின்னலாடைத் தொழிலும் தொழிலாளிகளும் அவர்களின் வாழ்வியல் அவலமும் சுட்டப்படும். இந்த நூலிலும் அப்படித்தான். ஊர் விட்டு ஓடிவந்து சினிமாவுக்கு நடிக்கப் போகும் பெண்கள் பற்றிப் படித்திருக்கிறோம். இதில் வேலைக்காக ஊரைவிட்டு வந்த பஞ்சவர்ணம் தன் முன்னிற்கும் மூன்று விதமுடிவுகளில் எதற்கு இரையாகப் போகிறாள் என்ற பதட்டத்தை உண்டாக்குகிறது வேட்டை. மலையாளிகள் பற்றி எனக்கும் […]
டல்லாஸ் பையர்ஸ் க்ளப் என்றொரு படம் வந்து ஏகப்பட்ட ஆஸ்காரை அள்ளியது. அந்தப்படத்தைப் பார்த்தபின் தான் எய்ட்ஸ்க்கும் மருந்து இருக்கிறது தெரிந்தது. ஆனால். அது பல வருடங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகள். சலுகை விலையில் ஒரு கடையில் கிடைக்கும் என்றாலும் அந்த சொற்பப் பணத்திற்காக அந்த ஹீரோ படும் சிரமங்கள் கதையில் கண்ணீர் வரவழைக்கும். குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் என்றால் பெரியம்மை, கக்குவான் இருமல், போலியோ, தொண்டை அடைப்பான், நிமோனியாக் காய்ச்சல், டிஹைட்ரேஷன், மலேரியா, […]