தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம். தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு […]
நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாடமி விருது என்றால் உடனே லைப்ரரியில் அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடுவோமே. அப்படித் தேடியதில் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசித்துக் குறிப்புகள் எடுத்திருந்தேன். மும்பையில் 1924 இல் பிறந்த நிஸிம் […]
படைக்கப்பட்ட நிலம் அனைத்திலும் நடந்து களைத்திருக்கிறது போர். அதனூடே ஓடிக்களைத்தவர்கள் பல்வேறு தேசங்களில் ஓய்ந்தமர்ந்திருக்கிறார்கள். தனக்கான ஆயுதம் இதுதானென்ற வரைமுறையின்றி இயற்கைக் கூறனைத்தையும் இருகரம் நெருக்குகின்றது போர். அதன் காலடித் தடங்களில் நசுங்கிக்கிடக்கின்றன பால் புட்டிகளும் சயனைடு குப்பிகளும். சுமக்கமுடியா சவங்களுடன் புலம்பித் திரியும் போரின் முதுகிலமர்ந்து தங்கள் ஆயுதங்களைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள் ஆயுத வியாபாரிகளும் போதை வியாபாரிகளும். கண்கள் தொலைந்து கைகளும் கால்களும் இழந்து இரத்தம்தோய்ந்த பிணங்களின்மேல் விழுந்து அழுதுகொண்டிருக்கிறது யுத்தம்.
கவிஞர் தான்யாவின் இக்கவிதைகள் சாகசக்காரி பற்றியவை மட்டுமல்ல. மதம் இனம் மொழி கலாச்சாரம், காதல், பிரிவு தனிமை தேசம், குடும்பம் சார்ந்து சாகசக்காரியைப் ”பற்றியவை பற்றி” அவரின் மொழியில் ஒரு சரளமான வெளிப்பாடு. புலம்பெயர் பெண்களின் கவிதைகளில் தான்யாவின் கவிதைகள் குடும்ப உறவில் உள்ள முரண்களைப் பதிவு செய்கின்றன. குடும்பம் ஒரு அதிகார மையமாகத் தன்னைக் கட்டுப்படுத்துவதையும் அதையும் மீறி அந்த சாகசக்காரி சாதிக்க முயல்வதையும் தன்னுடைய கவிதை மொழியில் சொல்லிச் செல்கிறார் […]
அம்பையின் காட்டிலே ஒரு மான் பற்றிப் படித்தபோது எனக்கு எங்கள் ஃபாத்திமா அம்மா சொல்லும் ஒரு கதை ஞாபகம் வந்தது. ஒரு பெரிய கானகத்தில் அருவி பொழியும் அடர்வனத்தில் ஒரு மான்குட்டி துள்ளிக்குதித்து ஆடிக்கொண்டிருந்தது. மிக அழகிய பெரிய கண்களும் புள்ளிகள் வரைந்த உடலும் கொண்ட ஓவியம் உயிர்பெற்றது போல இருந்தது அது. ஏதோ ஒரு நறுமணம் அதன் நாசியைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது துள்ளிக்குதித்துக் காடுமுழுதும் […]
டாக்டர் கே என்று அறியப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்நாள் முழுவதையும் வனவிலங்குகளான யானைகளின் நலனிலும் அவற்றுக்கான மருத்துவத்திலுமே அர்ப்பணித்துள்ளார். இதை ஜெயமோகனின் கதையாகப் படிக்கும்போது மலைகளுள்ளும், காட்டிலும், யானைகளின் அருகிலும் வனாந்தரத்தின் எழிலிலும் இருப்பதை உணர முடிகிறது. அதே போல அங்கே இருக்கக்கூடிய எளிய அரிய விஷயங்களையும் மக்கள் வாழ்வியலையும் பகிர்ந்து போகிறார். வனத்துறை உயர் அதிகாரியின் பார்வையில் வனமும், யானைகளும் டாக்டரின் மருத்துவமும் சொல்லிச் செல்லப்படுகிறது. வனம் சார்ந்த வாழ்வியலையும் யானைகளையும் ( அவற்றின் […]
த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும். எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம் அத்தைக்கு கே ஆர் விஜயா சாயல் அதிகம் இல்லாவிட்டாலும் அந்த சுருட்டை முடி உண்டு. […]
காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ, காந்தி அடிகளின் சிலை இல்லாத தமிழக நகரங்களைப் பார்ப்பது அரிது. காந்தி கனவுகண்ட தேசத்தை அமைக்கிறோம் என்பதில் முதலில் தீண்டாமை இல்லாத தேசத்தை அமைத்தல் முக்கியம் எனக் குறிப்பிடுகிறார் திருமலை தன்னுடைய காந்தி தேசம் என்ற நூலில். புதிய தரிசனத்தில் வந்த பதினான்கு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு காந்தி தேசம் என்ற நூலாக 2013 இல் வெளிவந்திருக்கிறது. பரபரப்புத் தகவல்களையும் சினிமா நிகழ்வுகளையும் எளியமக்களின் அந்தரங்க வாழ்வையும் பலர் காணக் கேலிக்கூத்தாகப் […]
வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் யாராவது ஒருத்தர் ரோல் மாடலாக இருந்திருப்பார்கள். சிலருக்கு அவர்கள் குடும்பங்களில் இருப்பவர்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு சாதனை புரிந்தவர்கள். வெற்றிபெற்ற ஒவ்வொருவரின் பின்னும் ரோல்மாடல்களின் பங்கு கட்டாயம் இருக்கும். இந்நூலில் தம் உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்த 21 பேரின் சாதனைக் கதைகள் ரோல்மாடல்களாக விரிகின்றன நம் கண்முன்னே. முன்மாதிரிகள் என்பவர்கள் எப்படியும் இருக்கலாம்தானே. அது போல் இந்நூல் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வெற்றிக்கதைகளையும் கூறுகிறது. சூழ்நிலையைக் கடந்து […]
அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா. அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில் அவளைக் காணாமல் புருபுருத்துக் […]