சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ள,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது. மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம் சார்ந்தவைதான். மிகப் பெரும்பாலும் ஒரு ஆணின் பார்வையிலும் ஓரிரு கதைகள் மட்டும் பெண்களின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் வரும் கதைகள் எல்லாம் விசித்திரம் நிரம்பியவை. யாராலும் புரிந்து கொள்ள முடியாத மந்திரப் பேழை போல […]
சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர். என்று ஒரு படத்தில் ரஜனிகாந்த் பாடுவார். அது உண்மை எனச் சொல்கிறார் திருமதி சௌந்தரநாயகி வைரவன் தன்னுடைய சிங்கப்பூரில் தமிழ், தமிழர் என்ற தன்னுடைய புத்தகத்தில். 2010 ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை குமுதம் தீராநதியில் வெளிவந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முனைவர் சுப திண்ணப்பன், இராம. கண்ணபிரான் , இலியாஸ், சாந்து ஆகியோரின் துணையுடன், அவர்களின் நூலின்/இணையங்களின் துணையுடன், இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் […]
மீளமுடியாத ஒரு சிறைக்குள் நாமெல்லாம் மாட்டிக் கொண்டிருப்பது போல ஒரு கனவுச் சித்திரத்தை அங்கங்கே உண்டுபண்ணுகிறது மதிலுகள். பெண்ணின் வாசனை கூட ஒரு மதில்தான். மீளமுடியாத மதில். அது காதலியின் வாசனையாய் இருக்கலாம். அல்லது மனைவியின் ஏன் அம்மாவினதும் கூட. இந்த வாசனைகள் எழுப்பும் சிறைகளைத் தாண்டி ஒரு ஆணால் எப்போதுமே பயணிக்க முடிந்ததில்லை. விடுதலை பெற முடிந்ததில்லை. உலகம் என்னும் பிரபஞ்சம் என்னும் இன்னொரு சிறைக்குள் அடைபட்டே அலைகிறான் வாழ்நாளெல்லாம். ஒரு சிறை கூட பெண் […]
கவிதாவஸ்தை வந்து எழுதும் கவிஞர்கள் மத்தியில் கவிதைகளை சுகமாகப் படிக்க முடிவது பத்மஜாவின் எழுத்துக்களில்தான். வலைப்பதிவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கவிஞர் பத்மஜா. தனிமையும் அன்பும் பரிவும் நிரப்ப இயலாத வெற்றிடங்களும் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளில் மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் இப்போதெல்லாம் பாதைகள் இருண்டு கிடப்பது குறித்து பெரும் சோகத்தைக் கிளர்விக்கிறது. நாய்க்குடைகள் மலர்வது சிறுமியின் பருவமாற்றத்தை சட்டென்று புரிய வைக்கும் கவிதை. ஓவியப் பார்வையை ஓவியக்கண்காட்சிகளில் நாம் யோசித்து யோசித்துப் பார்க்கும் ஒரு ஓவியத்தின் மீதான மனிதர்களின் […]
புதுவையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியம் 5 நூல்கள் வெளியிட்டுள்ளார். தன் பிள்ளைகள் இளம்பரிதி, அன்பன் ஆகியோரின் பெயரை இணைத்து பரிதியன்பன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். புதுவை அரசால் இவரது புத்தகங்கள் விருதுகள் பெற்றுள்ளன. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவிற்குப் பிறகு நான் இவரின் சிறுவர் பாடல்கள் புத்தகம் படித்து மகிழ்ந்தேன். சிறுவர் பாடல்கள் ”சிட்டுக் குருவி, நடைவண்டி” என இரண்டு புத்தகங்களும். ”அரைக்கீரை விற்கிறான் அம்பானி” என்ற ஒரு துளிப்பா புத்தகமும்., வாழப்பிறந்தோம் மற்றும் வெள்ளைத்திமிர் என்ற […]
மொழிபெயர்ப்பு நூல்களின் தேவை அதிகமான காலகட்டம் இது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலும் தான் சார்ந்த மண்ணின் மணத்தையும். தன் மொழி வளத்தையும் சுமந்து வந்து நமக்கு அந்த மண்ணை நுகரச் செய்யும் அழகான முயற்சி.அந்த முயற்சியில் மிகச் சிறப்பாகச் சாதித்துவரும் திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் அவர்களின் அருமையான நடையில் வெளிவந்துள்ள நூல் “ வனக்கோயில்”. ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் “ அடவி” என்ற கன்னடப் புதினத்தைத் தமிழில் வனக்கோயில் என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார். இவர் கிட்டத்தட்ட […]
மனைவி சொல்லே மந்திரம்னு சிலர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவங்களுக்கும் மேனேஜ்மெண்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என சிலர் கேட்கலாம். வீட்டை பொறுப்பா நிர்வகிக்கிற தன்னோட மனைவிகிட்ட இருந்து தன் அலுவலக மேலாண்மை நிர்வாகத்தைக் கத்துக்கலாம்னு சொல்றார் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஷாரு ரெங்கனேகர். தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்தவர் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். பொதுவா ஆண்கள் பெண்கள் கிட்டேருந்து இதை கத்துக்கலாம் அதைக்கத்துக்கலாம்னு சொன்னா ஒப்புக்கவே மாட்டாங்க.. எல்லாம் தங்களுக்குத் தெரியும்னு நினைப்பாங்க. ஆனால் இந்த நூலில் […]
விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது. காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு […]
இலக்கியச் சிற்றிதழ்கள் பல வருகின்றன. அவற்றுள் மெய்ப்பொருள், கனவு, குலவை, காலம், அகநாழிகை, கணையாழி போன்றவையும் விஞ்ஞான இதழாக துளிரும், வணிகம் சம்பந்தமாக வணிகக் கதிரும் சிறப்பாக இருக்கின்றன. மாதம் ஒரு முறை வெளியாகும் ”துளிர்” இதழ் குழந்தைகளுக்கான விஞ்ஞானத்தகவல்களைத் தருகிறது. ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்காக நடக்கும் அறிவியல் மாநாடு, மற்ற அறிவியல் செய்திகள், அயோடின் பற்றி, குளிர்காலம் பற்றி, பூதாகாரமாய் வெளிப்படும் கார்பன் பற்றி ( இதில் இந்தியா 7 ஆம் இடத்தில் வருகிறது), உணவுப் […]
புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துச் சென்று புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்தலில் என்ன நன்மையோ, தீமையோ ஆனால் நிறைய பெண் படைப்பாளிகளையும் அது உருவாக்கி இருக்கிறது. தங்களோடு எடுத்து வர முடியாத தாய் மண்ணை தொட்டுணர விரும்பும் ஆசை ஒவ்வொருவர் எழுத்திலும் வெளியாகிறது. பூவரசி காலாண்டிதழ் அந்த மக்களின் புலம் பெயர்தலுக்குக்கும் பின்னான வாழ்வை, போருக்குப் பின்னான ஈழத்தைப் பேசுகிறது. ஈழவாணியின் பூவரசி புனைவும் நிஜமும் என்ற இணையம் நடத்தி வருகிறார். அது இப்போது […]