வடமொழி நாடக ஆசிரியர் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளிதாசனுக்கு முற்பட்டவர் என்பதில் கருத்து வேறுபாடில்லை. மாளவிகாகினிமித்திரத்தில் பாசாவைப் போற்றி காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. நல்ல சிற்பங்களையும் ,ஓவியங்களையும் செதுக்கிய கலைஞனை விட அவன் படைப்புகளே சாஸ்வதமாகி நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை படைப்பாளியின் சுய வரலாற்று விளக்கங்கள் முக்கிய இடம் […]
இந்தி : அவத் நாராயன் சிங் தமிழில் : முனைவர் தி.இரா.மீனா “உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உங்களிடம் ஆலோசனை கேட்க விரும்புகிறேன் “அவன் மிக இயல்பாகச் சொன்னான். அறிமுகமில்லாத அந்த மனிதனின் பேச்சு என்னைச் சிறிது ஆச்சரியப் படுத்தியது.”எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் ” நான் மிக பணிவாய்ச் சொல்லி விட்டு “நாம் பரிச்சயமானவர்களா?”என்று கேட்டேன். “பரிச்சயம் என்றால் உங்கள் பார்வையில் என்ன பொருள்?” நான் உடனடியாக எந்த விளக்கமும் தராமல் அமைதியாக இருந்தேன்.ஒரு திருப்தியான பதிலைப் […]
ஆங்கிலத்தில்:ஜெய் நிம்கர் [மராத்தி மொழி எழுத்தாளர்] தமிழில்: முனைவர் தி.இரா.மீனா வேர்வை கூந்தலின் ஊடே கோடாய் வழிய ,சேலையை இடுப்பில் செருகியபடி நீலம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. வசந்த் கதவைத் திறந்து கொண்டு வந்தான். “நீலம் எங்கே இருக்கிறாய்” “ஏன் சஞ்சுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னவாம் ” “முடித்து விட்டாயா? கேட்டவனின் குரலில் அத்தனை பதட்டம் தெரியாவிட்டாலும் ஏதோ சிக்கல் என்று புரிந்தது. “குழந்தைக்கு டிரஸ் போட்டு விடு ” வேலைக்காரப் பெண்ணிடம் […]
வட மொழி இலக்கிய உலகில் சிறந்த நாடக ஆசிரியராகக் கருதப்படும் பாசாவின் நாடகங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கண்டு பிடிக்கப் பட்டாலும் பாசா மறக்கப்படாமல் போற்றப்படும் மரபு அவர் படைப்புகளின் சிறப்பை உறுதி செய்கிறது. பாசாவின் 13 நாடகங்கள் என்று அழைக்கப் படும் படைப்புகள் பெரும்பாலும் மகாபாரதக் கதைகளையே மையம் கொண்டுள்ளன. பிறப்பு மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. வளர்ப்பும், சுற்றுப்புறச் சூழலும் , பழக்கமும் தான் எல்லாச் சிந்தனைகளுக்கும் தூண்டுகோல் என்பது இன்றைய உளவியலாளர் வாதம். நூற்றாண்டுகளுக்கு […]
ஆன்மீக நாட்டத்திற்கும் ,தேடலுக்கும் உரிய வழி முறைகளில் பக்தி பரவலாகவும்,எளிதாகவும் அமைகிறது. தத்துவ விவாதங்களில் சிக்காமல் கடும் பயிற்சிகளில் ஈடுபடாமல் பக்தி என்ற சாதனம் மூலம் இறையருளைப் பெற முடியும். படித்தவர்கள், ஞானம் உடைய வர்களால் மட்டுமே அணுக முடியும் என்பது இறைக் கொள்கையாக அமையும் போது இறைவன் பாமரர்களால் ,சாதாரண மனிதர்களால் அணுக முடியாதவனாகிறான்.ஞானிகளால் மட்டுமே அறியப் படுகிற வனாக அவன் இருப்பதில் பயனில்லை. சாதாரண மனிதன் கடவுளை அணுக முடிவது, அடைய முடிவது பக்தி […]