அவன் இவன் அவள் அது…!

அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச்…

பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்

சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆனாலும் இந்த ஆண்கள்…

ஓய்வு தந்த ஆய்வு

தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இது எல்லாருக்கும் தெரிந்தது? அப்படி அப்படியே பேச்சோடு பேச்சாகப் பரவி விடுமோ? யாரேனும் ஒருவர் சொல்ல, அவர் இன்னொருத்தருக்குச் சொல்ல…அவர்…

மனக் குப்பை

யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல. நல்லது எங்கிருந்து வந்தாலும், எவரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். நியாயம் நியாயம்தானே? யார் சொன்னால் என்ன? எவர் வாயிலிருந்து…

வாசிப்பும் வாசகனும்

வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர ஜீவ ராசிகளை, இயற்கையை இப்படி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் ஒரு தேர்ந்த வாசகனாக முடியும் என்று சு.ரா.…

இதுதான் உலகமென

“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….” எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் ஒருவர் இடித்தும்…முன்னிற்பவரை அமுக்கியும், லேசாகத் தள்ளியும், கிடைக்கும் இடுக்கில் நுழைத்து விரல்களை உதறிக் கொண்டே நீளும் கைகள். எல்லாருக்கும்…

”மாறிப் போன மாரி”

எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன் விளையாட்டில் படு விளையாட்டுத்தனமாக இருந்தான் என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். அவன் இப்போது மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர். வெறுமே விளையாடிட்டிருந்தவன்ட விளையாட்டா…

ஜீ வி த ம்

“தமிழு....தமிழு...” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்...சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம். “ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு...தமிழுங்குறே...? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு…

பேக்குப் பையன்

துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன். எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு சத்தம் கொடுப்பா’ என்று அக்கறையாக நான் சொல்லியிருந்தேனோ அதைப் பொருட்படுத்தாமல் அவனே ப+னைபோல் பதுங்கினால்? தற்செயலாக நான் எழுந்துவர அடர்ந்து தலை…

மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்

அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது.…