உஷாதீபன்

அப்பா…! அப்பப்பா…!!

This entry is part 2 of 54 in the series 4 செப்டம்பர் 2011

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் அப்பாவின் அடையாளம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவரை நினைவுபடுத்துவது தன்னின் ஒவ்வொரு செயல்களும்தான். அப்பாவைத் தவிர்க்கவே முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் அவருடைய நினைவுகளை விட்டுத் தாண்டவே முடியாது என்றுதான் தோன்றியது. கூடவே இருந்து வழி நடத்துகிறார். அதுதான் உண்மை. அத்தனை எளிமையான வாழ்க்கையில் ஒரு மனிதன் தனக்கான அடையாளங்களாய் இவ்வளவையும் விட்டுச் சென்றிருக்க முடியுமா என்பதுதான் ஆச்சரியம். எந்த எதிர்பார்ப்புமற்ற மிக எளிமையான ஒருவனின் வாழ்க்கை தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்கிறது. […]

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்

This entry is part 1 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன். கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி […]

அம்மாவின் மனசு

This entry is part 1 of 46 in the series 5 ஜூன் 2011

அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம்.       அந்த மாதிரி ஒரு அப+ர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா? அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி? சந்தோஷமான வாழ்க்கையில் அங்கங்கே சோகமும், துக்கமும், இழையாடுவது உண்டு. ஆனால் வாழ்க்கையே சோகமென்றால்? கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த […]