உஷாதீபன் அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் […]
உஷாதீபன் (ushaadeepan@gmail.com). என்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல…. சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை. பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும். அதுவுமில்லை. ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று […]
உஷாதீபன் ரமணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா? தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ? ஏம்ப்பா இப்டித் […]
உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன்.இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் தெரியாது. […]
ரொம்ப வருஷம் கழித்து அவன் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்தபோதுதான் அவளைப் பார்த்தான். அவளும், தான் வேலை பார்க்கும் துறையிலேயேதான் பணியாற்றுகிறாள் என்ற விபரமே அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. அதுவே அவளிடம் கொஞ்சம் நெருங்கிவிட்டதைப் போலத் தோன்றி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை வருஷம் பார்க்காமல் இருந்திருந்தாலும், இப்போது பார்க்க நேர்ந்ததில் ரொம்பவும் நெருக்கமாக உணர்ந்தான். எதற்காக இப்படித் தோன்றுகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, ஊரில் இருக்கையிலேயே அவள் அழகு தன்னை வசீகரித்திருந்ததும், இவளெல்லாம் எங்கே தனக்குக் கிடைக்கப் […]
உஷாதீபன் தினமும் காலையில் யோகா வகுப்பிற்குச் சென்று வரும் நான் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வது உண்டு. அம்மாதிரி நேரங்களில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, என் நடைக்கு உகந்த இடங்களாகக் கொண்டு வழக்கமாகச் சென்று வருவேன். வாகனங்களின் இரைச்சல் அதிகமில்லாத, குறுக்கீடுகள் இல்லாத பகுதியாக என்பது கூடத் தொடர்ந்த நடைப் பயிற்சி அனுபவத்தின்பாற்பட்டுத்தான். ஒரு சிறு விஷயத்திற்குக் கூட நமக்கு அந்தந்தச் செயலுக்கேற்றாற்போல் அனுபவம் தேவைப்படுகிறது. அப்படியானால்தான் நாம் அதிலே மன நிம்மதியை […]
உஷாதீபன் ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் […]
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு) கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா? தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா? என்னதான் கலாரசனையோடு, காதல் மொழியை, காம உணர்வுகளை விவரித்தாலும்…. ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்திற்கும் அழியா கலாசார சம்பிரதாயங்களை இகழ்வதில்லை. மனித மேன்மைக்கு உதவும் நல்லியல்புகளைப் புறந்தள்ளுவதில்லை. மனித உணர்ச்சிகளின்பாற்பட்ட தடுமாற்றங்களுக்காக, அடிப்படை […]