ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கிநகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின்மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இவற்றை வாசிக்கும்படி கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம். இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான்மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் அடிப்படை […]
-வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் […]
வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு […]
தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது […]
எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் […]