author

அமைதி

This entry is part 4 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

வளவ. துரையன் இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, “அம்மா”என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தான் வரதன். வீடே அமைதியாக இருந்தது. அவன் இல்லம் எப்பொழுதும் இப்படி இருக்காது. அம்மாவிற்கு வானொலி கேட்பது மிகவும் பிடிக்கும். அது காலை முதல் அலறிக்கொண்டே இருக்கும்.புரிகிறதோ இல்லையோ அம்மாவிற்கு அது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.“ஏம்மா இப்படி” எனக் கேட்டால் ”அந்த சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தா வீட்ல யாரோ தொணைக்கு இருக்காங்கன்னுக்கு எனக்கு நெனப்பு” என்று அம்மா சொல்லிவிட்டாள்.அம்மா […]

மௌனத்தோடு உரையாடல்

This entry is part 10 of 10 in the series 14 ஜுலை 2024

                                                                                         —-வளவ. துரையன்                         மௌனத்தோடு                           பேசிக்கொண்டிருக்கிறேன்.                           அதற்குச் சைகை மொழிதான்                           பிடிக்கும்.                          எப்பொழுது அழைத்தாலும்                          வந்து சேர்ந்துவிடும்.                          எதிர்வார்த்தைகள்                          ஏதும் பேசாது.                          ஆழத்தைக் காட்டும்                          தெளிவான நீர்போல                          மனம் திறந்து காட்டும்.                          சில நேரம் ஆர்ப்பரிக்கும்                          அலைகள் போலவும்                          கூக்குரலிடும்.                          அதன் செயல்களுக்குக்                          காரணங்கள்                          கேட்பது அறிவீனம்.                          விளைவுகளுக்குப் பின் […]

தெரு நாய்

This entry is part 9 of 10 in the series 14 ஜுலை 2024

                                               வளவ. துரையன்                               வேண்டும் வேண்டும் வேண்டும்                                 வாழ்க வாழ்க வாழ்க                                 ஒழிக ஒழிக ஒழிக                                இவை போன்று                                ஒவ்வொரு இடங்களிலும்                                தனித்தனியாகக் கூட்டங்கள்                               கோஷங்கள் போட்டார்கள்.                               பேருந்துகளில் மனிதர்கள்                               மிகக் கவனத்துடன்                               பார்த்தபடிச் செல்கின்றனர்.                              பிச்சைக்காரர்கள்                              நின்று நோக்கியபின்                              நகர்ந்து போகிறார்கள்.                              அங்கங்கே தேநீரும்                              குளிர்பானமும்தான்                              போட்டிபோட்டுக்கொண்டு                                                       அழைக்கின்றன.                              கூட்டங்களில் […]

குலதெய்வம்

This entry is part 7 of 8 in the series 21 ஏப்ரல் 2024

                                வளவ. துரையன்  இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.

கிளறுதல்

This entry is part 6 of 6 in the series 14 ஏப்ரல் 2024

வளவ. துரையன் குப்பையைக்கிளறினால்தான்கோழிக்கு இரைகிடைக்கிறது.அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவனசிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும்.அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும்அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ?இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா?அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன.நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதைநாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.

அனுபவம்

This entry is part 6 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வளவ. துரையன் மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு.இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன.தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டதுஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோஎன்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும்.அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது.அதை அனுபவிப்போம்

வாக்குமூலம்

This entry is part 5 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

நெடுநல்வாடை

This entry is part 4 of 4 in the series 31 மார்ச் 2024

நெடுநல்வாடை பத்துப் பாட்டு நூல்களில் ஏழாம் இடத்தில் வைத்து எண்ணப்படுவது நெடுநல்வாடை ஆகும். இதனைப் பாடியவர்  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எனும் புலவர் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலவனாக  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் திகழ்கிறார். இந்நூல் அகவற்பாவால் இயற்றப்பட்டதாகும். மொத்தம் 188 அடிகள்கொண்டு இது விளங்குகிறது. இந்நூலை இயற்றியவரின் இயற்பெயர் கீரன் என்பதாகும். ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என வழங்கப்படுகிறது. திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே.  இவர் […]

இலக்கிய முத்துகள்

This entry is part 1 of 4 in the series 24 மார்ச் 2024

                                    பாச்சுடர் வளவ. துரையன் [திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி” இலக்கிய நோக்கில் எளிய உரை”-நூலாசிரியர் முனைவர் ஏ.வி. ரங்காச்சரியார்—வெளியீடு:அருள்மாரி அருளிச்செயல்  ஆய்வகம், ஸ்ரீ வேங்கடார்ய குருகுலம், 151, மேல வீதி, சிதம்பரம், ஸ்ரீமந் நாதமுனிகள் 1200 அவதார ஆண்டு திருநக்ஷத்திர வைபவ வெளியீடு—பக்-409—விலை குறிப்பிடப்படவில்லை]  இந்நூலின் தோரண வாயிலில் திருமங்கையாழ்வார் பாடியுள்ள பல்வகை இலக்கணத்துறைகளை முனைவர் ஏ.வி. ரங்காச்சாரியார் அவர்கள் விரிவாக எடுத்து வியந்தோதி இருக்கிறார். மாலை, பிள்ளைத் தமிழ், ஊடல், சாழல். அந்தாதி, […]

வாக்குமூலம்

This entry is part 2 of 4 in the series 11 பிப்ரவரி 2024

வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.