author

மரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]

This entry is part 16 of 23 in the series 14 டிசம்பர் 2014

ரஸ்கின்பாண்ட் (மரங்களின் மரணம்    – ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ) ஒரு குளிர்காலத்தில் ‘ மேப்பில்வுட் ’ மலைப்பக்கத்தில் இருந்த அமைதியும் நிதானமும் எப்பொழுதும்  இல்லாதபடி மறைந்துவிட்டன. அரசாங்கம் மலைகளுக்குப் புதிய சாலை அமைக்கத் தீர்மானித்து விட்டது. பொதுப்பணித்துறையானது வீட்டின் வலப்பக்கத்தில்,நான் காட்டை நன்றாகப் பார்க்க வசதியாய் இருந்த ஜன்னலிலிருந்து ஆறு அடி தூரத்தில்  அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணியது. என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதினேன்:  அவர்கள் பல மரங்களை வெட்டிவிட்டார்கள். முதலில்  […]

அளித்தனம் அபயம்

This entry is part 8 of 23 in the series 30 நவம்பர் 2014

இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். அப்பொழுது வீடணன் “பெருமானே, […]

பட்டிமன்றப் பயணம்

This entry is part 3 of 22 in the series 16 நவம்பர் 2014

வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் பேசுவோம். பேசுபவர்கள் ஏழு பேர் என்றால் எங்களுடனேயே கேட்பதற்கும் நான்கைந்து பேர் வருவார்கள். வளவனூர் கடைத்தெருவில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எங்கள் கூட்டத்தைப் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே “ஜமா இன்னிக்கு எந்த ஊரு போவுது?” என்று கேட்பார்கள். அப்பொழுது இலக்கிய வெறி பிடித்து அலைந்த காலம்; எல்லாரும் பேச்சுப் பயிற்சி பெற்ற காலம். […]

அருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

  தயரதன் மதலையாய் மண்ணுலகில் வந்து தோன்றிய இராமன் தந்தையின் ஆணை என்று தாய் சொன்ன வார்த்தை கேட்டு தரணி தன்னைத் தீவினை என்று நீக்கி வனம் புகுந்தான். அங்கே மாயமானைப் போகச் செய்து இலங்கை வேந்தன் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். மாயமானை வதம் செய்து விட்டு வந்த இராமன் இலக்குவனுடன் சேர்ந்து பிராட்டியைத் தேடும் போது வழியில் ஜடாயுவின் மூலம் நடந்தவை அறிந்தான் அனுமனின் வழியாய் சுக்ரீவனின் நட்பைப் பெற்று வாலியை வதம் செய்து […]

தவறாத தண்டனை

This entry is part 13 of 16 in the series 26 அக்டோபர் 2014

    பள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் புத்தகத்தைக் காணோம் ஐயா; ஆறுமுகம்தான் எடுத்திருக்கணும்” ”எப்படி சொல்ற?” என்று கேட்டேன். ”என் பை பக்கத்துல அவன்தான் ஒக்காந்திருந்தான். நான் வெளியே போயிட்டு வந்தா புத்தகத்தைக் காணோம்.” ”சரி; போய் ஆறுமுகத்தை அழைத்து வா; கேட்போம்” என்றேன். அழைத்து வரப்பட்ட ஆறுமுகம் தான் எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அவன் […]

உன் மைத்துனன் பேர்பாட

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

வளவ. துரையன் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தங் கமழும் குழலி கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். இது ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம். இதற்குமுன் பதினேழாவது பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, பலராமன் ஆகியோரை ஆயர்பாடிப் பெண்கள் எழுப்பினார்கள். கண்ணனை முன்னிட்டு அவர்களை […]

மரபுக்குப் புது வரவு

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  —பாச்சுடர் வளவ. துரையன் [சந்தர் சுப்ரமணியனின் ‘நினைவு நாரில் கனவுப்பூக்கள்’ தொகுப்பை முன்வைத்து] எனது மரபுக் கவிதைகளை நூலாக்கலாமா என்றுபேசிக்கொண்டிருக்கையில் என் நெருங்கிய நண்பரான நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் “யார் அதைப் படிப்பார்கள்” என்று கேட்டார். ஆனால் மரபுக் கவிதைகள் எப்பொழுதும் நிலைத்து நிற்கக்கூடியன. அதனால்தான் பாரதியும் அவர் தாசனும் இன்னும் வாழ்கிறார்கள். இன்றும் பல இதழ்கள் மரபுக் கவிதைகளை வெளியிடுகின்றன. மரபுக் கவிதைக்கென்றே சில இதழ்களும் வெளிவருகின்றன. ஒருமுறை மேலாண்மை பொன்னுச்சாமியுடன் பேசிக் […]

வள்ளுவரின் வளர்ப்புகள்

This entry is part 3 of 25 in the series 5 அக்டோபர் 2014

  செந்நாப்போதார் திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் பலவிதமான உயிரினங்களைப் பல்வேறு இடங்களில் உவமையாகக் காட்டி உள்ளார். எந்தெந்த இடங்களில் எவ்வெவற்றை எவ்வெவ்வாறு பயன்படுத்துகிறார் என்று சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யானை: வள்ளூவர் முதலில் யானையை எவ்வாறு காட்டுகிறார் என்று பார்ப்போம். திருவள்ளுவர் யானையைக் குறிக்குமிடத்து, ‘களிறு’ ’யானை’ என்றே குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் ‘பிடி’ என்று பெண் யானையைக் கூறவே இல்லை. வள்ளுவர் முதலில் காட்டும் யானை மிக மிகக் கொடியது. பாகனுக்கும் எளிதில் அடங்காதது. […]

இரண்டாவது திருமணம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

ஜானவாச ஊர்வலம் கிளம்பிவிட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சின்ன கார். சுற்றிலும் கேஸ் லைட்டுகள். அடுத்துப் பெண்களும் அடுத்து ஆண்களும் தெருவை அடைத்துக் கொண்டு சென்றது ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தது. மாப்பிள்ளை சந்திரன் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் கார் நிறையக் குழந்தைகள். அக்குழந்தைகளின் நடுவில் சந்திரனின் ஐந்து வயது மகன் குமாரும் உட்கார்ந்திருந்தான். ”ஏன் சார், இது இரண்டாவது கல்யாணம் தானே?” “ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” ”இல்ல, ஜான்வாசம்லாம் எதுக்குன்னு கேட்டேன்.” என்று […]

அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்

This entry is part 2 of 27 in the series 21 செப்டம்பர் 2014

உலகம் தோன்றிய நாள் தொட்டே அதிகாரம் என்ற ஒரு போதை ஒரு சிலரை ஆட்டிப் படைக்கிறது. அந்த அதிகாரம் என்பது இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செலுத்தப்படும்போது ஒரு அரசியலில் புகுந்து தகுதி இல்லாதவர் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து  அவர்களால் கையாளப்படும் நிலையில் பொது மக்கள் எல்லாருமே அந்த அதிகாரம் எனும் பூதத்தின் வாயில் வீழ்கிறார்கள். அதிலும் பதவி என்ற பேய் பிடித்து அதிகாரச் சவுக்கு கையில் எடுத்து சுழற்றப் படுகையில் மிகச் சாதாரணமான […]