வளவ. துரையன் என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்.அவர் சிரித்துநான் பார்த்தது இல்லை.தொலைக்காட்சி நகைச்சுவைகள்அவருக்குத் துளிக்கூடச்சிரிப்பை வரவழைக்காது.என் அப்பா மிகவும்சத்தம் போட்டுச் சிரிப்பார்.என் அண்ணனோஎப்பொழுதும் புன்சிரிப்புதான்.அக்காவோஆடிக்கொண்டே சிரிப்பாள்.தாங்க இயலாமல்ஒருமுறை கேட்டதற்குஅம்மாசொன்னார்“நான்தான் சிரிப்பாசிரிக்கறேனே போதாதா?”
வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து கரும்பறைக்கும் இயந்திரமாக மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும் சமையல் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு சோற்றுப் பருக்கையாய் நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது என்று தெரிந்திருந்தும் […]
வளவ. துரையன் வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவதுபோல அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை நம்பியா வைத்தேன் அம்மாவை நம்பித்தானே அம்மா இல்லையா?
வளவ. துரையன் அந்த முச்சந்திக்கு வேறு வேலையில்லை. எல்லாரையும் முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததை எடுத்து வருவார்களா என எல்லாக்கால்களையும் பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடை போணியாகி விற்றுவிடாதா என்றேங்கும் பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியை இழுக்க முடியாமல் அடிகள் வாங்கி இழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டு அடம்பிடிக்கும் அறியாச்சிறுவனை அனைத்தையும் பார்த்துப் பார்த்து அதுவும் வாழ்வினைக் கற்றுக் கொள்கிறது.
வளவ. துரையன் என் தோழனே! நான் உன்னை வானத்தை வில்லாக வளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொரு கயிறாகத் திரிக்கச் கூறவில்லை. என் கடைக்கண்ணிற்கு மாமலையும் கடுகென்றாயே அந்த மாமலையைத் தோளில் தூக்கிச் சுமக்குமாறு நான் வற்புறுத்தவில்லை. நான் தானாக அழும்போது ஆறுதலாய்ச் சாய உன் தோளில் கொஞ்சம் இடம் கொடு. உன் ஒற்றைவிரலால் என் கண்ணீரைத் துளியைத் துடைத்துவிடு. அதுவே போதும்
வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
வளவ. துரையன் எனக்குத் தெரியும்நீ எப்பொழுதும்உண்மையை நேசிப்பவன்.மண்ணால் சுவர் வைத்துபுறஞ்சுவருக்கு அழகாகவண்ணம் தீட்ட எண்ணமில்லை.வார்த்தை அம்புகளைத்தடுக்க உன்னிடம்வலுவான மனக் கேடயம்வாழ்ந்து கொண்டிருக்கிறது.பொய் மழை பெய்கையில்முழுதும் நனைந்தாலும்புறந்தள்ளிப் போகிறாய்.எதிரி நாகங்களைஎதிர்கொள்ளக் கைவசம்ஆடும் மகுடி உண்டு.ஆனால்துளைத்திடும் முள்கள் கொண்டதோள்களால் தழுவுகையில்என்ன செய்வது?
வளவ. துரையன் என் நட்புக் கோட்டைக்குள்சில துரோகிகள்ஊடுருவி விட்டார்கள்.பசுத்தோல் போர்த்திய புலிகள்எல்லாம் அந்தக் காலம்.இப்பொழுதுபுலித்தோலைப் போர்த்தியபசுக்கள் உலவுகின்றன.ஆனால்பசுக்களின் பார்வையும்பண்பும் கொண்டதாகப்பச்சைப்பொய் பேசுகின்றன.பார்வையில் பாசிபோல்தெரிந்தாலும் விலக்கினால்பாதாளத்தில் சுறாக்கள்.குளக்கரையில் கசிவுஏற்படாமல் காப்பதிலும்கோட்டைச் சுவர்களில்விரிசல் விழாமல்பார்த்துக் கொள்வதிலும்தான்வாழ்க்கையின்சாமர்த்தியம்இருக்கிறதாம்.
—வளவ. துரையன் நான்கு கரைகளிலும் நாணல்கள் படிக்கட்டுகள் இல்லையெனினும் சாய்தளப்பாதை. ஆள்குளிப்பதை யாரும் அறியாத அளவிற்கு கண்களை மறைக்கும் காட்டாமணக்கு. குட்டையோ அல்லது குளமோ எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லார்க்கும் பொதுவானது. மாடுகளை மேயவிட்டபின் மத்தியான வேளையில் மேய்ப்பவர்களுக்கு அதுதான் சொர்க்கம். இப்போது நீவரும் பாதையெல்லாம் அடைபட்டுப் போனதால் நீரும் வழி மறந்து போயிற்று. பாதிக்குமேல் தூர்ந்துவிட்டதால் பயனற்றுக் கிடக்கிறது. ஆண்டுதோறும் வரும் வலசைப் பறவை மட்டுமிங்கே ஓரமாக உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது
வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போகின்ற பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும் குளம்போல் குவித்துவைத்து ஏந்தினாலும் விரலிடுக்குகளின் வழியே கசியும் போகும் நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட இல்லாமல் வீணே பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் நல்ல ஊஞ்சலும் நின்றுதானே ஆக வேண்டும். உள்ளே வந்துவிட்ட பட்டாம்பூச்சி வெளிச் செல்ல மூடப்பட்ட சன்னல்களில் முட்டி முட்டிப் பார்ப்பதைப்போல முயல்கிறாய் நீ. அதை அதன் போக்கிலே அவ்வப்போது விட்டுவிடு. வழிகிடைக்கும்