வணக்கம் பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காண்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழுக்கு அவர்கள் செய்த தொண்டினை நாம் அனைவரும் மதிக்கும் வகையில் ஒன்று கூடுவோம். இணைப்பில் அழைப்பிதழ் இணைக்கப் பட்டிருக்கிறது. உங்களை வரவேற்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம் அன்புடன் தமிழ்ப் பட்டிம்ன்றக் கலைக் கழகம் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழு மேல் விபரங்களுக்கு ரஜித் 90016400
திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். ஐந்து வயது. கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பாவும் ஓடி வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் குடித்தது மண்ணெண்ணெய். அப்பா ஒரு துண்டைப் […]
கர்ப்பிணிக்கான சிறப்பு இருக்கையில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி கேட்டார் ‘இது கர்ப்பிணிக்கான இருக்கை அமரவிடும் என்னை’ அவர் ‘மன்னிக்க வேண்டு’ மென்றார் மரியாதையாய் நின்றார் பிறவிக் குருடர் அவரென்று நின்றபின்தான் தெரிந்தது ‘முந்நூறு நாள்தான் கரு வாழ்க்கை உங்களுக்கோ மொத்த நாளும் இருள் வாழ்க்கை அமரும் அருகதை உங்களுக்கே’ என்று\ கர்ப்பிணி எழுந்தார் கர்ப்பிணிக்காக எல்லாரும் இடம் தர அமர்ந்து கொண்டார் அவர் எல்லார் இதயங்களிலும் யூசுப் ராவுத்தர் ரஜித்
அம்மா வீட்டில் சுவர்களே தெரியாமல் மகளின் படங்கள்தான் மகள் வீட்டில் அலசி அலசிப் பார்த்தாலும் அம்மா படமே இல்லை அம்மா கேட்டார் மகளிடம் ‘என் படம் மட்டும் ஏனம்மா இல்லை’ மகள் சொன்னார் ‘உங்கள் வீட்டில் ‘உங்கள் அம்மா படம் ஏனம்மா இல்லை’ அமீதாம்மாள்
ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உண்டென்றால் விளங்கிக் கொள்ளுங்கள் அது சாரதா வீட்டில் தீர்க்கப்படு மென்று. வாழையூரில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அதிசயப் பெண்மணிதான் சாரதாம்மாள். வீட்டில் விறகடுப்புதான். அதில் நெருப்பு அணைந்ததே யில்லை. யாரிந்த சாரதாம்மாள். இவரின் கடந்த காலக் கதையை கால் நிமிடத்தில் சொல்லிவிடலாம். கேட்கத் […]
(இந்தக் கதையில் பயன்படுத்தியிருக்கும் சில அரபுப் பதங்களுக்கான விளக்கம். தவ்பா-பாவமன்னிப்பு ; மௌத்-மரணம் ; இத்தா- தனிமை ; ஹதியா-தருமம் ; துஆ-இறைவனிடன் விண்ணப்பித்தல் ; இஃப்தார்- நோன்பு திறக்கும் நேரம் ; யாசின்-குர்ஆனின் இதயமாகக் கருதப்படும் வசனங்கள்; இஷா-இரவு நேரத் தொழுகை) ஏழு நாட்களாகப் பூட்டிக் கிடக்கிறது அல்லாப்பிச்சைக் கடை. யார் இந்த அல்லாப்பிச்சை? ஏழு வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். ஒரு மளிகைக் கடையில் சிப்பந்தியாகச் சேர்ந்தார். பிறகு அந்தக் கடையையே எடுத்து நடத்தினார். அதன் […]
முன்பெல்லாம் தேதி மறக்கும் அல்லது மாதம் மறந்து போகும். இப்போதெல்லாம் வருடமே மறக்கிறது. 2011 என்பதை இன்னும் பலர் 2010 என்றுதான் எழுதுகிறார்கள். அப்பப்பா! எவ்வளவு துரித கதியில் பறக்கின்றன நாட்கள். நேற்றுத்தான் சக்கரவர்த்தி தொடக்கநிலை ஆறு படித்ததுபோல் ஞாபகம். இப்போது இன்னும் மூன்று மாதங்களில் ஓ நிலைத் தேர்வு எழுதும் மாணவனாக நிற்கிறான். அப்பா ராகவன், அம்மா சுமங்கலி, கடைக்குட்டி சக்கரா என்கிற சக்கரவர்த்தி. டோர்செட் சாலையில்தான் வாசம். சக்கராவின் பெரியக்கா புவனா வீராசாமி சாலையில் […]
கிளிப்பச்சை நிறத்தில் அந்த வாசனைக் குப்பி. கண் கொட்டாமல் பார்த்தால் ஒரு கிளி நெல் கொரிப்பதுபோல் இருக்கும். அத்தனை அழகு. ஒப்பனை மேசையில் அருகில் இருக்கும் உயரமான அலமாரித் தட்டில்தான் சதாசிவம் தன் சொந்த உபயோகப் பொருள்களை வைத்திருப்பார். அதில் அந்த வாசனைக் குப்பியும் ஒன்று. மகள் லதாவுக்கோ மனைவி சரோவிற்கோ அது எட்டாது. எட்டவேண்டிய அவசியமுமில்லை. சதாசிவம் வீராசாமி சாலையில்தான் வசிக்கிறார். சனி ஞாயிறுகளில் வெளியே செல்வதைத் தவிர்ப்பார். வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் […]
ஒரு மரத்துப் பறவைகளாக அந்த நால்வர். சுந்தர், மனோகர், கருணா, வீரா. வேலை அனுமதி பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள். அங்மோகியோ அவென்யூ 4ல் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். தியாகத்தையும் பொறுமையையும் கூட சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதால் நட்பில் விரிசல் இல்லை. இரவு மட்டும்தான் சமையல். வேலை நேரத்துக்குத் தகுந்தபடி ஒரு நாளைக்கு ஒருவர் என்று நேரம் வகுத்துக் கொண்டு சமைப்பார்கள். அன்று கருணாவின் முறை. வேலை முடிந்து மூன்று மணிக்கு வந்தார் கருணா. துணிகளைத் துவைத்தார். […]
(பெயர்கள் அனைத்தும் உண்மையல்ல.) ஒரு மலைப்பாம்பு சுற்றிக்கொண்டு இறுக்குவதுபோல் உணர்ந்தார் தர்மலிங்கம். பாதித் தூக்கத்தில் எழுந்தமர்ந்தார். நிமிடத்துக்கு அறுபது மூச்சுக்கள் இழுத்தார். கால்கள் உடம்புக்குச் சம்பந்த மில்லாததுபோல் தொங்கிக் கொண்டிருந்தது. கால் விரல்களின் இடைவெளியை வீக்கம் மூடியிருந்தது. தூங்கிக் கொண்டிருக்கும் மனைவி கோமளாவை எழுப்ப நினைக்கிறார். வார்த்தைகள் வரவில்லை. ஆனாலும் அத்தனையும் கோமளாவின் கனவில் ஓடிக் கொண்டிருக்கிறது. கோமளாவின் மணிக்கட்டை இறுகப் பற்றினார். கோமளா விழித்தபோது பயக் கோடுகள் முகமெங்கும் பரவி யிருந்தது. கனவில் கண்டது உண்மையாகவே […]