மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதன் பின்னால் உள்ள மனநிலையை, செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள், வெறுப்புகள், விருப்புகள், ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டி படைப்பினை அணுகவேண்டும். தேவர் மகனும், […]
யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியல் பற்றி விரிவாகப் பேசியதால் விஸ்வரூபம் விம்ரசனத்தைத் தொடர இயலாமல் ஆகிவிட்டது. “தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” (இது பற்று டி ஜி வைத்தியநாதன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.) , விருமாண்டி, தேவர் மகன் , ஹே ராம்.இவற்றின் இடம் […]
கட்சி பாகுபாடில்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் நையாண்டி செய்திருக்கும் வசனகர்த்தா மணிவண்ணனுக்கு பாராட்டுகள். வருடங்கள் கடந்தாலும், அமாவாசையை அசலாக மீட்டெடுத்திருக்கும் சத்யராஜின் நடிப்பிற்கு வாழ்த்துகள். பழைய கதையில் நவீனத்தை புகுத்தத் தவறிய இயக்கத்திற்கு கண்டனம். கட்டைக் குரலில் கருத்து சொல்லும் சீமானுக்கு கருப்புக் கொடி. சத்யராஜின் திரை ஆளுமை, தொய்வான படத்தை தூக்கி நிறுத்த முயன்று தோற்கிறது. அரங்கு நிறையவில்லை என்றாலும், சமகால அரசியல் கிண்டல்கள் சிரிப்பலைகளை வரவழைக்கின்றன. பெண்களே இறந்தவர்களைச் சுமப்பது; மரங்களைக் காக்க பழங்குடி […]
5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் பார்த்திருக்கிறார் என்று தம்பட்டம் அடிக்க இது உதவலாமே தவிர விஸ்வரூபம் விமர்சனத்திற்கு உதவாது. ஒரு கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் ஒவ்வொரு பார்வையில் ஒவ்வொரு அழுத்தப் புள்ளியில் செயல்படும். இரண்டு படங்களை ஒப்பிட்டு இந்தப்படம் சிறந்தது, இன்னொரு படம் சிறந்தது இல்லை என்று மதிப்பீட்டை முன்வைப்பதற்கு அவை இரண்டும் ஒரு நாட்டினைப் பற்றியது என்ற […]
இந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து தமிழில் எழுதப் படும் சினிமா விமர்சனங்களின் ஒரு தொகுப்புப் பார்வையாய் முன்வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் விமர்சனம் அந்த விதத்தில் ஒரு சரியான உதாரணம் என்று எண்ணுகிறேன். யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) யமுனா ராஜேந்திரன் நிறையப் படிக்கிறார் நிறைய படங்களைப் பார்க்கிறார். நிறைய எழுதுகிறார் அவர் எழுத்துக்கும் அவர் தொட்டிருக்கும் விஷயங்களுக்கும் விமர்சனத்திற்கும் ஏதும் பொருத்தம் இருக்கிறதா என்பது […]
‘கற்றது தமிழ்’ போலவே வரிகளுக்கும் ராகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்தனை பாடல்களிலும், பின்னணி இசை அடக்கியே வாசிக்கிறது. தெரியாத இசைக்கருவிகள் கொண்டு இசைக்காது எப்போதும் வழமை போல இருக்கும் சாதாரண கருவிகள் கொண்டே இசைக்கப்பட்டிருக்கிறது. மெல்ல இறங்கும் விஷம் போல தன்னையறியாமல் எனக்குள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள்ளே ஊறிப்போய் வழியும்போது புறங்கையை கொஞ்சம் சுவைத்துப்பார்க்கவே தோணும் தேன் குடித்தவன் நிலையில் இப்போது நான், இது ஒரு புதிய அவதாரம் யுவனுக்கு. ‘கற்றது தமிழ்’, ‘பருத்திவீரன்’, […]
யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. அதன் பெயர் “குட்பை லெனின்” . கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பெண், தன் மகன் கைது செய்யப்படுவதைக் கண்டு மயக்கமுற்று கோமா நிலைக்குச் சென்று விடுகிறாள். அவள் கோமாவிலிருந்து விடுபடும் முன்பு கிழக்கு ஜெர்மனியே காணாமல் போய் விடுகிறது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனியின் பிரிவுச் சுவர் தகர்க்கப் பட்டிருக்கிறது. இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்து ஒரே […]
சென்னை மியூசியம் தியேட்டருக்கு இம்மாதம் 23, 24 ஆகிய இரு தினங்களும் கடவுள் வந்திருந்தார். சுஜாதா வந்திருந்தார்… நிறைய மக்கள் வந்திருந்தார்கள். பாரதி மணியின் சென்னை அரங்கத்தார் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகத்தை அங்கே சிறப்புற மேடையேற்றி இருந்தார்கள். இது அறிவியல் சிந்தனையுடன் நகைச்சுவை ரசத்தில் தோய்ந்த சமூக நாடகம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். உலகில் என்றுமே நிரந்தரமற்ற சமூக மரியாதையை ஓய்வு பெற்ற ஒரே நாளிலேயே இழக்கிறார் சீனிவாசன். சுஜாதாவின் எதிர்கால மனிதன் புத்தகத்தை […]
நல்ல படங்களைப் பார்க்கும் என் பழக்கம் திருச்சியில் சினி போரத்தில் தொடங்கியது. பேராசிரியர் எஸ் ஆல்பர்ட் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கிய சினி போரம் பல ஆண்டுகளாக உலக அளவிலும், இந்திய அளவிலும் வெளிவந்திருந்த முக்கியமான படங்களை பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தினை இந்த போரம் அளித்தது. சத்யஜித் ரே, குரோசவா, பெலினி, போலன்ஸ்கி, கோதார் , த்ருபோ என்று பலதரப்பட்ட பெரும் ஆளுமைகளின் படங்களைப் பார்க்கவும் விவாதிக்கவும் களத்தை அமைத்துக் கொடுத்த அந்த அமைப்பிற்கு என் ஈடுபாடுகளை விரிவு […]
கவ்வும் இசை ( சூது கவ்வும் ) அட்டக்கத்தி’யிலேயே தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்தவர் சந்தோஷ் நாராயணன். பின்னர் பிஸ்ஸா’வில் மோகத்திரை’யில் நம்மை மயக்கிவிட்டு இங்கு முழுக்க ஒரு கலவையாக ஜூகல்பந்தி வைத்திருக்கிறார். மெலிதான ராப், கொஞ்சம் ட்விஸ்ட்டும், கொஞ்சம் Yodelingம் கலந்து, ஒரு பாடல் முழுக்க பழைய பாடலை ஞாபகப்படுத்துவதாகவும், இன்னொன்று ஜேம்ஸ்பாண்டின் பின்னணி இசைக்கலவையோடு விருந்து படைத்திருக்கிறார், யுவன் “ஆரண்ய காண்டத்தில்” பரீட்சித்துப்பார்த்து வெற்றி பெற்றது போல இங்கும் வென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு […]