ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் […]
Beautiful Comeback for Sasikumar!,தொடர்ந்து ரசித்து வந்த என்னை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டேயிருந்தார் நாடோடி’களுக்கப்புறம்.இப்போது திரும்பவும் நம்மை அவர் பக்கம் திருப்பியிருக்கிறார் சசி..! என்ன கொஞ்சம் சுப்ரமணியபுரம்/நாடோடிகள் சாயல் இருந்தாலும் அழகான காதல் கதை..! சுந்தரபாண்டி “பஸ்”பாண்டியாவே போய்ருமோ முதல் பாதி முழுக்க பஸ் பஸ் ..பஸ் மச்சி :-) # அழகுப்பாண்டி..! Friends களுக்காக எல்லாத்தையும் விட்டுக்குடுக்குறார்ப்பா நம்ம சசிகுமார். பகைவனுக்கும் அருள்கிறார் நம்ம சசி. கொஞ்சமா தலைய மட்டும் சாய்ச்சிக்கிட்டு தாடிய லேசா நீவிவிட்டுக்கொண்டு […]
இன்னும் படம் பார்க்காதவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குள் இருக்கும் கோபாலை, அதாங்க நக்கீரனை நகர்த்திவிட்டு, படம் பாருங்கள். பிடிக்கும். இல்லையென்றாலும் பிடிக்கும், பைத்தியம். பெண்மையின் நளினம் கலந்த ஒரு நாயகன் ( வினய் ), ஆண்மையின் கம்பீரம் கலந்த (சில கோணங்களில் அவன் இவன் விஷால் போலவே இருக்கும் ) நாயகி (ஷர்மிளா மந்த்ரே). இவர்களை வைத்துக் கொண்டு, காமெடி பண்ணப் புகுந்தால், படம் மிரட்டல் போல இருக்கும். ஆனால் மிரட்டலாக இருக்காது. கதை பட்டு நூல் […]
மயக்க வைக்கும் பின்னணி இசையுடன் ஒரு பொன் மாலைப்பொழுது, நேர்மறையாக எல்லாவற்றையும் முடித்து வைத்த பொன் மாலைப்பொழுது..வெளியே மழை,உள்ளே ராஜா’வின் இசை, கையில் கோல்ட் காஃபி,எதிரே ஒரு அழகான பெண், வேறென்ன வேண்டும்?! இதுவே மாலைப்பொழுதின் மயக்கத்திலே..! ஒரு திரைப்படத்தை இயக்கிவிட நினைக்கும் ஆசையில் ஒரு இளம் இயக்குநர். அதை எப்பாடுபட்டாவது சாத்தியமாக்கி விட நினைக்கும் ஒரு ஆத்மார்த்த நண்பன். 7 Year Itchல் ஒரு சிறுவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் தம்பதியினர். வாங்கிய கடனைக்கொடுக்க இயலாத […]
திரில்லர் படங்கள் இரு வகை. ஒன்று, குற்றமும் குற்றவாளியும் பார்வையாளர்களுக்குத் தெரிந்து விடும். ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. இரண்டாவது வகையில் பார்வையாளர்களுக்கும் தெரியாது. முதல் வகை எஸ். பாலச்சந்தரின் ‘பொம்மை’. ‘அதே கண்கள்’ இரண்டாவது வகை. எ.ம.வ. முதல் வகை. ஒரு குற்றம் நடந்த பின், கிடைக்கும் தடயங்களை வைத்துக் கொண்டு, அது எப்படி நடந்திருக்கும், யார் செய்திருப்பார்கள் என்று யூகிப்பது ஒரு துப்பறியும் நிபுணரின் மூளை. அதைக் குற்றம் செய்தவனின் குணமாக மாற்றியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம். […]
பயணம் ஜூன் இதழில், தேவராஜ் விட்டலன் ‘ வாசிப்பை நேசிப்போம் ‘ என்கிற பகுதியில் தில்லி புத்தகச் சந்தையில் வாங்கிய ‘சேவல் கட்டு’ நாவலை விவரித்திருக்கிறார். நல்ல புத்தகங்களைப் பற்றி படித்தவுடன் ஏற்படும் அற்புத உணர்வை விட அதிர்வுதான் அதிகம் ஏற்பட்டது எனக்கு. சேவல்கட்டு கதை இதுதான். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடக்கும் கதை. பிரதான பாத்திரங்கள் சேவுகபாண்டியன் என்கிற ஆப்ப நாட்டு ஜமீந்தார். சேவல் சண்டையில் தோற்றுப் போகும் சேவுகப்பாண்டியன், நிறையச் சேவல்களை வளர்த்து, சேவல் […]
ஸ்ரத்தா குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை நாடகங்கள் போடும். தொடர்ந்து 4 நாட்கள், ஒரே மேடையில், அதே நாடகம். பிறகு அவை டிவிடியாகத்தான் கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் 2ந்தேதியிலிருந்து 4 ம் தேதி வரை இரண்டு மணி நேரத்திற்கு 3 சிறிய நாடகங்கள் போட்டனர். நான் பார்த்த 2 நாடகங்கள் பற்றிய ஒரு பார்வை. கடந்த இரண்டு முறையாக, சரித்திர புராண நாடகங்கள் போட்டதாலும், அரங்க நிர்மாணம் உன்னதமாக இருக்கும் என்றாலும், அவைகளோடு நான் ஒன்ற […]
ஒரு பனிரெண்டு நிமிடக் குறும்படம் இதயத்தைக் கனக்க வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நி.நெ. தினேஷ். என்னை மட்டுமல்ல.. இன்னமும் ஆயிரம் சொச்சம் ஆட்களை. முகநூலில் நான் பார்த்த இந்தக் குறும்படம், இப்படி ஒரு அனுபவத்தை எனக்கு தந்தது. இப்படத்தின் முக்கிய பாத்திரம், இன்னும் சொல்லப்போனால் ஒரே பாத்திரம், ஒரு வயசாளி. களம் கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில், காணக்கிடைக்கும் தனித்த ஒரு அடையாளமில்லாத, சராசரி டீக்கடை மற்றும் உணவு விடுதி. காலம்: மதியம் 12 மணியிலிருந்து […]
எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப்பேசுவது போல , 1990களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா..? இந்தக்காலகட்டத்திய இசை அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறதா,,? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் வாழ்வோடு இணைத்துப்பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா..? கேள்விக்கான விடையை கடைசியில் பார்க்கலாம்,..ஹ்ஹ…இல்ல கேட்கலாம். எனக்குத்தெரிந்து ரஹ்மானையும் ,யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இடுகைகள் இடுவதையும், அவர்கள் […]
அம்ரா பாண்டியன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு மன்னார்குடியிலிருந்து வெளிவருகிறது “ கருக்கல் விடியும் “ இதழ். உயிர்மை, காலச்சுவடு அளவில் ஒரு வணிக இதழாக பரிணாமம் பெரும் முயற்சியில் இருப்பது இதழில் உள்ளடக்கத்திலேயே தெரிகிறது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என்று அஞ்சறைப் பெட்டியாக அனைத்தையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இதழின் மே-ஜூன் 2012 பிரதியைக் கண்ணுறும் வாய்ப்பு கிடைத்தது. பல வண்ண பள பள அட்டை, கல்வியாளர் ஆயிசா இரா.நடராசனின் புகைப்படத்துடன், உள்ளே பரிதி பாண்டியன் […]