0 ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு ஆளாகும் கார்த்திக்; அதனால் கடத்தப்படும் வித்யா; விஷ வைரஸ் ஒன்றின் பரவலால் ஊட்டி நகரமே ஸோம்பிக்கள் எனும் மனித மிருகங்களால் சூழப்படும்போது, அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ரேணுகா மற்றும் மருத்துவர் குழுவை கோவைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் […]
0 இயக்குனர் பாலாவின் பல படங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் புதிய ரீமேக் படம் தாரை தப்பட்டை! பதினாறு வருட திரையுலக வாழ்வில் ஏழாவது படத்திலேயே இப்படி இறங்கியிருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ரசிகனின் ஆழ்ந்த இரங்கல்கள்! சாமி புலவரின் ஒரே மகன் சன்னாசி! தாரை தப்பட்டை என்கிற கிராமிய நடனக் குழுவை நடத்தி வருகிறான். அவனது குழுவில் முன்னணி ஆட்டக்காரி சூறாவளி! மாமா சன்னாசி மேல் மையல் கொண்ட அவளுக்கு, வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறான் சன்னாசி. […]
விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு……………………………. முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து படத்திற்கு போனால், பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் என்னவெனில், சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்கள் தங்கள் சுய நலங்களுக்காக தங்களையே வருத்திக்கொள்வதும் , புறமுதுகில் குத்திக்கொள்வதும் தான் படமாக்கப்பட்டிருக்கிறது. சன்னாசி மேல் சூறாவளிக்கு காதல். சூப்பரான காதல். வரலட்சுமியில் வசனங்களை கேட்டால் […]
குமரன் “சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித் தெரிந்த முறைதானே சொர்க்கம் நரகம் என்பது எல்லாம் சூழ்நிலை கொடுத்த நிறம் தானே” என்னும் வரிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பாலசந்தரின் படைப்புகளை மனதுக்குள் படர வைத்து பத்திரப்படுத்தியிருக்கும் ரசிகர் எவருக்கும் இந்த வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். “ரயில் சினேகம்” தொலைக்காட்சித் தொடரில் வரும் வைரமுத்து எழுதிய பாடலின் வரிகள் இவை. பாலசந்தரின் படைப்புகளின் இதயம் எது? ஜீவன் எது? அந்த ஜீவன் வழியே வெளிப்படும் உணர்வுகள் எவை? […]
0 சில்லறை திருடர்களின் சிரிப்பு கார்னிவல். புதுமுக இயக்குனரின் ஆர்வக் கோளாறால் காமெடி, சொதப்பல்! 0 தேசு சின்ன திருட்டுக்களை செய்யும் எரிமலைக்குண்டு கிராம ஆள். அவனுக்கு விலைமாது கல்யாணி மேல் ஒரு கண். மதன் காதலிக்கும் திவ்யா, அவனது முதலாளி ராயப்பனின் மகள். ஒரு கட்டத்தில் நால்வரும் சிதறி ஓட, இடையில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கலை சின்னாபின்னமாக்குகிறது. இயக்குனர் மணிகண்டன், சுந்தர் சி சிஷ்யனோ என்று ஒரு […]
– சிறகு இரவிச்சந்திரன் 0 உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை, பாண்ட் வளைத்துப் பிடிக்கும் படம்! மெக்சிகோவில், இறந்தவர் தின விழாவில், சர்வதேச சதிகாரன் மார்க்கோஸ் ஸ்காராவை சுட்டுக் கொல்கிறார் பாண்ட். அத்து மீறிய செயல் என்று மிஸ்டர் எம் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்கிறார். ஆனாலும் பாண்ட் ஓயவில்லை. அனுமதி இல்லாமல் சூத்திரதாரி பையோ ஃபோல்டை, தனி ஆளாக எதிர்கொண்டு வெல்கிறார். ஜேம்ஸ் பாண்ட் படமென்றாலே […]
– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த நடத்தும் போராட்டத்தின் பின் விளைவாக அவரது மகன் வாசு, கடத்தல்காரன் விட்டல்ராவால் கடத்தப்படுகிறான். மகனை மீட்க திவாகர் செய்யும் யுத்தத்தில் அவன் வென்றாரா என்பதே மொத்த கதை! தூக்கமற்ற இரவு ( ஸ்லீப்லெஸ் நைட் ) என்கிற ஃபிரெஞ்சு படத்தின் தழுவலில், […]
இலக்கியா தேன்மொழி திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் – காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின், குழந்தை பெற்றபின் அதை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார். குழந்தை பிற்பாடு இறந்துவிடுகிறது. தொடர்ந்து காதலர்கள் பிரிய நேரிட, ஜாக்குலின் வேறு ஒருவருடன் மணமாகி செட்டில் ஆகிவிடுகையில், இறந்த குழந்தை பேயாகி வருவதுடன் அது என்ன கேட்கிறது என்பது தான் கதை. உண்மையை […]
தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு ஏற்பட்ட பகையால் தன் அம்மாவை இழக்கிறாள் காதம்பரி. அந்த அதிர்ச்சியில் அவளது செவிகள் உணர்வு இழக்கின்றன. அழகின் மொத்த உருவமாக வளரும் அவள் மேல் காதல் கொள்ளும் பாண்டிக்கு அவள் அவன் காதலை ஏற்க வைக்கும் ஒரே நிபந்தனை, கிள்ளிவளவனை கொல்ல […]
ஸ்ரீராம் செக்ஸ் எஜுகேஷன் தான் மையம். அதைச் சுற்றி வாத்தியார்கள் மாணவர்களிடம் காட்ட வேண்டிய கண்டிப்பின் அளவீடு குறித்து பேசியிருக்கிறார்கள். ‘ஏன்டா கிஸ் பண்ணின?’ என்று கேட்கிறாள் டீச்சரான ராதிகா. ‘… உங்களையும் கிஸ் பண்ணுவேன் மிஸ்’ என்கிறான் பையன். ராதிகா கோபத்தில் அறைந்துவிடுகிறாள். பையன் மயங்கி சரிகிறான். இங்கிருந்து பதற்றம் தொற்றிக்கொள்கிறது. பையனின் மாமன் ஒரு பொதுவுடைமைவாதி. கத்தி ஆர்பாட்டம் செய்கிறான். எல்லோரையும் கேள்வி கேட்கிறான். ராதிகா தலைமை ஆசிரியரின் வற்புறுத்தலுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடுகிறாள். […]