தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ------------------------------------------- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.…

குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012

கனடியத் தமிழரின் அடையாளமாக, வரலாற்றுப் பதிவாக தன்னை நிலைநாட்டி, தொடர்ந்து 21 வருடங்களாக வெளிவந்து சாதனை படைக்கும் தமிழர் தகவல் இவ்வருடத்திற்கான இலக்கிய விருதை எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு (Kuru Aravinthan)வழங்கிக் கௌரவிக்கின்றது. பல…

முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

  முனைவர் மு.வ - அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும்  இடம் பெற்ற மூத்த தமிழ்அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த்தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையேசாரும்.  19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. அத்துடன் தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு விழாக்களும் சேர்ந்துகொண்டன. முப்பெரும் விழா  சிறப்புடன் நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு முன்  முன் மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும் மாதர்களுக்குக் கோலப்போட்டியும் நடைபெற்றன.   நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரப்படியே விழா தொடங்கியது. மரபுப்படி மங்கல   விளக்கைஏற்றியவர்கள் திருமிகு செல்வா, உமா இணையர்.ஐரோப்பிய பராளுமன்றம் இருக்கும் Strasbourg நகரில்இருந்து விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் சிறப்பு விருந்தினர் திருமதி முனைவர் இராசஇராசேசுவரி பரிசோ. இவர்கள் தம் இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்கள். நூற்றாண்டு விழாத் தலைவர் மு;வ அவர்களுக்குக்காகக் கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு அவையிலேயே இசை அமைத்துப் பாடி அனைவரையும் கவர்ந்தார். பின் கம்பன் கழக இளையோர்அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.    கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் அனைவரையும் வரவேற்றார் ; கழகத்தின்துணைத் தலைவர் திருமிகு கி அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கி முனைவர் மு.வ பற்றிநல்லதோர் உரை ஆற்றினார். கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக 'மு;வ நூற்றாண்டுவிழா'   மலர், 'அன்னை தெரெசா மலர்', 'கவிஞர் தமிழ்ஒளி மலர்' ஆகிய மூன்று மலர்களைவெளியிட்டவர் திருமிகு அ. நாகராசன்.    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறினார் மூன்று வயது செல்வன்  யுவராசன் என்னும் ஆதவன்செங்குட்டுவன். ஔவையாரின்  ஆத்திசூடியை ஒரு வரி பிசகாமல் ஒன்றல்ல இரண்டல்ல108 வரிகளையும் தன் மழலை மொழியில் தடங்கல் இல்லாமல் உரைக்கக்   கேட்ட அவையோர் அசந்துபோயினர்.   சிறப்புரை ஆற்றும் பொறுப்புடன் எழுந்து வந்தார் பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர்  பேராசிரியர்பெஞ்சமின் லெபோ. தனக்கே உரிய எடுப்பான குரலில் மிடுக்கான நடையில் அடுக்கு மொழியில்நகையைக் கலந்து சுவையைக் குழைத்து முனைவர் மு;வ அவர்களைப் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். …

அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு

பேரன்புடையீர், வணக்கம். எம் தலைமையில் இயங்கிவரும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி சமுதாய மன்றத்தில் 03.03.2012ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு…

சிற்றேடு – ஓர் அறிமுகம்

தமிழவனை ஆசிரியர் குழுவில் கொண்டு வெளிவரும் சிற்றேடு இதழ் பல முக்கியமான அறிமுகக் கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. கடந்த இதழ்களில் கேரலத்தின் புதிய அறிவுஜீவி எம் கே ஹரிகுமார் பற்றிய அறிமுகக்…

பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

வணக்கம் பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காண்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழுக்கு அவர்கள் செய்த தொண்டினை நாம் அனைவரும் மதிக்கும்…

கம்பன் கழகத்தின் பொங்கல் விழா

அன்புள்ள ஆசிரியருக்குக் கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். இதோ எங்கள் கம்பன் கழகத்தின் பொங்கல் விழா அழைப்பிதழ். என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின் நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். வழக்கம் போல்…

மும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

அறிவிப்பு மும்பை தமிழ் அமைப்புகள் பம்பாய் தமிழ் சங்கத்துடன் இணைந்து சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா . அனைவரும் வருக. மும்பை தமிழ் அமைப்புகள் சார்பாக…

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் -ஹெச்.ஜி.ரசூல் கன்னியாகுமரிமாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் 2012…