‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள் என்று அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது. போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச் சொல்லிக் கேட்கவேண்டும் என்று முகத்தைச் சுளுக்கிக்கொள்கிறார்கள் சிலர். ஆயர்குலப் பெண்களின் ஆடைகளை ஆற்றங்கரையிலிருந்து கவர்ந்துசென்றவனல்லவா அவன் என்று குறிபார்த்து அம்பெய்துவதாய் திரௌபதியின் காதுகளில் விழும்படி உரக்கப்பகர்ந்து பகபகவென்று பரிகாசமாய் சிரிக்கிறார்கள் சிலர்… பாவம், ஊடலுக்கும் […]
என்னைச் சுமந்தபடி அம்மா சூட்டில் நடந்தது அம்மாவும் நானும் காய்ந்த நெல்லைக் கோணியில் சேர்த்தது மதியம் அத்தா சாப்பிட நான் விசிறிவிசிறி நின்றது அம்மை ஊசிக்கு ஓடி ஒளிந்தது பனந்தோப்பில் காணல்நீர் கண்டது அங்கு நுங்கு குடித்தது கரிக்கண்ணாடியில் கிரகணம் பார்த்தது காயும் கறிக்கு காவல் இருந்தது கொலுசுவீட்டுச் சுவரேறி கொய்யா பறித்தது நவ்வாப்பழக்காரி பொன்வண்டு தந்தது அது முட்டையிட்டது பசு […]
__________________________________________ருத்ரா “நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்.” பிறக்கும் போது நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும் முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது. அதன் புள்ளிவிவரம் நம் மீது எழுதப்படும்போது வயதுகள் என அழைக்கப்படுகின்றன. வயதுகள் நம் வலிமை. வயதுகள் நம் இளமை. வயதுகள் நம் முதுமை. ஆனாலும் வயதுகளே நமக்கு நாமே அச்சடித்துக்கொள்ளும் நம் “பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்.” வெட்ட வெட்ட வழுக்கிக்கொண்டு […]
கம்பன் எழுதாத சீதாஞ்சலி சி. ஜெயபாரதன், கனடா ******************************** பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில் வில்லாதி வீரன் ராமனை,, உத்தம ராமனாய், உன்னத ராமனாய் உயர்த்திய கம்பன் கை தளர்ந்து, எழுத்தாணி , ஓலையில் எழுத மறுத்து அழுதது ! உச்சத் துயர் நிகழ்ச்சி சீதைக்கு இரண்டாம் வனவாசம் ! எதிர்பாரா இறுதிப் பயணம் ! கம்பன் எழுதாமல் கை விட்ட ராம கதை உத்திர காண்டம், சீதாஞ்சலி ! சிங்காதனம் ஏறிய ராமன் ஜெகம் புகழும் கம்ப ராமன் சீதா […]
லாவண்யா சத்யநாதன். ஆடுதிருடி மாடுதிருடி அயலூர் சந்தையில் வேட்டியில் முடியும் களவாணிப்பயல்களைக் கட்டிவைத்தடிக்கும் பட்டிக்காட்டு முரட்டுநீதி இல்லாமல்போனதில் கயவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயிற்று. அதிகாரச் செயலியை கைப்பேசிக்குள் வைத்தவன் தோலிருக்கச் சுளைவிழுங்கி உலகளுக்கும் பெருமாளாவது உள்ளங்கைப்புண். ஆனால் பகல்பொழுதுக் களவுக்கு பூர்வஜென்ம புண்ணியம் யோகஜாதகமென்று பொன்னாடை போர்த்தும் உன் மூளைப்பாசியை அமிலத்தால் கழுவினாலொழிய நீ திருந்தப் போவதில்லை. நானும் விடுவதாயில்லை. –லாவண்யா சத்யநாதன். உங்களுக்கும் தெரிந்தவர்கள்தான் வெளியில் பயணவழி நெடுக ஒலித்தபடியிருந்தது ஒரு பெண்மானின் கதறல். மலைகளும் […]
சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு? மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில் பச்சத்தண்ணியானால் பத்திரமாய் இருக்கலாம கொதித்தால் தொலைவாய் தொட்டிச் செடிக்கு தொட்டிதான் பூமி அழகாய் அமையாது வாழ்க்கை அமைவதை அழகாக்குவதே வாழ்க்கை மாத்திரை மருந்துகள் துளித்துளியாய்க் கொல்லும் ரத்தம் இப்போது சந்தையில் கிடைக்கிறது முளைக்கும்வரைதான் […]
சி. ஜெயபாரதன், கனடா நாள் தோறும் வாரந் தோறும், வருடந் தோறும் நடக்குது இரங்கல் கூட்டம். காரணம் ! சுட்டுக் கொல்லும் ஆயுதக் கட்டுப்பாடு ! வரலாற்று முதலாக இடுகாட்டில் மரணப் புதைச் சின்னம் காளான்கள் போல் முளைக்கும் ! பாலர் வகுப்பில் படிக்கும் பிள்ளைகள், கல்லூரி மாணவியர், கருப்பர், இசுலாமியரைக், குறி வைத்துச் சுடுவது, அறிவித்து முன்னே திட்ட மிட்டுச் சுட்டுக் கொல்வது ! வெகுண்டு வெள்ளை மாளிகை சூப்பர் தளபதி, செனட்டரைக் கெஞ்சுவார் ! துணைத் தளபதி கமலா ஹாரிஸ் […]
பேரா.ச.சுந்தரேசன் நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகத்தைக் காட்டுகிறது ஆடியில் நீ ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டு! மிருகங்கள் எதுவும் பேதம் பார்ப்பதில்லை மனிதன் சொன்னான் அவை மிருகசாதியென்று. ஒவ்வொரு முறையும் சாலையோரத் தகரத்துண்டு ஏமாற்றிவிடுகின்றது கானல் காசாய்…! பேரா.ச.சுந்தரேசன் இலொயோலா கல்லூரி, வேட்டவலம் திருவண்ணாமலை மாவட்டம்.
ரோகிணி கனகராஜ் இருட்டு நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்த வேளையில்… வானத்தில் ஓர்போர் நடந்துக்கொண்டிருக்கிறது… போர்வீரர்களென திரண்ட மேகங்கள் ஆவேசக் காட்டெருமைகளென முட்டிமோதிக்கொள்கின்றன… இடியின் சத்தம் குதிரையின் குளம்பொலியென கேட்டுக்கொண்டிருக்கிறது… பளபளவென வாளெடுத்து சுழன்றுசுழன்று வீசுகின்றன மின்னல்கள்… அரசியல்வாதிக்குப் பயப்படும் அப்பாவி மக்களென அஞ்சிநடுங்கி விண்மீன்களும் நிலவும் ஓடிஒளிந்து கொள்கின்றன… வானமகள் கண்ணீர்விட்டு அழுகிறாள் வீணாய்போன இந்த யுத்தம் தேவையா என விழித்துக்கொண்ட ஊருடன் சேர்ந்து மெல்ல விழித்துக்கொள்கிறது அதுவரை […]
பின்னூட்டங்கள்