பார்வை

This entry is part 2 of 4 in the series 28 ஜனவரி 2024

                  வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து கரும்பறைக்கும் இயந்திரமாக மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும் சமையல் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு சோற்றுப் பருக்கையாய் நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது என்று தெரிந்திருந்தும் […]

நம்பிக்கை

This entry is part 3 of 4 in the series 28 ஜனவரி 2024

                                    வளவ. துரையன்                        வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவதுபோல அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை நம்பியா வைத்தேன் அம்மாவை நம்பித்தானே அம்மா இல்லையா?

ஓடிப் போன பெண்கள்

This entry is part 4 of 4 in the series 28 ஜனவரி 2024

ஹிந்தியில்  : ஆலோக் தன்வா தமிழில் : வசந்ததீபன் _______________________________ ஒன்று ______________ வீட்டின் சங்கிலிகள் எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றன ?  எப்போதும் வீட்டிலிருந்து ஏதாவதொரு சிறுமி ஓடிப்போகிறாள்?  என்ன அந்த இரவின் நினைவு வந்து கொண்டிருக்கிறதா?  அது பழைய சினிமாக்களில் அடிக்கடி வந்து இருந்தது எப்போதும் ஏதாவதொரு சிறுமி வீட்டிலிருந்து ஓடிப் போயிருந்தாளா?  மழைக் காலத்தினால் வீழ்ந்த அந்தக் கல் விளக்குத் தூண் வெறுமனே கண்களின் அமைதியின்மை காட்டும் அதிகமாக  அதனின் ஒளியா?  மற்றும் அந்த […]

எனக்குள்

This entry is part 1 of 2 in the series 21 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா சோகங்களை  பகிர்ந்து கொள்ள இனி யாரும் இல்லை தான்  வெற்றிகளை  கை தட்டிக் கொண்டாட என்னோடு இனி யாரும் இல்லை தான்   மரங்களின் குளியலை இலைகளின் ஆட்டத்தை உதிரும் பூக்களால் சிலிர்த்து அடங்கும் வேர்களின் மெல்லதிர்வை காற்றின் கவிதையை என்னுடன் சேர்ந்து ரசிக்க இனி யாருமில்லை தான் கண்ணீரில் பார்வை மங்கியிருப்பது உண்மை தான் ஆனாலும்  உயிர்த்திருக்கிறேன் நான் எனது ரசனையின் கதகதப்பில்

புத்தாண்டில் இளமை

This entry is part 4 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா தீர்மானங்கள்  தாண்டாது ஒரு நாள் கூட எனத் தெரிந்தும் செய்த நாட்கள் போய் விட்டன துரோகங்களுக்காக கொதித்த நாட்கள் போய் விட்டன நம்பிய கட்சியும் தெரிந்த குட்டையில் ஊறியது தான் என்று  ‘மைக்’கில் குரலோங்கிய நாட்கள் போய் விட்டன அனுபவங்கள் கனக்கின்றன அவற்றை தூக்கி போட்டு மிதித்து மீண்டும் போராடும் மன இளமை தா தாயே பராசக்தி!

ஒருவருள்  இருவர்

This entry is part 3 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா அடிப்படை மரியாதை அதீத புரிந்துணர்வு பொறுப்புணர்வு மன முதிர்ச்சி என ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் நீ உனது பணியிடத்தில் வீடு திரும்பியதும் வெள்ளை கோட்டுடன் அவற்றையும் மாட்டிவிடுகிறாய் ஆணியில்

பயணம்

This entry is part 1 of 1 in the series 31 டிசம்பர் 2023

என் பயணத்தில் என்னைக் கடக்கும்  வாகனங்கள் பல நான் கடக்கும்  வாகனங்களும் பல அவரவர்களுக்கு  அவரவர் இலக்கு விதிகள் மீறாதவரை விபத்துகள் இல்லை

முதுமை

நதியின் இறுதி நாள் இதோ நெருக்கத்தில் கடல் அன்று மாட்டுக்கு  விலை இன்று தோலுக்கு   விலை விழுந்த தேங்காய் தென்னையைப் பார்த்து அழுகிறது இனி எல்லா நாளுமே  ஞாயிறுதான் மான்களை  விரட்டிய புலி இன்று  ஈக்களை விரட்டுகிறது குலை தள்ளியது சேய்வாழை சாயத் தயாராய் தாய்வாழை தீர்ப்பு எழுதப்படுகிறது இனி வாதாடி என்ன பயன் இறுதி அத்தியாயத்தின் இறுதி வரி  காத்திருக்கிறது முற்றுப்புள்ளி கொம்புகள் சாய்ந்தன தள்ளாடுகிறது கொடி கனரகக் கப்பல் காகிதக் கப்பலானது வந்துவந்துபோன […]

அறிதல் 

This entry is part 6 of 6 in the series 17 டிசம்பர் 2023

வளவ. துரையன் அந்த முச்சந்திக்கு        வேறு வேலையில்லை.  எல்லாரையும்  முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததை  எடுத்து வருவார்களா என  எல்லாக்கால்களையும்  பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடை  போணியாகி விற்றுவிடாதா  என்றேங்கும்  பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியை  இழுக்க முடியாமல்  அடிகள் வாங்கி  இழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டு  அடம்பிடிக்கும்  அறியாச்சிறுவனை அனைத்தையும் பார்த்துப் பார்த்து அதுவும் வாழ்வினைக்  கற்றுக் கொள்கிறது.

அதுவே போதும் 

This entry is part 5 of 6 in the series 17 டிசம்பர் 2023

வளவ. துரையன்    என் தோழனே! நான் உன்னை வானத்தை வில்லாக வளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொரு கயிறாகத் திரிக்கச் கூறவில்லை. என் கடைக்கண்ணிற்கு மாமலையும் கடுகென்றாயே அந்த மாமலையைத் தோளில் தூக்கிச் சுமக்குமாறு நான் வற்புறுத்தவில்லை. நான் தானாக அழும்போது ஆறுதலாய்ச் சாய உன் தோளில் கொஞ்சம் இடம் கொடு.  உன் ஒற்றைவிரலால் என் கண்ணீரைத் துளியைத் துடைத்துவிடு. அதுவே போதும்