பார்வை

                  வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து மறக்க முயல்கிறேன் நினைவுகளைப்…

நம்பிக்கை

                                    வளவ. துரையன்                        வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவதுபோல…
ஓடிப் போன பெண்கள்

ஓடிப் போன பெண்கள்

ஹிந்தியில்  : ஆலோக் தன்வா தமிழில் : வசந்ததீபன் _______________________________ ஒன்று ______________ வீட்டின் சங்கிலிகள் எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றன ?  எப்போதும் வீட்டிலிருந்து ஏதாவதொரு சிறுமி ஓடிப்போகிறாள்?  என்ன அந்த இரவின் நினைவு வந்து கொண்டிருக்கிறதா?  அது பழைய சினிமாக்களில்…
எனக்குள்

எனக்குள்

ஆர் வத்ஸலா சோகங்களை  பகிர்ந்து கொள்ள இனி யாரும் இல்லை தான்  வெற்றிகளை  கை தட்டிக் கொண்டாட என்னோடு இனி யாரும் இல்லை தான்   மரங்களின் குளியலை இலைகளின் ஆட்டத்தை உதிரும் பூக்களால் சிலிர்த்து அடங்கும் வேர்களின் மெல்லதிர்வை காற்றின் கவிதையை…

புத்தாண்டில் இளமை

ஆர் வத்ஸலா தீர்மானங்கள்  தாண்டாது ஒரு நாள் கூட எனத் தெரிந்தும் செய்த நாட்கள் போய் விட்டன துரோகங்களுக்காக கொதித்த நாட்கள் போய் விட்டன நம்பிய கட்சியும் தெரிந்த குட்டையில் ஊறியது தான் என்று  'மைக்'கில் குரலோங்கிய நாட்கள் போய் விட்டன…

ஒருவருள்  இருவர்

ஆர் வத்ஸலா அடிப்படை மரியாதை அதீத புரிந்துணர்வு பொறுப்புணர்வு மன முதிர்ச்சி என ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் நீ உனது பணியிடத்தில் வீடு திரும்பியதும் வெள்ளை கோட்டுடன் அவற்றையும் மாட்டிவிடுகிறாய் ஆணியில்

பயணம்

என் பயணத்தில் என்னைக் கடக்கும்  வாகனங்கள் பல நான் கடக்கும்  வாகனங்களும் பல அவரவர்களுக்கு  அவரவர் இலக்கு விதிகள் மீறாதவரை விபத்துகள் இல்லை
முதுமை

முதுமை

நதியின் இறுதி நாள் இதோ நெருக்கத்தில் கடல் அன்று மாட்டுக்கு  விலை இன்று தோலுக்கு   விலை விழுந்த தேங்காய் தென்னையைப் பார்த்து அழுகிறது இனி எல்லா நாளுமே  ஞாயிறுதான் மான்களை  விரட்டிய புலி இன்று  ஈக்களை விரட்டுகிறது குலை தள்ளியது…
அறிதல் 

அறிதல் 

வளவ. துரையன் அந்த முச்சந்திக்கு        வேறு வேலையில்லை.  எல்லாரையும்  முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததை  எடுத்து வருவார்களா என  எல்லாக்கால்களையும்  பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடை  போணியாகி விற்றுவிடாதா  என்றேங்கும்  பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியை  இழுக்க முடியாமல்  அடிகள் வாங்கி …
அதுவே போதும் 

அதுவே போதும் 

வளவ. துரையன்    என் தோழனே! நான் உன்னை வானத்தை வில்லாக வளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொரு கயிறாகத் திரிக்கச் கூறவில்லை. என் கடைக்கண்ணிற்கு மாமலையும் கடுகென்றாயே அந்த மாமலையைத் தோளில் தூக்கிச் சுமக்குமாறு நான் வற்புறுத்தவில்லை. நான் தானாக அழும்போது ஆறுதலாய்ச்…