Articles Posted in the " அரசியல் சமூகம் " Category

 • வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

    வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து நடேசன் தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை   நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன்  தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு.  பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால்,  இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது  பாவைக்கூத்து அழிந்து வருகிறது.  இந்தப்பாவைக் கூத்துக் கலை,  குடும்பங்களின்   பாரம்பரியமாக,  தலைமுறை தலைமுறையாக  கடத்தப்பட்டு வந்தது.  அப்படியான கலைக்குடும்பத்து  இளைஞர்கள் நகரை நோக்கி  கல்விக்காகவும் மற்றைய வேலைகளுக்காகவும் இடம்பெயர்வதால்  இந்தக் கலைஞர்கள் அற்று  அழிந்துவிடுகிறது. கிராம விவசாயப் பொருளாதாரத்தின்  பகுதியான பல […]


 • 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

  2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது (2021) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2021 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது. அஸ்வகோஷ் – புனைவற்றப் படைப்புகள் வண்ண நிலவன் – புனைவிலக்கியம்                               ஒவ்வொன்றும் ரூ 1,00,000 […]


 • முதுமையை போற்றுவோம்

  முதுமையை போற்றுவோம்

    முனைவர் என்.பத்ரி, நிரந்தர உறுப்பினர்,தமிழ்நாடு முதியோர்கள் சங்கம்.              1982 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச முதியோர் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் 1988 ஆம் ஆண்டில் சர்வதேச முதியோர் தினம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.   டிசம்பர் 14, 1990 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஆகஸ்ட் 21 சர்வதேச முதியோர் தினம் என அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் […]


 • மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

      அஞ்சலிக்குறிப்பு  :   மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்                                                               முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும்  மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  நீண்ட  காலம் இயங்கியவருமான தெளிவத்தை ஜோசப்  இம்மாதம் 21  ஆம் திகதி அதிகாலை  வத்தளையில் தமது இல்லத்தில் மறைந்துவிட்டார். அமைதியான இயல்புகளைக்  கொண்டிருந்த அவர், ஆழ்ந்த    உறக்கத்திலேயே உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார். அவர் உடல் நலக்குறைவோடு இருப்பது அறிந்து சில நாட்களுக்கு […]


 • தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்

  தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்

      நடேசன்   இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை.  இதன் மூலம் பலரோடு பழகுவதை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும்.   2009 ஆண்டிலே   எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின்  ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சங்கம் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை அழைத்திருந்தது.  அவர்  மெல்பனில்  நண்பர் […]


 • மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

    லதா ராமகிருஷ்ணன்      சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான, , ஆரவாரமில்லாமல் தொடர்ந்து இலக்கியவெளி யில் பங்காற்றிவரும் தோழி மதுமிதா தொடர்ந்து சமகாலத் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் என பல படைப்பாளிகளின் எழுத்தாக்கங் களை ஆத்மார்த்தமாக வாசித்து அதைத் தனது காற்றுவெளி என்ற பெயரிலான யூட்யூப் வெளியில் பதிவேற்றிவருகிறார். எனது நீள்கவிதையொன்றையும் அவ்வாறு வாசித்துப் பதிவேற்றியிருக்கிறார்.     பொதுவாக எனக்கு கவிதையை உரக்க வாசித்தல் உவக் காது. குரலில் ஏற்ற இறக்கங்களோடு […]


 • கனா கண்டேன்!

  கனா கண்டேன்!

                                                                 சோம. அழகு   [இக்கட்டுரை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கனவுகள். சால்வடோரின் ஓவியங்களைப் போல் ஏன் வந்தனவோ?]        ஒரு ஊர்ல நெறைய காடு இருந்துச்சாம். அதில் ஒன்று செங்காடு. கரிய மண்ணில் […]


 • கபுக்கி என்றோர் நாடகக்கலை

      அழகர்சாமி சக்திவேல் முத்தமிழை, நாம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். அந்த நாடகத்தமிழை, வசன நடை குறைந்த, பாடல்கள் மற்றும் ஆடல்கள் நிறைந்த கூத்து என்றும், வசன நடை நிறைந்த நாடகம் என்றும், நாம் இன்னும் இரண்டாகப் பிரிக்கிறோம். இயலும், இசையும், இரண்டறக் கலந்த, நாடகங்களின் இயல்பு குறித்து, சங்ககால இலக்கியமான தொல்காப்பியம், பல விசயங்களை, நமக்குச் சொல்லுகிறது. நாடகங்களின் சிறப்பு குறித்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய […]


 •     வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

           அழகியசிங்கர்               சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு மணிநேரம் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் கொஞ்சங்கூட தொய்வில்லாமல் எடுக்கப் பட்டிருக்கிறது. இது முக்கியம்.  வைதீஸ்வரனையே மையப்படுத்தி எடுக்கப் பட்டிருக்கிறது.              இப்போது வைதீஸ்வரனுக்கு நெருக்கமாக இருக்கிற நண்பர்களையும் ஒரு நிமிடமாவது ஆவணப்படத்தில் பேச வைத்திருக்கலாம் என்பது என் […]


 • பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!

                                                                         முருகபூபதி சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                  “  கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.  “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத்  தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் […]