மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று […]
அக்டோபர் 6, 2011 ஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு சோகமான நாள். 27 ஆண்டுகளாக ஒரு ஆப்பிள்-ஐ அழுகாமல் வைத்துக் கொண்ட புதுமை கடவுள் மறைந்த நாள். தன்னுடைய வித்யாசமான யோசனைகளால் கணினி மற்றும் செல்பேசி தொழில் நுட்பத்தை அழகுபடுத்தியவர் என்ற முறையில், உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ரசிகர்கள், அவருக்காக பிராத்தனை செய்கின்றனர். அவர் உருவாக்கிய பல பொருட்களைப் பற்றித் தான் சில நாட்களாக அதிகம் கூகுள் செய்யப் படுகிறது. அவர் இறந்தது எப்படி? அவர் சாதனைகள் என்ன? அவருடைய […]
சத்யானந்தன் இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. நதியில் ஒரு பெரிய கம்பளி நூல் மூட்டை மிதந்து சென்று கொண்டிருந்தது. மலை மேல் செம்மறி ஆடுகள் நிறைய உண்டு. யாரோ ஒரு ஆட்டுக்காரரின் நூல் மூட்டை தவ்றி நதியில் விழுந்து […]
தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். 23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் பரிசு எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் […]
மலர்மன்னன் “பிறர் கட்டுரைகளுக்கு மறுமொழியாக உனது கருத்துகளைத் தெரிவிப்பதைவிடத் தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய். ஏனெனில் காலப் போக்கில் பிறர் கட்டுரைகளுக்கு அடியில் மற்றவர்களின் மறுமொழிகளுக்கு இடையே உனது மறுமொழிகள் புதைந்து மறைந்துபோய்விடுகின்றன. மேலும் உனது பல கருத்துகள் மறுமொழி வடிவில் அமைவதால் கவனத்திற்கு வராமலும் போய்விடுகிறது. வந்தாலும் சேகரித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை” என்று சில நண்பர்கள் எழுதுகிறார்கள். யோசிக்கும் வேளையில் அவர்கள் சொல்வது சரியாகவே படுகிறது. திண்ணை இணைய இதழின் அக்டோபர் 2, 2011 தேதியிட்ட […]
இந்தநாள் இனிய நாள் என்ற உற்சாகக் குரலுக்குச் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். எளிமையான வார்த்தைகளில் தினம் ஒரு தகவல் பகிரும் இவரின் புத்தகம் சிறகை விரிப்போம். SIXTH SENSE PUBLICATIONS. வெளியீடு. விலை ரூ 100. தினமணியில் (வானொலி, தொலைக்காட்சி, பத்ரிக்கை ஆகியவற்றில்) வந்த தொடர் இது. சிகரம் தொடக்காத்திருக்கும் வாசகர்களின் சிறகுகளைத் தடவிக் கொடுத்து வானமே எல்லை என அவர்களைத் தயார்ப்படுத்துகிறது நூல். மதச்சார்பற்று எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கொள்கைகளைக் கருத்துக்களைப் பகிர்ந்து […]
லதா ராமகிருஷ்ணன் மரணதண்டனை கூடாது என்ற கருத்திற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மானுட வாழ்க்கையை முன்னின்று வழிநடத்திச்செல்வது அன்பும், அக்கறையும், அனுசரணையும், விட்டுக்கொடுக்கும் இயல்பும், மன்னிக்கும் மனோபாவமுமே. [ஒரு பிரச்னையில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து தரப்பினரிடமும் இவையாவும் இடம்பெற்றிருக்கவேண்டியதும் இன்றியமையாதது]. யார் அதிக வல்லமையாளர்களோ அவர்களே வெல்வார்கள் என்பதே வாழ்க்கைநியதி என்று சொல்லப்படுவது ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதுவே ஒட்டுமொத்த உண்மையல்ல. அதே சமயம், ‘மரணதண்டனை கூடாது’ என்ற இயக்கம் தொடர்ந்த ரீதியில் நடத்தப்படவேண்டிய ஒன்று. கருத்தியல் ரீதியாக இது […]
டி ஜே எஸ் ஜார்ஜ் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) கடந்த வாரம் காங்கிரஸ் முகாம் பீதியில் இருந்தது. திகிலடைந்த காங்கிரஸ் தலைவர்கள் சிறகுகள் பிடுங்கப்பட்டு நிர்வாணமான கோழிகள் போல அங்கும் இங்குமாக பதறியடித்துகொண்டிருந்தார்கள். முன்னாள் அமைச்சர் ராஜாவை சிறையில் தள்ளிய அதே 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் அரசின முக்கிய தூண்களில் ஒன்றான சிதம்பரத்தை நேரடியாகவும் வெளிப்படையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் சம்பந்தப்படுத்தப்பட்டதுதான் வெளிப்படையான காரணம். இத்தனைக்கும், சிதம்பரம் காங்கிரஸ் வட்டாரங்களில் ஒரு பிரபலமான தலைவர் அல்ல. தன்னுடைய சொந்த நலன், […]
‘தம்பி இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார். அவரால் கட்டிலிலிருந்து எழ முடியாதுள்ளது. இருக்கும் காணியை அடகுவைத்துத்தான் தம்பிக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவும் தம்பியைக் கவனித்துக் கொள்ளவென கட்டுநாயக்கவுக்கு வந்து அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். எனது கணவர், கொத்தனார் வேலை செய்து உழைக்கும் நாட்கூலியில்தான் எல்லாவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.’ கட்டுநாயக்க தாக்குதலின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மங்கள சம்பத் எனப்படுபவரது சகோதரியான சம்பிகா என்பவர்தான் மேற்கண்டவாறு எம்மிடம் தொலைபேசியில் […]
பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த நாள் தான் நினைவுக்கு வந்தது. நடந்த கால வரிசைப் படி சொல்ல சில சமயம் மறதியில் விடுபட்டாலும், நினைவுக்கு வந்த உடனே சொல்லி விட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன. அதற்குக் காரணம் தொடர்ந்து மிருணால் காந்தி சக்கரவர்த்தி பற்றியே எழுதி வந்ததால், அவனுடன் கொண்டிருந்த […]