தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய எனது கட்டுரையில் உண்மையான மக்களாட்சி எவ்வாறு இருக்கும் என்ற எனது கருத்தை விவரிக்கிறபோது அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கையில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தேன். 1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே கல்லூரி மாணவர்களுக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துத் தொழிலாளர்களான ஓட்டுனர், நடத்துனர் இணைந்த குழுவினருக்கும் இடையே […]
சுமார் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையில் என் மடி மீது உட்கார்ந்து கொஞ்சி விளையாடியவள் கனிமொழி. நானும் உனக்கு அப்பா மாதிரிதான் என்று சொன்னபோது கன்னங் குழியச் சிரித்து எனது சொல்லை அங்கீகரித்தவள் குழந்தை கனிமொழி. 1972 என்று நினைக்கிறேன். மதியழகன் மிகவும் வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தம்பி கிருஷ்ணசாமி நடத்திய தென்னகம் நாளிதழ் கட்சிப் பத்திரிகை போல் இல்லாமல் செய்தித்தாளாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக செய்தி ஆசிரியராக நான் அங்கு தினமும் சில மணி […]
பி.கே.சிவகுமாரின் ‘அறிவா உள்ளுணர்வா ‘ கட்டுரையில் எழுப்பப் பட்டிருக்கும் விஷயம் —இறந்து போன எழுத்தாளனைப் “போட்டுப்” பார்க்கும் தமிழ்க் குணாதிசயம் —- சில சிந்தனைகளை எழுப்புகிறது. கனிமொழியின் கைது விவகாரத்தில் பெருந்தன்மையுடன் எழுதும் அதே ஜெய மோகனின் பேனாதான் அடுத்த சில நாட்களிலேயே, மறைந்து விட்ட குத்தூசியைக் குத்திக் கிழிக்கிறது. கருணாநிதி பற்றிய கட்டுரையின் எதிர் வினை ஆக்கங்களினால் குத்தூசி மீது ஏற்பட்ட மனக் கசப்பு இன்று குத்தூசியின் மறைவுக்குப் பின் ஜெயமோகனை அம்மாதிரி எழுதத் தூண்டியதோ […]
சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில். வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார். அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல. என்னோடு அறையில் இருந்த நண்பரகள் அனைவரையும், அவர் தன் அன்பாலும் அக்கறையினாலும் பாதித்தார். வெளித் தோற்றத்தில் அவர் கொஞ்சம் பேச்சில் கடுமை காட்டுபவராக, கிண்டல் நிறைந்தவராக, கட்டுப்பாடுகள் மிகுந்தவராக, ஒரு அலட்சிய மனோபாவம் மிகுந்தவராகத் […]
“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங், -பிரெஞ்சு வரலாற்றாசிரியர் வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு முழுமைபெற நிகழ்வுக்கான காரணங்களும் நிகழ்வின் விளைவுகளும் முன்பின்னாக சேர்க்கப்படுகின்றன. வரலாற்றை எழுத சான்றுகளும் சாட்சியங்களும் போதும், படைப்புதிறன்குறித்த கேள்விகள் அங்கில்லை. வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை பேசுபவர்களென்ற நம்பிக்கையை அவர்கள்மீது வைத்திருக்கிறோம், அதாவது கணவன் […]
“கதைக்குள்ளேயிருந்து கதையை வெளியே எடுப்பதுதான் நான் செய்கிற வேலை” என்று சா. கந்தசாமி தனது எழுத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. இதை ஓர் இலக்கணம் என்றே விதித்துக் கொள்ளலாம், தற்காலப் படைப்பிலக்கியப் போக்கை அடையாளம் கண்டுகொள்வதற்கு. கதைக்குள்ளேயேயிருந்து பதமாகக் கதையை வெளியே எடுத்துப்போட வேண்டும். அது வாசக சுதந்திரத்திற்கு விசாலமான வெளியைக் கொடுத்து வாசகனை கெளரவிப்பதாக அமையும். இந்த விதியிலிருந்து வழுவாமல் ஒரு முயற்சியில் இறங்கி, அதில் கணிசமான வெற்றியையும் பெற்று விட்டிருக்கிறார், க. முத்துக்கிருஷ்ணன் என்ற […]
”அன்புக் குழந்தைகளே! தமிழ் நம்முடைய தாய்மொழி. நாம் நமது தாய்மொழியை மதிக்க வேண்டும். தமிழில் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் பழக வேண்டும். ஆங்கிலம் உலக மக்களை இணைக்கும் மொழி. நம் நாட்டின் பல்வேறு பாகங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துவரும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும், பல்வேறு தரமான இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் உதவும் மொழியாக இருந்துவருகிறது. ஒருவருக்கு ஆங்கிலம் தெரிவதால் மட்டும் அவர் சிறந்த, உயர்ந்த மனிதராகிவிடமாட்டார். நல்லமனிதராக வாழ்ந்தால் மட்டுமே ஒருவர் மதிப்பிற்குரியவர்; உயர்ந்த மனிதர். இதை […]
கனிமொழி கைது பற்றி எழுதிய ஜெயமோகன் இப்படி முடித்திருந்தார். “இச்சூழலில் ஊரே கூடிக் கொண்டாட்டம் போடும் போது கூடவே சென்று நாலு அடி போடுவதில் எனக்கு ஆர்வமில்லை. கனிமொழியைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரும்பிப் பதவிக்கு வரட்டும், அப்போது சொல்கிறேன்.” ஜெயமோகன் இதை இந்த விதமாகப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. இதைப் படித்தவுடன் 2000 ஆண்டு தீபாவளி தினமணி மலரில் சுகதேவ் ஜெயகாந்தனிடம் எடுத்த பேட்டியில், பின் தொடரும் நிழலின் குரல் பற்றிக் கேள்வி […]
வெகுகாலத்துக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு நகைச்சுவை துணுக்கு வந்தது. – ஒருவர் இன்னொருவரிடம் கேட்கிறார். என்ன டப்பா மேல ராஜீவ்காந்தி படத்தை ஒட்டி ஹால்ல வச்சிருக்கீங்க? அவர் சொல்கிறார் டிவியில எப்பவும் இப்படித்தானே வருது? அதனால சீப்பா முடிச்சிட்டேன்.- தூர்தர்ஷன் என்ற இந்திய அரசின் தொலைகாட்சி வந்த புதிதில் ராஜீவின் முகமே தினந்தோறும் எல்லா நேரமும் பார்த்து அலுத்த மக்கள் தொலைக்காட்சியையே வெறுக்கும் அளவுக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி இருந்தது. எப்போதும் இந்தி நிகழ்ச்சிகள். எப்போதாவது […]
1. “ நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போன காலம் உண்டு. நீரை அள்ளி அள்ளி குடித்திருக்கிறோம். நொய்யல் ஆற்று மணலில் அரசியல் கூட்டங்கள் நடப்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. திருப்பூர் மக்கள் உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். அதுதான் உலக அரங்கில் பனியன் பெருமையை உயர்த்தியது. இன்றைக்கு 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியைத்தரும் நகரமாக மாறியுள்ளதற்குக் காரணம் அந்த உழைப்புதான். வந்தாரை வாழ வைத்த பூமியாக திருப்பூர் மாறியதற்குக் காரணம் குறுகிய காலத்தில் எந்த வகையான […]