போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16 “என்னைப் பிடி பார்க்கலாம்” என்று ராகுலன் ஓட நந்தா துரத்திக் கொண்டு ஓடினான். உப்பரிகையிலிருந்த யசோதரா மற்றும் ராணி பஜாபதி கோதமி கண்ணில் இருவரும் மின்னலாகத் தோன்றி மறைந்தது தான். திடீரென மாடிப்படியில் தடதடவென இருவரும் ஓடி வரும் சத்தம் கேட்டது. “அண்ணி ராகுலனை நான் பிடித்து விட்டேன். அவன் தோற்று விட்டான். அதை ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கள்” என்றான். “நேற்று மாலை என்ன […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம் (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா பேராற்ற லோடு எவ்வித வேகத்தில் சூரிய உதயம் எழுகிறது பேரொளிப் பகட்டில் எனக்கு மாரக னாக ! இப்போதும் அல்லது எப்போதும் என்னிட மிருந்து சூரிய உதயத்தை என்னால் நீக்க இயலாது ! ஒளிப் […]
அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர் (1878-1968) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada http://www.youtube.com/watch?v=Yp4jUer3A4A [PBS] http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RRDQhBFhuiE நோபெல் பரிசு அளிப்பில் புறக்கணிக்கப்பட்ட அணுவியல் மேதை ! இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்! ரேடியம் கண்டு பிடித்து, ‘இயற்கைக் கதிரியக்கத்தை’ [Radioactivity] விளக்கிய மேரி கியூரியே முதல்வர்! தாயைப் பின்பற்றிச் ‘செயற்கைக் கதிரியக்கத்தை’ உண்டாக்கி மூலக மாற்றம் [Artificial […]
டாக்டர் ஜி.ஜான்சன் நான் ஒரு விடுமுறையின் போது என் மாமியார் வீடு சென்றிருந்தேன்.அங்கு மூத்த மைத்துனர் யேசுதுரை ஒரு உதவி கேட்டார். நான் என்ன உதவி எனக் கேட்டேன் கொஞ்சம் பொறுங்கள் என்று கூறியவர் காரில் வெளியேறினார்.அரை மணி நேரத்தில் திரும்பினார். அவருடன் இன்னொருவரும் மெல்ல நடந்து வந்தார். அவரின் நடையைக் கண்டதும் அவருக்கு எதோ உடல் நலப் பிரச்னை என்றுதான் எண்ணிக் கொண்டேன். இருவரும் என் எதிரே அமர்ந்தனர். ” டாக்டர் கணேசனை […]
பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும். உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும். பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி விடப் பார்க்கும். பிஞ்சுக் கால்களின் கிளுகிளுப்பில் சுழலும் பூமியின் களிப்பு கொஞ்சம் கூடிப் போயிருக்கும். ‘பொத்’தென்று கீழே விழும் குழந்தை கத்தும். ’தரை தானே தடுக்கிச்சு’- தரையை மிதித்துக் குழந்தையைச் சமாதானப்படுத்துவாள் தாய். சுழலும் பூமி சற்று நின்று சுழலும் மீண்டும். […]
கரிகாலன் விருது : “புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது” — மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து… சுப்ரபாரதிமணியன் — தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம் வழங்கும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பான ”கரிகாலன் விருது “ பெற்றிருக்கும் மலேசியா ரெ.கார்த்திகேசு அவர்களின் தொகுதி ” நீர் மேல் எழுத்து “ கல்கி வைரவிழா போட்டியில் ரெ. கார்த்திகேசுவின் “ஊசி இலை மரம்” பரிசு பெற்றபோது […]
’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் பர்மாவில் மழையில் முழுதும் நனைந்த ஒரு காலை வேளை. மஞ்சள் தகர மென்தகடு(tinfoil) போன்று நலிந்த வெளிச்சம் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குச் சாய்வாக, சிறைவெளியில் விழும். சிறிய மிருகங்களின் கூண்டுகள் போல், முன்புறம் இணை கம்பிகளால் கட்டமைக்கப்பட்டு வரிசையாய் இருக்கும் கொட்டங்கள்(sheds) போன்ற மரணக்குற்றக் கூடங்கள்.(condemned cells) வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு […]
என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் உன் மறுபாதி ! என்னை அணை என்னை அணை நான் தான் உன் வாழ்க்கை! வாலிபத்தை கரைத்து வானாந்தரத்தை தேடுகின்றாய்.! வற்றிய சமுத்திரத்தில் வழிதேடி அலைகின்றாய் ! மெளனத்தில் அமர்ந்து அகிலத்தை சுருக்கி- எதை தேடி அலைகின்றாய் எதிலும் நான் தான் ! உதிர விளையாட்டிற்கு உனக்கு தேவை – நான் தான் ! என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் பெண் ! – ஜெயானந்தன்.
எஸ்.எம்.ஏ.ராம் இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்தொன்றோடு உலகம் அழிந்து போகும் என்று அதற்குப் பல வருஷங்கள் முன்னாலிருந்தே பீதியைப் பரப்பத் தொடங்கி விட்டார்கள். மாயன் காலண்டரில் அதற்கு மேல் கிழிப்பதற்குக் காகிதமே இல்லை என்றார்கள். ‘’பூமியைக் காட்டிலும் நாலு மடங்குப் பெரிதாய் ஒரு கிரகம் வந்து கொண்டே இருக்கிறது, அது அன்றைக்குப் பூமியை மாடு முட்டுகிற மாதிரி ஒரே முட்டாய்த் தள்ளித் தூளாகி விடப் போகிறது’ என்றார்கள். பெரிசாய் சினிமா எல்லாம் எடுத்துக் […]
கிரணங்கள் ஊடுருவிப் பாய்கிறது மனிதனின் நகல் நிழல்களைத் தொடர்கிறது பசி கொண்ட காளைகள் வைக்கோல் போரை சுமக்கின்றன உச்சி வெயில் பாதைகளை மறந்து நிஸ்சிந்தையாய் தோண்டித் துழாவி இலக்கியம் ஒரு கடைச்சரக்கு கொள்வாரின்றி நிலத்துக்கு சுமையாய் கவிதையில் சந்தங்களையும், தாளங்களையும் துரத்தியாயிற்று மின்கம்பம் ஒலியைக் கடத்துவது சிறுபிள்ளை விளையாட்டு நீ நான் உன்னையும் என்னையும் அடகு வைத்து விட்டால் உலகம் இயங்காது வேசிகளாய் அவிழ்த்துக் காட்டும் மரங்கள் ஒரு மதிய வேளை எப்பவும் போல் இருக்கும் […]