மகிழ் !

This entry is part 4 of 6 in the series 14 ஏப்ரல் 2024

சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் […]

அதுவே போதும்

This entry is part 5 of 6 in the series 14 ஏப்ரல் 2024

வளவ. துரையன் என் தோழனே!நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை.மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை.என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை.நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு.உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு.அதுவே போதும்

கிளறுதல்

This entry is part 6 of 6 in the series 14 ஏப்ரல் 2024

வளவ. துரையன் குப்பையைக்கிளறினால்தான்கோழிக்கு இரைகிடைக்கிறது.அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவனசிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும்.அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும்அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ?இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா?அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன.நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதைநாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.

கனடாவில் சூரியனைத் தேடிய பயணம்

This entry is part 3 of 6 in the series 14 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன் கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலநிலை காரணமாக இம்முறை கனடாவில் பனி கொட்டுவது மிகக் குறைவாகவே இருந்தது. வழமைபோல ஆய்வாளர்கள் பல காரணங்கள் சொன்னாலும், இந்த மாற்றத்திற்கு எல்நினோ (El Nino) என்ற பசுபிக்சமுத்திர நீரோட்டமும் இம்முறை ஒரு காரணமாக இருந்தது. சில வருடங்களுக்கு ஒரு முறை டிசெம்பர் மாதத்தில் எல்நினோவின் இதுபோன்ற பாதிப்பை […]

வாழ்வு – ராகம்

This entry is part 2 of 6 in the series 14 ஏப்ரல் 2024

ஹிந்தியில் : சந்தோஷ் அர்ஸ் தமிழில் : வசந்ததீபன் — கிடைத்து இருக்கிறது பார்வை கொஞ்சம் பார் சற்று பார்த்தால் இந்த பூமி, ஆகாயத்தின் நீலம் , நட்சத்திரங்கள் சூடிய இந்த இரவின் வானம் இவை மலைகள் , நதிகள் , அருவிகள் , பரந்த கடல் இந்த காட்டாறுகள் , ஏரிகள், மரங்கள் , அழகான புல் மைதானங்கள், ஏரிகள் _ தால் _ஸர்_ அனுபம் மற்றும் பூக்களின் இந்த அழகான பள்ளத்தாக்குகள் _  பார் […]

முதல் கல்

This entry is part 1 of 6 in the series 14 ஏப்ரல் 2024

ஆர் வத்ஸலா ஒரு காலத்தில்எனக்கு நண்பனாகஇருந்தான்எப்போதாவது சந்திப்போம்எப்போதாவதுபேசுவோம்புலனத்தில்குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிக்கடிமனைவியைப் பற்றிமகளைப் பற்றி அன்புடன் பேசுவான்அவன் மேல்எனக்கிருந்ததுஅன்பும் மதிப்பும்என் காரணமாகஎன் குடும்பத்தினருக்கும்பிறகுகாரணம் சொல்லாமல்வந்ததுஅவனதுமௌன விலகல்என்னை வருத்திக் கொண்டு நீண்ட மௌனத்திற்குப்பிறகு வரத் தொடங்கினநட்புக்கு கல்லறை கட்ட மறுத்துநான் பிடிவாதமாகஅனுப்பக் கொண்டிருந்த குறுஞ்செய்திகளுக்குஎதிர்வினைகள்மரியாதை நிமித்தம் அனுப்பப் பட்டவை என்று பறை சாற்றிக் கொண்டுமறுக்கிறேன் நான்தான்முதல் கல்லை வைக்கவிடுதலைக்கான முதலடி அதுதான்என்றறிந்திருந்தும்