samaskritam kaRRukkoLvOm 56 சமஸ்கிருதம் 56 இந்த வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லைப்பற்றித் தெரிந்துகொள்வோம். இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது ‘अपेक्षया’ என்ற சொல்லை உபயோகிக்கிறோம். உதாரணமாக மோகன் மற்றும் அர்ஜுனன் என்ற இரு நண்பர்கள் உள்ளனர். மோகன் அர்ஜுனனைவிட சற்று உயரம் அதிகம். இதை சாதாரணமாக ’மோகன் அர்ஜுனனைவிட உயரம்’ என்று கூறுவோமல்லவா? இதையே சமஸ்கிருதத்தில் अर्जुनस्य अपेक्षया मोहनः उन्नतः (arjunasya apekṣayā mohanaḥ unnataḥ) என்று கூறுகிறோம். […]
(கட்டுரை: 72 ) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குதிரை ஆழியைச் சுற்றுவது பரிதி. பரிதி வடுக்கள் தோன்றி ஊழித் தீயின் ஓவிய நாக்குகள் நீளும் ! தீ நாக்குகள் அண்டங்களைத் திண்டாட வைக்கும் ! பரிதியில் பூகம்பம் ஏற்படும் ! ஓயாத சூரியனும் ஒருநாள் ஒளிவற்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் பூகம்பத் தொடரியக்கம் தூண்டும் பரிதியின் தீப்புயல்கள் ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி வெப்பம் […]
ஏப்ரல் மாதம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஓர் இலக்கிய விழா இது. அமைப்பு தொடங்கி 42 ஆண்டுகள் ஆகிவிட்டன எனச் சொல்லும்போதே நிறுவனர் லட்சுமணனுக்கு குரல் கம்மி விட்டது. பாரதி என்பவர் தன் உடல்நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை அன்று மாலை சென்னையில் நடத்தி வருகிறார். விழா அவரை முதன்மைப்படுத்துவதில்லை என்பது ஒரு குறை. இந்த வருடம் மேடையில் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன், அவரைப் பற்றிக் குறும்படம் எடுத்த பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் வெண்ணிலா, […]
இந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். இதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. இதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை உணர்வு என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்பதுதான். இவரிடம் மட்டுமே இறைவன் பேசினார் மற்றது எல்லாம் போலி என்பதோ அவரவர் பார்வை மட்டுமே. இந்த இறை அனுபவம் அல்லது ஆன்மீக உணர்வு என்பது god […]
” ஜிக்கன் வந்துட்டான்மா ” என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததாய் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என் காதிலேயே விழுந்தது. ஜிக்கன் என் மாமா பையன். பொள்ளாச்சியில் எல்.ஈ.ஈ ( இந்தக்காலத்து டிப்ளமா இன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயரிங்க் ) படித்துவிட்டு அங்கேயே ஏதோ பட்டறையில் சூப்பர்வைசராக இருந்தவனை என் மாமா வலுக்கட்டாயமாக பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பில் கலாசி என்னும் கடை நிலைப் பணிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். […]
ஆயிரம் அர்த்தம் தனிமையை அருந்தும் போது மனம் மனிதர்களைத் தேடுகிறது வாடிய பூக்களைக் கண்டு மொட்டுக்கள் சிரித்தன பழுத்த இலை மரத்தினிடையேயான பிணைப்பை முறித்துக் கொண்டது கடல் மானுட இனத்திற்கு முடிவுரை எழுதப் பார்க்கின்றது ஓர் மழை நாளில் தான் என் முதல் முத்தம் பரிமாறப்பட்டது வெறுமையை நிவர்த்தி செய்யும் குழந்தையின் மழலை முகில் காற்றுக்கு எதிராக பயணிக்க பிரயத்தனப்பட்டது பிரியும் தருணங்களில் அழுகையை விட மெளனமே சிறந்தது. ———- மச்சம் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு […]
உதிர்ந்துப்போன பிறகும் !! தன்னுடன் வைத்திருக்கும் சத்தமெனும் சலசலப்பை சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்!! தன் கண பரிணாமத்தை இலேசாக மாற்றி இருக்கும் சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்! கிடக்கவும் ,பறக்கவும் காற்றுடன் சேர்ந்து சுழலவும் கற்றுக்கொண்டிருக்கும் சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்! உக்கிரமாய் பற்றிக்கொள்ளும் தீயையும்,ஈரத்தையும் இயல்பை பெற்றுவிடும் சருகுகள், பச்சையாய் இருந்தபோது இல்லாத அத்தனை செளகரியங்களும் சருகானதும் உதிர்ந்த பிறகு தனித்தோ தாடி , வளர்த்தோ திரிவதில்லை சருகுகள், முழுதும் மாறிப்போகிறது சருகிடம், மனிதன் உதிர்வதில்லை? உதிர்ந்த ஒன்றாய் […]
மரத்தின் இலைகள் மஞ்சளும் சிவப்புமாய் நிறம்மாறிக் காத்திருக்கின்றன இலையுதிர்க்காலத்திற்காய் என்னைப் போலவே. வெள்ளை மனிதர்களுக்கு நடுவில் கருங்காக்கைகள் கத்துவதும் கூட காதுகளுக்கு சங்கீதமாய். எவரும் துணையில்லாத பயணத்தில் செக்குமாடுகளாய் பூமியைச் சுற்றியே வலம் வருகின்றன என் பால்வீதிகள். எப்போதாவது என் வட்டத்தைத் தாண்டி எட்டிப்பார்க்கும் கண்களை எரித்துவிடுகின்றன எரிநட்சத்திரங்கள். கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றின் நீள அகலத்தைஒட்டியே தீர்மானிக்கப்படுகின்றன எனக்கான என் சுற்றுப்பயணங்கள்.
“2012ல் உலகம் அழிந்துவிடும் என்கிறார்களே.. இது உண்மையா அம்மா? ” என்று வினிதா என்கிற வினு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டது அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. “இது என்ன கேள்வி வினு. உன் எண்ண்ம் ஏன் இப்போது இதில் போகிறது…? “ “இல்லமமா, புவி வெப்பமயமாதலும் இதற்கொரு காரணம் என்று படித்தேன்.. அதான்” ”அதிருக்கட்டும், இப்ப இதெல்லாம் பேசற காலமா வினு, உனக்கே இது நியாயமா இருக்கா…” வினுவின் அம்மா கோமதிக்கு பெரும் கவலையாகி […]
நாய்களிரண்டு கூடி குலாவியிருந்ததன் சாட்சியாய் புதிதாய் பிரசவித்த குட்டி நான்கின் ஊழைக் கதறல் நிழலுக்கும் வாசத்திற்கும் ஒதுங்கும் ஊர்க்குருவிகள் அவ்வப்போது மலம் கழிக்க வந்து போகும் கருத்த பூனையொன்று. போவோர் வருவோரென அத்தனை பேரின் மூத்திரத் துளிகளை உள்வாங்கி செரிக்கும் தளமும் சுவரும் . சிறார்கள் ஆடியும் ஓடியும் ஒளிந்தும் சேர்த்து வைத்த சந்தோசச் சப்தங்கள் உலாவரும் நடுநிசிப் பேய்களின் கூட்ட அரங்கம். துரத்தப்பட்ட அத்தனை அகதிகளின் விலாசத்தை விழுங்கி உயரே நிற்கிறது புதுக்கட்டிடமொன்று- நாளை நான்கு […]