பிரியங்கா முரளி என்னங்க அத்தை! பலகாரம் எல்லாம் ஆச்சா ?இல்ல இன்னைக்கும் இந்த வாலுங்க டிவி முன்னாடி தான் தவம் கிடக்குதுங்களா ?” ஆர்ப்பாட்டமாக கேட்டபடி உள்ளே நுழைந்தான் சக்திவேல் ! திருப்பூரில் அந்த வட்டாரத்தின் கேபிள் டிவி ஆப்பரேட்டர் ! வயது 23 , திருப்பூரில் சிறிய சாயப்பட்டறை வைத்து இருக்கும் கந்தசாமியின் மனைவி புனிதாவின் ஒன்று விட்ட அண்ணன் மகன் ! புனிதாவின் பெண்ணை அதாவது பாரதியை அவனுக்கு கொடுப்பதாக சிறு வயதிலேயே […]
தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள். பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேரம் போகுது கண்மணி ! நீ சிரித்து விளையாடு கிறாய் நீடித்த இன்பம் அளிக்குமா அது ? நீடிக்க இச்சைதான் காதலிக்க வேட்கை உளது ஏன் அவை விழித்து ஆத்மாவில் எழுவ தில்லை ? எப்போது வரும் வாழ்விலே கண்ணும் கண்ணும் கலந்து கவிழ்ந்திடும் ஐக்கியம் ? இனிய தீப்பொறியில் இனிக்கும் உடல் அக்கினியில் புதியதாய் நம் பிறப்பு ! கண்களின் குழி நிரம்பி […]
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம் ++++++++++++++++++++++++++++ வாலிபனும் ஆயுட் காலமும் ++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் […]
1927 மார்ச் 2 அக்ஷய மாசி 18 புதன் மதராஸ். மதராஸ். மதராஸ். குழாய் மூலம் வெகு தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த மாலுமிகளில் ஒருத்தன் சொன்னான். கூட நின்ற கூட்டாளிகள் நாலைந்து பேர் உரக்கக் கைதட்டினார்கள். அந்தக் கைதட்டல் கீழே எஞ்சின் ரூமுக்குக் கடக்க, அங்கே இருந்து அவசரமாக வெளியே வந்து இன்னும் நாலு கப்பலோட்டிகள் ஓ என்று ஹூங்காரம் செய்து வானத்தைப் பார்த்து ரெண்டு கையையும் பரக்க நீட்டிக் கும்பிட்டார்கள். குசினியில் […]
புலம் பெயர்ந்த எழுத்தாளர்களோடு எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களோடு, எனக்கு பரிச்சயம் உண்டு. எம் ஜி ஆர் ஆதரவால், அவரது நகரிலேயே, அவர்கள் பெருமளவில் குடியிருந்தார்கள். எண்பதுகளில் எனது வங்கி கே கே நகர் கிளையில், அவர்கள் கணக்கு வைத்திருந்தார்கள். தலையில் விக் வைத்துக் கொண்டு தமிழ்மகன் என்கிற பெயரை சி டி மகான் என்று மாற்றிக் கொண்ட ஒருவர் எனக்கு, மாசக்கடைசியில் பணப்பற்றாக்குறை காரணமாக யஷிகா கேமராவை இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்றார். […]
மெல் கிப்ஸனின்ன் ‘ அப்போகாலிப்டோ ‘ பார்த்திருக்கிறீர்களா? அடிக்கடி சோனி பிக்ஸில் போடுகிறார்கள். சூப்பர் படம். அருமையான வண்ணங்கள். துல்லியமான ஒளிப்பதிவு. காட்டில் வாழும் இரு ஆதிவாசிக் கூட்டங்களுக்கிடையே நடக்கும் சண்டை. வலிய கூட்டம், எளிய கூட்டத்தைப் பிடித்து, கட்டிப்போட்டு, சித்திரவதை செய்து, கொன்றொழிக்கும் கதை. கொஞ்சம் ஈழச் சாயல். தப்பிக்கும் ஒருவன், அவனது நிறைக்கர்ப்பிணி மனைவி, இரண்டு வயது மகன், துரத்தும் நான்கைந்து பேர். அவன் அவர்களை வென்றெடுத்து, மனைவி, குழந்தையை மீட்பது அப்போகாலிப்டோ. கருணா […]
அறுபதுகளில் வந்த படம், சிலரின் அரிய முயற்சியால் டிஜிட்டலாக்கப்பட்டு, வரவேற்பும் பெற்றிருப்பது ஆச்சர்யம். பிரம்மாண்டமும், துல்லிய வண்ணமும் காரணமாக இருக்கலாம். சிவாஜியைப் பற்றி அறியாத, அப்போது பிறந்திராத இளைய தலைமுறை கூட, அவ்வப்போது மெல்லிய சிரிப்பினை வெளியிடுவது, இது ஒரு திரைக்காவியம் என்றே பறை சாற்றுகிறது. கர்ணன் வெளிவந்த புதிதில் சாந்தி தியேட்டரில் திரையிட்டிருந்தார்கள். பெரிய கட் அவுட்டுகளில், தங்கத் தேர்களில் சிவாஜியும்( கர்ணன்)என் டி ராமாராவும் ( கண்ணன் ) எதிரெதிர் நின்று கொண்டிருக்கும் போஸ், […]
இருக்கும் போது பலவற்றை கற்றுக் கொடுத்த அம்மா இறந்தும் கற்பித்தாள்… மரணத்தின் வலி எப்படி இருக்கும் ?… உணர்த்திற்று அம்மாவின் மரணம். சு.ஸ்ரீதேவி
அரக்க கரும் நிழலொன்று தன் காலணி அணியா வருங்காலால் மணலை இழைத்துக் கொண்டு வருவது போல மரணத்தின் மாயத்திற்குள்ளிருந்து விடுபட்டு கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி வந்தான் அவன்! ஓவியனின் முடிவுறாத ஓவியத்தை மெல்லிய கண்ணாடி வழியாகப் பார்ப்பது போலிருந்தது – அவனின் முகமும் உடலும்! நெற்றியிலும் புருவங்களிலும் வேடிக்கையானதொரு கோடு பூமியதிர்வின் சாம்பலழிந்துப் போன கோட்டைகளில் பூசப்பட்டிருப்பது போலவும் கண்களுக்கு கீழும் கன்னக்குழிகளிலும் மண்ணின் நீலம் பாரித்திருந்தது. அவனது சொற்கள் தன் வலியையும் இன்பத்தையும் தாகத்தையும் பசியையும் […]