மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக ஒவ்வொரு அரண்மனையையும் அடைந்து வசிக்கலாயின. பல விழாக்கள், நாடகங்கள், விவாகங்கள், விருந்துகள், பானங்கள் முதலியவற்றைக் கொண்டு ஆனந்தம் கொண்டாடி அவை காலம் கழித்து வந்தன. இப்படி அவை இருந்து வருகையில், ஏரியில் நீர் இருக்கிறது […]
இதழ்களை வெளியிடும் தொழில் நுட்பம் இன்று எவ்வளோ மாற்றமடைந்து, நவீனமயமாகிவிட்டது என்றாலும் தொடக்கத்தில் அது கடுமையான மனித உழைப்பைச் சார்ந்தே இருந்தது. ஈயத்தில் வார்த்தெடுத்த தனித்தனி எழுத்துகளைப் பொறுமையாகவும் கண்கள் வலிக்க, வலிக்கவும் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வாசகங்களை உருவாக்கி, ஒரே நேரத்தில் இரண்டு அல்லது நான்கு பக்கங்கள் மட்டுமே அச்சடிக்கத் தகுந்த சட்டங்களில் பொருத்தி, ட்ரெடில் என்கிற ஒற்றைக் காலால் மிதித்து இயக்க வேண்டிய இயந்திரத்தால்தான் ஆரம்ப காலப் பத்திரிகைகளை வெளியிட வேண்டியிருந்தது. இப்படிச் சென்னையில் […]
1990இல் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? 2560 ரூபாய். 2012 இல் அதன் விலை என்ன தெரியுமா? 21500 ரூபாய் வரை வந்தது. சென்ற வருடத்தைய விலை ஏற்றத்தை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒரு வாரத்திலேயே ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும். இப்போது வெள்ளைத் தங்கம் என்று சொல்லப்பட்ட மிக அதிக விலை கொண்ட பிளாடினத்தின் விலையை விடவும் தங்க விலை அதிகம். தற்போது பல்வேறு வங்கிகளும் தங்கக் கணக்கில் சேமிக்குமாறு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லி வருகிறார்கள். […]
புதுவையில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா-2012 கொண்டாடப்பட உள்ளது. 20.04.2012 மாலையில் கலையரங்கம், பாட்டரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீடு நடைபெற உள்ளது. பாவேந்தர் புகழ் விருது அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை சட்டப்ரேவைத் தலைவர் வ.சபாபதி, அமைச்சர் தி.தியாகராசன், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், கல்விச்செம்மல் வி.முத்து, முனைவர் அ.அறிவுநம்பி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பாவேந்தர் பேரன் கோ.பாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகின்றார். இடம்: வேல்சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி, இந்தியா நாள்: 20.04.2012,(வெள்ளிக்கிழமை) […]