டாக்டர் ஜி. ஜான்சன் தாம்பரம் புகைவண்டி நிலையம் சென்னை நகருக்கு நுழைவாயில் எனலாம். தெற்கிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் அனைத்து புகைவண்டிகளும் இங்கே நிற்கும். தாம்பரத்திலிருந்து சென்னை வரை செல்ல மின்சார இரயில் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தை மதிய உணவும் இரவு உணவும் மிகவும் சுவையாக தயார் செய்திருந்தார். வீட்டில் வளர்க்கும் கோழியைப் பிடித்து அறுத்து குழம்பு வைத்திருந்தார். […]
1. வருவதும் போவதும் பேருந்து கிளம்பிச் சென்றதும் கரும்புகையில் நடுங்குகிறது காற்று வழியும் வேர்வையை துப்பட்டாவால் துடைத்தபடி புத்தகம் சுமந்த இளம்பெண்கள் அணிஅணியாக வந்து நிற்கிறார்கள் மனபாரத்துடன் தவித்து நிற்கிறான் சில்லறை வியாபாரி ஏற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றன விற்காத போர்வைக்கட்டுகள் மின்னல் வேகத்தில் தென்பட்டு நிற்பதைப்போல போக்குக்காட்டி தாண்டிப் பறக்கிறது நிறுத்தங்களற்ற வாகனம் கடற்கரை கடைத்தெரு தனிப்பாடல் பள்ளி நண்பர்கள் வீடு திரைப்படம் மதுச்சாலை இசைக்கச்சேரி செல்ல வந்து நிற்கிறார்கள் தனித்தனியாக கணிக்கமுடியாத மழையை […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நான் எழுதிய The Story of Jesus Christ Retold in Rhymes, Cyberwit.net Publishers, HIG, 45, Kaushambi Kunj, Kalingapuram, Allahabad 211011 (U.P) இன் வெளியீடாக வந்துவிட்டது. தொடர்புக்கு info@cyberwit.net மிக்க நன்றி Attachments area Preview attachment GetAttachment (2).jpg
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?v=GMbWzJll0lE&feature=player_detailpage 2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும், விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும். ஜொஹான்னஸ் விக்ட் [மாக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆய்வுக் குழுத் தலைமை விஞ்ஞானி] பூதக்கோள் வியாழனில் பெருங் காந்த மண்டலம் இருப்பது அறிவிக்கப்பட்டது. சூரிய […]
முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. சங்கப்பாடல்களை நாடகத் தன்மையில் அமைந்த தனிநிலைச் செய்யுள்கள் எனலாம்.கலித்தொகைப் பாடல்களும்ää அகநானூற்றுப் பாடல்களும் ஓரங்க நாடகங்களைப் போல காணப்படுகின்றன. ‘பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்’ எனும் பட்டினப்பாலை வரி அக்கால மக்கள் நாடகத்தைக் கண்டு களித்த செய்தியைக் கூறுகிறது. பெரும்பாலும் தொல்காப்பியர் கூறிய நாடகங்கள் (கூத்துக்கள்) அவற்றின் வகைகள் பற்றிச் சங்க இலக்கியங்களில் காணலாம்.கூத்தரும் பாணரும் பாடினியும்ää பொருநரும் நாடகக் கலையையும்ää இசைக்கலையையும் […]
“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது? மீனாம்பா? – அட, போ! மீனாம்பாள் இறந்துபோய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே? ….. ஐயோ எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்? ….. ” என்பதாக ஒரு க்ஷணத்திலே […]
1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி நீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் “கடவுள் இறந்துவிட்டார்”, “கடவுள் இல்லை” என்று சொன்னால் ஒரு வேளை நம்புவான். ஆடு, கோழி அறுக்கிறவனிடம் போய்ச் சொன்னால், “ஏதோ அய்யனாரப்பன் பேரைசொல்லி வாய்க்கு ருசியா சப்பிடலாம்னு நெனைச்சா அதுக்கும் வேட்டு வைக்கிற, போய்யா போய் வேலையை பாரு” என்பான். […]
திரையுலகில் அரசியல் புகுந்ததும், அரசியலில் திரையுலகம் புகுந்ததும் இரண்டு துறைகளுக்கும் கெடுதலாக முடிந்துவிட்டது. இரண்டுதுறைகளும் விவாகரத்து செய்துகொள்வது அரசியலுக்கும், கலைக்கும் நல்லது. அப்படி ஒரு விவாகரத்து ஏன் அவசியம் என்பதையும், அத்தகைய விவாகரத்து நடைபெறவேண்டிய முறையையும் இக்கட்டுரையில் ஆராய்வோம். திரைப்படங்களின் வலிமையை உணர்ந்த முதல் இந்திய அரசு என காலனிய ப்ரிட்டிஷ் அரசை சொல்லலாம். தம் அரசுக்கு எதிராக திரைப்படங்கள் கருத்து கூறுவதை தடுக்க தணிக்கை முறையை அறிமுகபடுத்தினார்கள். இத்தணிக்கை முறை நடிகர்களை அரசியல்வாதிகள், முதல்வர்கள் ஆகியோரை […]
சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு. க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது. இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது […]
ஒரு முடிவிற்கு வந்தாயிற்று, இனி மிகச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று. என் தனித்துவத்தை நானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்க, என்னை நான் வடிவமைத்துக் கொள்வதில் என் நண்பர்கள் பெரும்பங்கு உதவி வருவதை அனுபவத்தில் கண்டேன். தாழ்வு மனப்பான்மையில் இருந்து நான் வெளி வரவும். சமூகத்தில் நான் முக்கிய பங்கு வகிப்பதையும் அவர்கள் விரும்பு கிறார்கள். உன் பாதம் கல்லில் இடராதபடி அவர்கள் தாங்கிக்கொண்டு போவார்கள் என்று ஒரு வேத வசனம் உண்டு. வேதத்தை […]