”திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே”(பெரியாரிய எதிர்ப்பாளர்களுகு பதிலடி தரும் நூல்) தொகுப்பாசிரியர்: தமிழேந்தி பெரியார் முவைத்த திராவிடர் கோட்பாட்டுக்குத் தவறான , வரலாற்று உண்மைகளுக்கு மாறான திரிபுகளும் திருத்தல்களும் சில முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பொய்மைகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ”திராவிடம் , பெரியாரியம் இன்றும் தேவையே” எனும் தலைப்பில் பாவலர் தமிழேந்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மிகச்சிறந்த கருத்தாக வெளிவந்துள்ளது. பெரியார் தமிழுக்கு எதிரி; திராவிடர் […]
எதுவும் சூனயத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத்தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணங்களும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்ததில்லை. அதற்கும் முந்திய தடங்களைக் காட்டும் சங்கிலித்தொடர் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும்.. தான் ஒரு வரலாற்றோடு வந்தாலும், வந்தபின் தனித்து விடப்பட்டு அவ்வக்காலத்து சூழலுக்கு ஏற்ப இன்னொரு வரலாற்றை அது உருவாக்கிக்கொண்டே போகிறது. […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நல்லதோர் காலமும், நலமிக்க சூழ் வெளியும் உள்ளது எனக்கென்று நான் அறிவேன்; என்னை யாரும் எடை போட வில்லை ! என்னை என்றும் எடை போடவும் இயலாது ! எல்லோரும் வந்து கேளீர் ! நில்லாத பயணத்தில் மிதிநடை வைத்து விட்டேன் ! என் அடையாளச் சின்னங்கள் : மழைநீர் ஒட்டா அங்கி, சிறந்த […]
(குட்டி திருவிழா) 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது பெறுபவர்: லீனா மணிமேகலை. நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோவின் 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருதையொட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 5 (05-08-2013, திங்கள்) ஆம் தேதியிலிருந்து 11 (11-08-2013, ஞாயிறு) ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் வெவ்வேறு ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடல் நடைபெறவிருக்கிறது. 05-08-2013, திங்கள் – “பீ” ஆவணப்படம் – R.P. அமுதன் (இதனுடன் ஒரு குறும்படம்) 06-08-2013, செவ்வாய் – ஒருத்தி […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 19. புதுயுகம் படைத்த படிக்காத ஏழை ….. வாங்க ….. வாங்க…. எப்படி இருக்கீங்க… நல்லா இருக்கீங்களா?…அப்பறம் ஏன் பேசமாட்டேங்குறீங்க… விடை தெரியவில்லையா.. சரி….சரி.. மனசப் போட்டுக் குழப்பிக்காதீங்க… நானே சொல்லிடுறேன்… அந்த மேதைதான் மைக்கேல் ஃபாரடே. இப்ப நினைவுக்கு வந்திருச்சா..ஆமா…மா…டைனமோவக் கண்டுபிடிச்சவருதான்…. அவருதான் ஒரு புதிய […]
-முடவன் குட்டி “……ஒரு வாரத்தில துட்டு தாறேன்-னு சொல்லி, போன வெள்ளிக் கெழமெ அரிசி வாங்கிட்டு போனியே..? மூணு கெழமெ கழிஞ்சாச்சே.. துட்டு எங்களா..? ஓர்மையத்துப் போச்சா? இப்ப திருப்பியும், அரிசி கடனா தா-ன்னு வெக்கமில்லாம வந்து நிக்கிறியே..? – தீ கங்குகளாய் சொற்களை உமிழ்ந்தாள் சுபைதா பீவி. . “ ….மாமி பாவு அடசியாச்சு..(1) நாளைக்கு பாவு ஆத்தி,(2) தரவன் –ட்ட (3) ரூவா வாங்கி நாளெ ராத்திரியே பழய கடனையும் சேத்து குடுத்தர்ரேன்….” – […]
எஸ். ஸ்ரீதுரை கொதிக்கும் வெய்யிலில் புகைவண்டிப் பயணம் அம்மாவின் கட்டுச்சோறு சலங்கை கட்டிய குதிரை வண்டியில் மாமன் வீட்டை அடைதல் கொல்லைப்புறத்துக் காவிரியில் மாமன் மகன்களுடன் கும்மாளம் டெண்ட்டுக்கொட்டாயில் கட்டபொம்மன் நைட்ஷோ மலைக்கோட்டை சமயபுரம் […]
ஒற்றைத் தலைவலி என்பது கண் , வயிறு பிரச்னையுடன் அடிக்கடி ஏற்படும் தலைவலியாகும்.மன உளைச்சல் காரணமாக உண்டாகும் தலைவலியும் ( tension headache ) ஒற்றைத் தலைவலியும் ஒரே மாதிரி உள்ளதால் இரண்டுக்கும் வித்தியாசம் காண்பதில் குழப்பம் உண்டாகலாம்.மக்கள் தொகையில் 10 சத விகிதத்தினருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி எப்படி உண்டாகிறது என்பது சரிவர தெரியவில்லை.ஆனால் மரபு வழியாக சில குடும்பங்களில் இது உண்டாவது தெரிய வருகிறது. விண் விண் என்று வலிக்கும் ஒற்றைத் […]
லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை.இடம்: தி புக் பைன்ட், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை (தினமலர் அலுவலகம் அருகில்) நேரம்: மிக சரியாக மாலை 5 மணிக்கு. (5 PM Sharply)நண்பர்களே எதிர்வரும் வியாழக்கிழமை (சுதந்திர தினத்தன்று) சென்னையில் லெனின் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. உங்கள் அனைவரையும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் அன்போடு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள். ————————————————————— தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது – 2013 […]
பிரச்சார நெடியின்றி சொல்ல வந்ததை,அழுத்தமான வசனங்களாலும் , இயல்பாகவே அமைந்து விட்ட காட்சிகளைக்கொண்டும்,காட்சிகளுக்கு பொருந்தும் அளவான இசையோடும் என இவ்வளவையும் வைத்துக்கொண்டு கூடவே ஒரு செய்தியும் சொல்லவேண்டும் என நினைத்து எடுத்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் காந்தி. செண்ட்டிமெண்ட்டலாக K Series-ல் ஆரம்பிக்கும் ‘ஏக்தா கபூரின்’ டீவி சீரியல்களுக்கென வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரிடமிருந்து இப்படி ஒரு நம் மனதில் அழுந்தப் பதியவைக்கும் படம், முதலில் ஒரு சபாஷ் போட்டுவிட்டுத்தான் விமர்சனம் எல்லாம். தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறான் அந்தப்பையன் […]