ஆர் வத்ஸலா நிறமிழந்த ‘பாலிஸ்டர்’ சட்டை அணிந்த அவன் அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தான் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை பிரித்துப் போட்டான் எல்லோரும் நல்லாடைகளில் கூடிய பின் சிறுகொடியும் குண்டூசியும் தந்து தானும் ஒன்று குத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக் கதர் சட்டை அணிந்திருந்த குடியிருப்பு சங்கத்தின் காரியதரிசிக்கு கடைசி நிமிடத்தில் தான் சாக்லெட் பாக்கெட் எடுத்து வர மறந்தது நினைவுக்கு வர ஓடினான் இவன் நிலவறையிலிருந்த சங்க அலுவலகத்திற்கு திரும்பு முன் முடிந்துவிட்டிருந்தது கொடியேற்றம் […]