ஓநாய்கள்

This entry is part 2 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

   மு. தூயன் முதல் நாள் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்ட் கசகசவென்று சகதியாகயிருந்தது. பஸ் உள்ளேயும் மிதமான வெப்பம் பரவியிருந்தது. வெளியேயிருக்கும் புழுக்கத்திற்கு இது மேலும் வெப்பத்தை அதிகப் படுத்தியது.எப்போதும் அமரும் இடத்தில் இன்று வேறு ஒருவர் இருந்தார். அவள் அவருக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தாள். ஜன்னல் கண்ணாடியை தள்ளிவிட்டு மெதுவாக காற்றை உள்வாங்கினாள். இரவு மழைக்குப்பின் விடியும் பகல், நகரத்தை புதிதாகவே காட்டுகிறது. கட்டிடங்களும், தார்சாலைகளும், மரங்களும் புதுவண்ணம் பூசியது போல அவளுக்கு தெரிந்தது. […]

திருக்குறளில் இல்லறம்

This entry is part 3 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

செ.சிபிவெங்கட்ராமன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஓலைச்சுவடித்துறை,, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 613 010     மின்னஞ்சல்: sibiram25@gmail.com                                                   திருக்குறளில் இல்லறம் மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு. உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார். உள்ளத்தின் உண்மையொளியே அறமாகும். மனத்தினும் பாவத்தை நினையாது யாருக்கும் எவ்வுயிர்க்கும் கேடு நினையாது, இரங்கும் தயவும், கொலை, பொய், வஞ்சகம் […]

ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?

This entry is part 1 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன் உருவாக்கப்பட்டது என்று அறியாதவர்கள் தான் இவ்வாறு கூறுவர். இதை ஏற்றுக் கொண்டால் ஜெயலலிதா,ஷண்முகம்,ஸரஸ்வதி,ஹரிஹரன்,லக்ஷ்மி,ஸ்ரீதேவி என்ற பெயருள்ளவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா அல்லது தமிழ் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமா? கருணாநிதி, தயாநிதி,கலாநிதி,உதயநிதி என்போர் கவலைப்படத் […]

சுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரி

This entry is part 4 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

வீணை வாசிக்கும் யானைக் கை அம்மாள் ஒருத்தி ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தாள். கொஞ்சம் முரட்டுத்தனமான முகம். அம்மை வார்த்தது போல் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். அவளுக்கு இரண்டு பெண்கள். அவர்கள் இருவரும் ஒல்லியாக குச்சிபோல் இருந்தது ஆச்சர்யம். யானைக் கை அம்மாள் கொஞ்சம் தாட்டியானவள். முதல் மாடியில் குடியிருந்த அவர்கள் குடும்பம் எதற்கும் அதிகமாக இறங்கி வராது. சாயங்கால வேளைகளில் வீணை கற்றுக்கொள்ள பெண்டுகள் அங்கு குழுமும். வீணை சப்தம் மெலிதாகக் கேட்கும். கடைக்குப் […]

டிசைன்

This entry is part 5 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

சிவக்குமார் அசோகன் தனசாமியை சுப்பு செல்போனில் அழைக்கும் போது மதியம் மணி மூன்று இருக்கும். கீரை சாம்பாரும் வாழைக்கறியும் உண்ட மயக்கத்தில் சற்று அயர்ந்திருந்த தனசாமிக்கு முதலில் வேறு யார் போனோ ஒலிப்பது போல் இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு எழுந்தவர், திரையில் தெரிகிற சுப்பு என்கிற பெயரைப் பார்த்துவிட்டு சற்று அலுப்புடன் ‘இவனா..’ என்றபடி அழுத்தினார். “அலோ.. சொல்லுய்யா?”- கொட்டாவி விட்டார். “சாமி எங்கே இருக்கே…?” -சுப்புவின் குரலில் அவசரமும் ஆர்வமும் இருப்பதை தனசாமி சற்று […]

ஊறுகாய் பாட்டில்

This entry is part 7 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

சோழகக்கொண்டல் ஊறுகாய் பாட்டிலின் அடிப்புறத்தில் எப்போதும் தன் கையொப்பமிட்ட கடிதத்தை வைத்து அனுப்பிவிடுகிறது வீடு   மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும் வெளிக்கிளம்பி அறையெங்கும் தன் நினைவை ருசியை ஊறச்செய்தபடி இருக்கும்   அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என முந்நூறு மணி அடித்ததும் தரைதட்டுகிறது கரண்டி தானே திறந்துகொள்கிறது கடிதம்   பின்பு யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் ஒருங்கமைகிறது அறை சலவையாகின்றன சட்டைகள் எங்கிருந்தோ வந்துசேர்கிறது பணம் சேகரமாகின்றன மிட்டாய்கள்   சிக்கனவிலை பயணச்சீட்டுகள் அச்சாகி மேசைமேல் கிடக்கின்றன காவிரியில் […]

திரை விமர்சனம் வாலு

This entry is part 8 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

0 விலகிச் செல்லும் காதலியை விரும்ப வைக்கும் வித்தியாச இளைஞனின் கதை! ஷார்ப் எனப்படும் சக்திவேல் வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித் திரியும் அப்பா செல்லம். அவனது நண்பன் டயர் என்கிற கிருபாகரன். இந்தக் கூட்டத்தின் காமெடி பீஸ் குட்டிப் பையன். ஷார்ப் கண்டவுடன் காதலாகும் பிரியா மகாலட்சுமி, மாமன் மகன் அன்போடு திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவள். ஷார்ப் எப்படி பிரியாவின் மனதை மாற்றி, அன்பின் சம்மதத்தோடு அவளைக் கைப்பிடிக்கிறான் என்பது படம். சிம்புவுக்கு படங்கள் தாமதமானாலும், அவரது […]

மாயமனிதன்

This entry is part 10 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

காலையில் நான் செய்தித்தாளில் ஆழும் போது அவன் தென்படுவான் வாசிப்பில் எனக்குள் ஓடும் எதிர்வினைகளை அவன் பகடி செய்பவன் என் செயல்களின் வரிசையில் இயந்திரத்தனமும் அடிமைத்தனமும் அபூர்வ கிறுக்கு நொடிகளும் அவனுக்கு வேடிக்கையாய் குறுஞ்செய்திகள் கைபேசி அழைபுகள் இவற்றில் என் வேடங்கள் அபிநயங்கள் மீது அவன் விமர்சனம் என்னை விரக்திக்கே தள்ளும் எனக்கு முன்னால் தூங்கி நான் உறங்கும்போது எழுந்து நடமாடி பின் உறங்கி நான் விழித்த பின் எழுபவன் அவன் என் இடங்களை அவன் ஆக்கிரமிக்க […]

டெங்கூஸ் மரம்

This entry is part 11 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

– சேயோன் யாழ்வேந்தன் அதோ தூரத்தில் தெரிகிற டெங்கூஸ் மரத்தில் நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப் பார்த்தேன் என்றான் பக்கத்து வீட்டுப் பொடியன் – வெகு தொலைவிலிருக்கிற மரம் இன்னதென்றே தெரியவில்லை தவிரவும் டெங்கூஸ் என்றொரு மரமே இல்லையென்றேன் – டெங்கூஸ் மரங்கள் தூரத்து மலைகளில் மட்டுமே இருக்கின்றன அவற்றை யாரும் அருகினில் பார்த்ததில்லை டெங்கூஸ் என்றால் தூரம் என்றொரு பொருளும் உண்டு இன்னும் பெயரிடப்படாத ஒரு மொழியில் – அது டெங்கூஸ் மரந்தான் என்றான் மறுபடியும் – […]