சீதை, அமுதா, நஞ்சா, தீயா?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

ஜயலக்ஷ்மி   ராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் காப்பியம்.. காப்பியத்தலைவி சீதை. இத் தலைவியை அமுதமென்றும் நஞ்சு என்றும் தீ என்றும் கதை மாந்தர்கள் கூறுவதைப் பார்ப்போம். கவிஞன் இவளை அமுதம் என்றே வருணிக்கிறான். முதன் முதலாக சீதையை நமக்கு அறிமுகம் செய்கிறான். கன்னிமாடத்தில் தோழிகள் அவ ளைச் சூழ்ந்திருக்கிறார்கள். இவள் அழகை மன்மதனாலும் வரைய முடியாதாம். இவள் அழகை ஓவியத்தில் தீட்ட முடியாமல் அவன் இன்னும் திகைத்துக் கொண்டிருக்கி றானாம். மதனற்கும் எழுதவொண்ணாச் சீதையைக் கவிஞன் […]

தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி திட்டமிட்டு வகையாக வரிசைபிரித்து, அவரவர்க்கு ஏந்த அட்டைகளைக் கொடுத்து, வழி காட்டி அமரச் செய்தது, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அழைத்துக் சென்றது அவரவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கியது என ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக நடந்தேறின. உலகம் முழுக்க பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் இலக்கிய அமைப்புகள் பல்வேறு குழுக்களாக தங்களால் இயன்ற […]

வாழ்க்கை ஒரு வானவில் 16

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  சேதுரத்தினத்துக்குஒன்றும் விளங்கவில்லை. எனினும் ராமரத்தினம் கேட்டுக்கொண்டபடியே எதுவும் பேசாமலும், கேள்வி எதுவும் கேட்காமலும் அவனோடு நடந்தான். ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும்புரிந்தது. அந்த இரண்டு மனிதர்களையும் தாங்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்என்பது. “எம்புட்டுப்பணம்டா கிடைச்சிச்சு?” “ரெண்டுபவுன் போக ரெண்டு பவுன்தானே பாக்கி இருந்திச்சு? லீலாராம் சேட்டு பத்தாயிரம்குடுத்தான். பழகின சேட்டா இருந்ததாலே அம்புட்டுக் குடுத்தான்…” “அல்லாத்தையும்இன்னாடா பண்ணினே?” “ரெண்டுஒய்ன் ஷாப்ல எட்டாயிரம் கடன் இருந்திச்சில்லே? அத்த அடச்சேன். ஒரு ஆயிரம்செலவளிஞ்சு போயிடிச்சு. மீதி ஆயிரம் இருக்கு.” […]

தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

        தாம்பரம்.         சென்னை  கிறிஸ்துவக் கல்லூரி உலகப் புகழ் வாய்ந்தது!  இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்துவக்  கல்லூரி.          1837 ஆம் ஆண்டில் தாம்பரத்தில் 375 ஏக்கர் கொண்ட சேலையூர் காட்டில் இதை உருவாக்கினர் ஸ்காட்லாந்து திருச்சபையினர். டாக்டர் வில்லியம் மில்லர் என்பவர் இதன் துவக்க காலத்தில் அரும் பணியாற்றினார்.           ஆசியாவின் மிகப் பழமையானது சென்னை கிறிஸ்துவக் கல்லூரி.           மத வித்தியாசமின்றி அனைத்து பிரிவினருக்கும் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88

This entry is part 2 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Salute Au Monde) [Salute to World] வையகமே வந்தனம் உனக்கு [4] வியப்பான ஒரு பெருங்கோள்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      வால்ட் விட்மன் ! சொல் நீ காண்ப தென்ன ? யார் அவர் நீ வந்தனம் செய்வது ? அடுத்தடுத் துனக்கு வந்தனம் செய்பவர் யார் ? விண்வெளியில் உருளும் […]

நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

ஒரு அரிசோனன்     “பெரியதந்தையே!பீமன் வணங்குகிறேன்!” என்ற சொற்கள் என் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. குருதி கொதிக்கிறது. என் மக்கட் செல்வங்கள் நூறு பேரையும் தான் ஒருவனாகவே இரக்கமன்றிக் கொன்றவனல்லவா இவன்! அதுவும் என் கண்ணின் மணியான, என் உள்ளத்து ஒளியான, துரியோதனனை முறையற்று, தொடையில் தாக்கிப் பிளந்து, துடித்துடிக்க இறக்கவைத்த இந்தக் கடையனுக்கு என் ஆசி தேவைப்படுகிறதோ! என்னையும் அறியாமல் என் உதடுகள் பிரிந்து, நா சுழன்று, வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் என் செவிபறையைத் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.

This entry is part 2 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     சூரிய குடும்பப் பிணைப்பிலே சுற்றிடும் கோள்கள் தன்னச்சில் சுழலும் விந்தை யென்ன ? கோள்கள் சுழல்வதால் உயிரினம் நிலைத்ததா ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் நியதி என்ன ? கோள்கள் அனைத்தும் சீராகச் சாய்ந்து ஒரே திசை நோக்கிச் சுற்றுவ தென்ன ? பூமியில் மட்டும்  உயிரினங்கள் தாமாய்ப் பிறப்ப தென்ன ? புவிச் சுழற்சி ஓர் காரணமா ? யுரேனஸ் அச்சும் […]

பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

    1.மாநகரக் கோவர்த்தனள்   புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள் கடந்த ஆண்டு மழையோடு இந்த ஆண்டு மழையை ஒப்பிட்டு பேசிக்கொண்டார்கள் தார்ச்சாலையில் தவழ்ந்தோடும் தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தார்கள்   அப்போது யாரோ ஒரு பிச்சைக்காரி தன் பிள்ளைகளுடன் ஒண்டிக்கொள்ள தயங்கித்தயங்கி நெருங்கிவந்தாள் உடனே ஒருவன் கொஞ்சமும் தயக்கமின்றி கெட்ட வார்த்தைகளால் திட்டி விரட்டினான் […]

வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் […]

எலிக்கடி

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

குறிப்புப்புத்தகத்தை எடுத்தார் மாணிக்கம். கை மெல்ல உயர்ந்து உதட்டைத் தொட்டது. இது முத்தமா…மீண்டும் உதட்டருகே கொண்டு சென்று உதட்டை அதன் மீது அழுத்தினார் இது முத்தமா…பெண் உதடு பட்டால் மட்டுமே முத்தம். ஒரு வகைக் கிளர்ச்சியாகவே இருந்தது. அகால நேரத்தில் லிப்டை விட்டு வருபவர்கள் அதிசியப் பிறவிகள் என்று சிலர் நினைப்பர். மாணிக்கம் கூட அப்படி நினைத்தார். அகால நேரம் என்றால் இரவு, நடுநிசி என்றில்லை. ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரம். நல்ல வெயில் . நல்ல […]