தாமரைபாரதி அதீதன் சயனம் அதீதனுக்கென்று இருந்த அத்தனை உறவுகளையும் அள்ளிக் கொண்டு போனது மரணம் அழுதவர்களை புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் விம்மும் நெஞ்சோடு மலர் மாலைகளை தன் நெஞ்சோடு போரத்தியவர்களிடம் தனது துர்மரணத்தை எண்ணி அழாதீர் மரணம் முடிவல்ல ஒரு பயணம் வேறொன்றை நோக்கிய பாய்ச்சல் சிறு மாற்றம் என்றெல்லாம் தேற்றினான் யாரும் அமைதியுற வில்லை அவனுடைய சின்னஞ்சிறு ஒரே ஒரு சகோதரி அவனுடைய மருத்துவ உடைமைகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள் பல்லக்கு தூக்கிகள் வந்தனர் […]