திரு.அ.கணேசன் அவர்களுக்கு அஞ்சலி

This entry is part 6 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

19/08/2023 அன்று நள்ளிரவு கடந்து, 12.30 மணியளவில் (வயது 85) மறைந்த திரு.அ.கணேசன் அவர்களுக்கான எனது அஞ்சலிக் கட்டுரை இது, சம்பிரதாயமான இரங்கலைத் தெரிவிப்பதென்பது நம் குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்திற்கு நாமே இரங்கல் தெரிவிப்பது போன்ற அபத்தமான செயல்பாடாக ஆகிவிடும் என்பதால் இதனை ஓர் அஞ்சலிக் கட்டுரையாகச் சமர்ப்பிக்கிறேன். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினை உருவாக்கியவர்களுள் ஒருவரான திரு.அ.கணேசன் அவர்கள் அகில இந்திய நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் புரவலரும் ஆவார். “தோள் சீலைக் கலகம் […]

நாவல்  தினை              அத்தியாயம்    28

This entry is part 5 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

பிரதி நீலன் வைத்தியர் கைகளை ஒன்றோடொன்று இறுகப் பற்றி சிக்கிமுக்கிக் கற்களை நெருங்க வைத்துத் தேய்ப்பது போல் ஏழெட்டு முறை தேய்த்தார். விழித்து மூடிய இமைகள் மேல் வெதுவெதுப்பான உடல் சூட்டோடு  அந்தக் கரங்களை விரித்து வைத்து மலர்த்தினார்.  சுற்றுப்புறம் எங்கும் மூக்கைக் குத்தும் மருந்து வாடையும் இருளின் வாடையுமாக எங்கே தொடக்கம், எவ்விடம் முடிவு என்று புதிரானது. அவர் பெயர் நீலன் தான். யாரோ அவரை பிரதி நீலன் என்று பெயர் சொல்லச் சொல்கிறார்கள். ஆல்ட் […]

புலித்தோல்

This entry is part 4 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

வளவ. துரையன் என் நட்புக் கோட்டைக்குள்சில துரோகிகள்ஊடுருவி விட்டார்கள்.பசுத்தோல் போர்த்திய புலிகள்எல்லாம் அந்தக் காலம்.இப்பொழுதுபுலித்தோலைப் போர்த்தியபசுக்கள் உலவுகின்றன.ஆனால்பசுக்களின் பார்வையும்பண்பும் கொண்டதாகப்பச்சைப்பொய் பேசுகின்றன.பார்வையில் பாசிபோல்தெரிந்தாலும் விலக்கினால்பாதாளத்தில் சுறாக்கள்.குளக்கரையில் கசிவுஏற்படாமல் காப்பதிலும்கோட்டைச் சுவர்களில்விரிசல் விழாமல்பார்த்துக் கொள்வதிலும்தான்வாழ்க்கையின்சாமர்த்தியம்இருக்கிறதாம்.

ரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது

This entry is part 3 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

2023 ஆகஸ்டு 11 ஆம் தேதி ரஷ்யா நிலவு நோக்கி ஏவிய லூனா -25 நிலா தளச் சிமிழ். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள் முயலும் முதல் விண்வெளித் திட்டம். நிலாவின் தென் துருவத்தில் லூனா-25 நிலாசிமிழ் தடம் வைக்க வேண்டும், இந்தியச் சந்திரயான்-3 அதே தென் துருவப் பரப்பில் தடம் வைப்பதற்கு முன்னர்.   நிலாவின் தென் துருவப் பகுதியில் தான் பேரளவு நீர்ப்பனிப் பாறைகள், எரிசக்தி மூலக்கூறுகள். தனிமங்கள், தாதுப் பொருட்கள் இருக்கலாம் என்று இந்தியா, ரஷ்யா போட்டி போட்டுக் […]

தேசிய புத்தகநாள் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

This entry is part 2 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

சுலோச்சனா அருண் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 2023 தேசிய புத்தகவிரும்பிகள் தினத்தை ((National Book Lover’s Day)முன்னிட்டுக் கனடாவில் உள்ள ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ சர்வதேச ரீதியாகப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். புத்தகம் வாசிக்கும் தினத்தை முன்னிட்டு நிகழ்வில் பங்குபற்றிய அதன் அங்கத்தவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாடு, இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற இடங்களில் உள்ள வாசகர் வட்டத்தினரிடம் இந்த வாசிப்பு நிகழ்வு பரீட்சார்த்தமாக […]

780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது

This entry is part 1 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

பூகோளப் பூகாந்த துருவங்கள்புதிராய்த் திசைமாறும் !ஆமை வேகத்தில் வட துருவம்தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் !பூமியின் சுழற்சி அப்போதுஎதிர்த்  திசையில் ஓடுமா ?பரிதியின்  உதய திசை அப்போதுகிழக்கா ? மேற்கா ?உயிரினம்,  மனித  இனம்  என்ன வாகும் ?மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில்மனிதர் எறியப் படுவாரா ?சூழ்வெளி மண்டலம் முறிந்துபாழ்வெளி ஆகுமா ?நீர் மண்டலம் ஆவியாகிநிலம் பாலை ஆகுமா ? சூடேறிஉயிரினங்கள் தவிக்குமா ?பயிரினங்கள்பசுமை இழக்குமா ?அரை மில்லியன் ஆண்டுகட்குஒருமுறை நேர்ந்திடும்துருவத் திருப்பம்,பிறகு மீளுமா ?இயற்கை நியதி முறை […]