10 Day Solo Art Exhibition at Vinnyasa Premier Art Gallery, Chennai on September 1, 2011

This entry is part 6 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

Dear Friends, “Abstraction indicates a departure from reality in depiction of imagery in art. This departure from accurate representation can be only slight, or it can be partial, or it can be complete. The method of painting is the natural growth out of a need. I want to express my feelings rather than illustrate them. […]

குற்றமுள்ள குக்கீகள் (cookies)

This entry is part 5 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

உனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து வாசித்துப்பார்த்ததில் கட்டுப்பட்டித்தன யுவதியின் சொல்லாடல்கள் மட்டுமே கிடைத்தன உனது சமூக வலைத்தளங்களின் பகிர்வுகளில் எந்த சுவாரசியமுமற்ற பொதுவான விஷயங்கள் மட்டுமே கிடைத்தன எனக்குள் அழிக்க இயலாத குற்றமுள்ள குக்கீகளாய் (cookies) இவையனைத்தும் மண்டிக்கிடக்கின்றன எப்போதும். […]

சின்னஞ்சிறிய இலைகள்..

This entry is part 4 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

* பிளவுண்ட கரிய அலகில் இரைப் பற்றுதல் துள்ளத் துடிக்க இறுக்குகிறது உயிரை உயிர் வடிவம் கனமெனவோ கனமற்றோ அசைகிறது பசியின் வயிற்றில் மரக்கிளையில் துடிக்கும் சின்னஞ்சிறிய இலைகள் மெல்ல மெல்ல இழக்கின்றன தம் நிறத்தை.. ***** –இளங்கோ

ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்

This entry is part 3 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும் மும்பை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. பேரணி, போராட்டம், உண்ணாவிரதம் என்றாலே மும்பையில் ஆசாத் மைதானம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். இந்திய சுதந்திர போராட்டத்தின் குரல் ஒலித்த ஆசாத் மைதானம் இன்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மையமாக மாறி இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று பதாகைகளில் காந்தியும் பகவத்சிங்கும் அருகருகே இருந்து வாழ்த்த மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது. நேற்று (18/8/2011)நானும் என் தோழியர் மலையாள எழுத்தாளர் […]

என் பாதையில் இல்லாத பயணம்

This entry is part 1 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அப்பாவிடம் அடிவாங்கி அழுது விசும்பி சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த நாட்களில் எல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே கனவுகள் வந்திருக்கின்றன. எனினும் பள்ளி நாட்களில் இன்பச்சுற்றுலாவிற்கு ஏங்கிய போதெல்லாம் ஒருபோதும் வாய்த்ததில்லை பயணம். ‘ஒருதலை ராகத்’தில் கிளர்ந்த ரயில் காதலும் அப்பாவின் அதிகாரத்தால் தடம் புரண்டு போயிற்று. அப்பாவின் ‘புதிதான’ பழைய சட்டைகள் அணிந்தே பழகிப் போனதில் நான் நானாகவுமின்றி அப்பாவாகவும் இல்லாது போயிற்று வாழ்க்கைப் பயணமும். __ ரமணி

எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)

This entry is part 47 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி) சாகித்ய அகாதமி விருது பெற்ற, சிறந்த திறனாய்வாளர் திரு.சிவசங்கரன் அவர்களுடன் ‘தாமரை’ இதழின் ஆசிரியராக அவர் இருந்த போது எனக்கு ஏற்பட்ட தொடர்பு இன்று வரை கடிதம் மூலம் தொடர்கிறது. அவரும் அவரது குருநாதரான அமரர் வல்லிக்கண்ணன் அவர்களும் தங்களுக்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் முத்து முத்தான கையெழுத்தில் தாமே தம் கைப்பட பதில் எழுதும் பண்பிற்காக பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டவர்கள். இன்று முதுமையினாலும் உடல் நலிவினாலும் தி.க.சி […]