பி.ஆர்.ஹரன் ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் பயன்பாட்டிலிருந்து யானைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறிவருகிறார்கள். மறுபக்கம், கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள் பயன்படுத்தப்படுவது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்காமாகும் என்றும், யானைகளை கோவில்களிலிருந்து விடுவிப்பது அந்தப் பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். யானைகளின் நலனைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஹிந்து கோவில்களையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் சிறுமைப்படுத்துகிறார்கள் […]
பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற – கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. ஓவொரு மனிதனும் தனித்தவன் என்பதுபோல அவனுள் உறைகிற கதைகளும் நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து, பொழுதுசார்ந்து தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. புனைவுகளுக்குக் கவர்ச்சியைத் தருவது […]
(சர் லட்சுமணசாமி முதலியார்) மருத்துவப் படிப்பில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில், பொது மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பாடங்களுடன் இன்னொரு முக்கிய பாடம் மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும் ( Obstetrics and Gynaecology ). இதை சுருக்கமாக O & G என்போம். இதையும் இரண்டு வருடங்கள் படித்தாகவேண்டும். இதுவும் பொது மருத்துவம், அறுவை மருத்துவம் போன்று மூன்று பிரிவுகளில் இயங்கியது. எனக்கு மூன்றாம் பிரிவு ( ஓ ஜி 3 ) கிடைத்தது. […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ +++++++++ கடந்த பத்து ஆண்டுகளாய் அடிப்படையாய் நாமறிந்தது நான்கு அகில விசைகள். ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த, தளர்ந்த அணுக்கரு விசைகள். புதிய கண்டுபிடிப்பு புரட்சிகரமான ஐந்தாம் விசை ! கருமை விசை ! அது கருமை ஒளித்திரளா அன்றி கருந்துகளா ? பிண்டத் துகளா அன்றி விசை தூக்கும் துகளா ? ஹிக்ஸ் போஸானுக்குப் பின் கண்ட ஒட்டு விசைத் துகள் அது […]
ஆறு கலை , இலக்கிய அரங்குகளில் 27-08-2016 ஆம் திகதி ஒன்றுகூடல் ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் – உலகப்பொது மனிதன் முருகபூபதி ( துணைத்தலைவர் – அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்) அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் வருடந்தோறும் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் […]
இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் அல்ல. துடிப்புள்ள பேனாக்கள் இதயங்கள் தூளாகிக்கிடக்கும் அலங்கோலம் இது. எத்தனைப்பாட்டுகள்? எத்தனைக்கவிதைகள்? திரைப்பட இருட்டுக்குள் இப்படியொரு “சைக்கடெலிக்”வர்ண வெளிச்சங்களை இவன் ஒருவனால் மட்டுமே தர முடியும். இசைக்கருவிகள் இனிமையைப் பிழிந்து தரும்போதெல்லாம் இதயங்களின் அந்த ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் அறை ரகசியங்களின் மதுவை வடித்துத் தரும் அவன் உயிரின் ரசம் அந்தப்பாடல்கள். இசை அமைப்பாளர்களுக்கு ரத்னக்கம்பள […]
சாபு சைமன் ஒரு கவிதைப் புத்தகம் தொலைந்து போனது. இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளி கொஞ்சம்தான் என்று மீண்டும் ஒருமுறை வாழ்க்கையால் எழுதித் தொலைந்து போனது கவிதை. தான் பிரசவித்த வரிகளுக்கு விலாசம் கொடுத்துவிட்டு முகவரி தெரியாத ஊருக்குக் குடிபெயர்ந்தான் பிரம்மா. கம்பி அறுந்தது யாழ். மீட்டிய விரல்கள் நேற்றைய நினைவுகள். மீண்டும் ஒருமுறை வரிகளின் இடையே பிரம்மாவைத் தேடி நிஜங்களின் வலிகளோடு நடந்து நீங்குகிறோம். – சாபு சைமன்.
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற நம்பிக்கைகள் பயன்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனமுறிவு ஏற்பட்டு, சோம்பேறிகளாக வாழாமல் இருப்பதற்கு இந்நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுகின்றன. வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்குமானால் ஓய்வின்றி மனிதன் உழைப்பான். ஒரு சமுதாயத்தில் இருக்கும் நம்பிக்கைகள் அச்சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் வளர்ச்சி நிலையையும் அறிவதற்குப் பெரிதும் உதவி செய்யும். சிந்தாமணியில் பலவகையான […]
விஜய் ராஜ்மோகன் டிவியில் சாக்ஷி மாலிக்கின் மல்யுத்தத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த மல்யுத்தத்தை பார்க்கும்போது நண்பர் ’திருப் மேனன்’ ஒரு மாலை வேளையில் கூறிய ஒரு சம்பவம்/கதை நினைவுக்கு வந்தது. கேரளாவின் ஒரு மூலையில் எங்கோ காடு, மலைகளுக்கு மத்தியில் இருந்த காளி கோவில் அது. நண்பர் அங்கே பூசாரியாக இருந்தார். நிறையப் படித்தவர், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் புலமை படைத்தவர். பி.எச்.டி முடித்து புரொபசர் ஆகிவிடுவார் என்று குடும்பத்தார் எதிர்பார்த்திருக்க, ஆன்மீகப் பற்று ஏற்பட்டு குருவின் உத்தரவின் […]
முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல… நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை ஒவ்வொன்றையும் கருத்தரித்தவள் நீயென்று… – முருக மணிகண்டன்.