பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

This entry is part 16 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்   பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையெனத் திறக்கும் கண்ணீர் ..மனத்தினில் கொதிக்கும் செந்நீர் உடைந்திடும் இளமைக் கட்டும் ..உடையினில் வேடம் மட்டும்! வாயினைக் கட்டிப் பூட்டி …வயிற்றினைப் […]

கூடு

This entry is part 15 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

    புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம்.   ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள்.   நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட உணவு நான் நீ என்ற போட்டியால் நாய்க்குப் போனது.   புல் தயங்குகிறது விடியலில் பனித்துளிக்கு விடைகொடுக்க.   நீர் ஊறுவதற்கு முன்பே நரபலி கேட்கிறது ஆழ்துளைக் கிணறு.   சாளரம் வழியே சவஊர்வலக் காட்சி எத்தனைப் பூக்கள் சிதைந்து அழியும் செருப்புக்கால்களால்.   அடுக்களையில் வியர்வை வழிய சமையல் செய்தவள் சாப்பிடுவதென்னவோ மிச்சத்தைத் […]

தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.

This entry is part 13 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் பழைய பேப்பர்கள் போவது போல் கூட‌ போவதில்லை கிலோவுக்கு என்ன விலை? அவர்கள் ரத்தமும் சதையும் இன்று கருப்புப்பண ஷைலக்குகளின் தராசு தட்டில். சுதந்திரம் என்று மொழி பிரித்தோம். அது நம் விழி பறித்தது. சுதந்திரம் என்று ஒரு மொழி ஆக்கினோம். அதன் சினிமாப்பாட்டுகள் மட்டுமே இனித்தன. நசுங்கிக்கிடந்தவர்களுக்கு நலங்கள் செய்தோம். அது வெறும் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24

This entry is part 12 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

சிந்தியாவின் வீட்டிலிருந்து திரும்பிய தீனதயாளன் தமக்குக் கதவு திற்நத ராதிகாவை ஆழ்ந்து பார்க்க இயலாதவராய், செயற்கைத்தனமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தம் பார்வையை உடனே நகர்த்திக்கொண்டு அப்பால் நகர்ந்தார். ‘இந்த அப்பா  சிந்தியாவின் வீட்டுக்குத்தான் போய்விட்டு வருகிறார்.  இங்கு வந்தது பற்றி அவளுடன் சண்டை போடுவதற்காகப் போயிருந்திருப்பார்.’ மகள் தம்மை ஏளனமாகப் பார்ப்பது போல் அவருக்குத் தோன்றியது.  சில குடும்பங்களில், தகப்பன்மார்கள் தங்களின் ஒரு பார்வைக்கே உறைந்து போகிற அளவுக்கு ஓர் அச்சத்திலேயே மனைவி-குழந்தைகளை ஏன் வைத்திருக்கிறார்கள் […]

தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !

This entry is part 11 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்னுடல் உறுப்புகள் எல்லா வற்றிலும் ஊதுவது யார் புல்லாங் குழலை ? உள்ளம் அலை மோதும் களிப்படைந்தும், கவலை யுற்றும் ! மலரும்  என்னுடல் இன்னிசை  யால், மனம் பொங்கி நிரம்பும், சுற்றி உள்ள காற்றில் புத்துணர்ச்சி அடைந்து மிதக்கும் ஒரு நறுமணம்  !   உள்ளத்தின் உள்ளே திடீரென நம்பிக்கை எழுந்திடும் எனது தியாகம் பரிவான எரி […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)

This entry is part 9 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

எங்கும் கடவுளைக் காண்கிறேன் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காதினில் கேட்கிறேன், கடவுளைப் பார்க்கிறேன், நான் ஒவ்வோர் வடிவிலும் ! கடவுள் அற்ப மில்லை என ஆயினும் புரிந்து கொள்கிறேன் ! என்னை விடப் பெரிய அதிசயப் பிறவி ஒருவன் இல்லை என்பது கூடப் புரிவ தில்லை எனக்கு ! இன்றை விட உன்னத மாக இறைவனைக் காண நான் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 21

This entry is part 8 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                           E. Mail: Malar.sethu@gmail.com 21.உலகிலே​யே அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புக​ளைக் கண்டுபிடித்த ஏ​​ழை………….. என்ன…? நம்ம நண்பர் இன்னும் வராம இருக்காரு….ஒரு​வே​ளை அவருக்கு ஒடம்புக்கு எதுவும் முடியாமப் ​போச்​சோ..​சே..​சே…அப்படி​யெல்லாம் இருக்காது…எதுக்கும் அவரு வர​லைன்னா நாம​போய்ப் பாத்துட்டு வரு​வோம்…அட என்னங்க இப்படி ஒக்காந்திருக்கீங்க… என்ன ஒடம்புக்கு சுகமில்​லையா?..அப்படி​யெல்லாம் ஒண்ணுமில்​லையா? ஓ….ஓ….ஓ..​​​​​ஹோ..​யோசிச்சிக்கிட்டு இருந்ததுல ​நேரம்​ போன​தே ​தெரிய​லைங்களா? […]

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34

This entry is part 7 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய அகலுக்கு எண்ணை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒருக்களித்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. காய்ச்சலின் வீச்சு அதிகமாயிருந்தது. தியானத்திலிரிந்து விழித்தெழுந்த புத்தர் கண்கள் பழகச் சில நொடிகள் காத்திருந்தார். மங்கலான வெளிச்சம் வந்த இடம் குடிலின் வாயில் என்று பிடிபட்டது. ஆனந்தனின் அரவமே இல்லாதிருப்பது வியப்பாயிருந்தது. குடிலுக்கு வெளியே சென்று இரண்டு மூன்று குடில்களுக்குப் பொதுவாக […]

ஜீவி கவிதைகள்

This entry is part 6 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்       ‘வானம் தொலைந்து விடவில்லை’ என்ற கவிதைத் தொகுப்பை த.மு.எ.ச. சார்ந்த ஜீவி எழுதியுள்ளார். இதற்கு ‘சுகத்திற்காக… கவிதைக்காக’ என்ற தலைப்பில் கந்தர்வன் சிறிய அணிந்துரை தந்துள்ளார். உரைநடையை இவ்வளவு அழகாக எழுத முடியுமா? என்று வியப்பு தோன்றுகிறது. அம்மாவின் பொறுப்புணர்ச்சி, கிராம வாழ்க்கை அழகுடன் போட்டி போடுகிறது. கந்தர்வனின் தமிழ் விரல் நெருடலில் சிக்கிய பட்டுத்துணி போல நேர்த்தியாக உள்ளது.       ‘இந்த ஒரு மாதத்தில் ரெண்டாயிரம் தடவையாவது அம்மா […]

பிரேதத்தை அலங்கரிப்பவள்

This entry is part 5 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  நடேசன்   உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது  உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்;பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல்  மாதிரியாக  நாலு ஆலமரங்கள் […]